ரகசியமானது காதல்ரகசியமானது காதல்
மிக மிக
ரகசியமானது காதல்

முகவரி சொல்லாமல்
முகம்தனை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்
சுவாரஸ்யமானது காதல்
மிக மிக
சுவாரஸ்யமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல்
கனமானது
சொல்லச் சொன்னாலும்
சொல்வதுமில்லை
மனம் ஆனது

சொல்லும் சொல்லை
தேடித்தேடி
யுகம் போனது
இந்த சோகம் தானே
காதலிலே சுகமானது

வாசனை வெளிச்சத்தை போல
அது சுதந்திரமானது அல்ல
ஈரத்தை இருட்டினை போல - அது
ஒளிந்திடும் வெளிவரும் மெல்ல

(ரகசியமானது)

கேட்காமல் காட்டும்
அன்பு உயர்வானது
கேட்டு கொடுத்தாலே
காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத்தானே
பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும்
பொருளும் அல்ல இயல்பானது

நீரினை நெருப்பினை போல
மிக தொடுதலை புரிவதும் அல்ல
காதலும் கடவுளைப்போல
அதை உயிரினில் உணரனும் மெல்ல

(ரகசியமானது)

Posted in Labels: |