ஜூனியர் குசும்பன் பராக்!
Posted On Tuesday, October 20, 2009 at at 5:49 AM by மங்களூர் சிவா

தாய் சேய் இருவரும் நலம் என அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் குசும்பா.
அன்புடன்
மங்களூர் சிவா & பூங்கொடி
சரிங்க மிஸ்
Posted On Thursday, June 11, 2009 at at 11:52 PM by மங்களூர் சிவாசாப்பிட்டு தூங்காம, இண்டர்நெட்டு அது இதுன்னு டைம் வேஸ்ட் பண்ணாம நான் சொன்ன வேலை எல்லாம் சாயந்திரம் வருவதற்குள்ள முடிச்சு வைச்சிருக்கணும். இல்லைனா நான் பேசமாட்டேன் இந்த டஸ்டர்தான் பேசும்.
பி.கு1 : தங்கமணிக்கு வேலை கிடைத்துள்ளது. லெக்சரராக மூன்று நாட்களாக மங்களூரில் உள்ள ஒரு கல்லூரிக்கு சென்றுவருகிறார்.
பி.கு2 : லேபிளில் குறிப்பிட்டுள்ளவை கற்பனையே.
திருமண நாள் வாழ்த்து
Posted On Thursday, April 16, 2009 at at 7:30 PM by மங்களூர் சிவா
குசும்பா, உன் வாய்க்கொழுப்பை எல்லாம் வண்டியிலேயே விட்டு விட்டு வீட்டிற்குள் நுழைந்து இப்படி கையைக் கட்டி நடித்தே ஒரு வருடம் கடந்துவிட்டாய். இந்த ஓராண்டை விட இன்னும் அதிக மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் நீ இன்னும் நூறாண்டுகள் கடக்க எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். குசும்பனுக்கும் சகோதரி மஞ்சுவிற்கும் இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்...!
மங்களூர் சிவா & பூங்கொடி
காதலர்தின வாழ்த்துக்கள்
Posted On Friday, February 13, 2009 at at 3:14 PM by மங்களூர் சிவாசர்க்கரை பொங்கல் செய்(த)முறை
Posted On Wednesday, January 14, 2009 at at 12:00 AM by மங்களூர் சிவாசர்க்கரை பொங்கல்
தேவையான பொருட்கள்:
அரிசி = 1 பங்கு
வறுத்த பாசி பயறு = 1/3 பங்கு
சர்க்கரை = 1 பங்கு
தேங்காய் பால் = 2 பங்கு
நீர் = 3 பங்கு
முந்திரி பருப்பு = 18 சரியாக (கூடவோ குறையவோ கூடாது)
உலர்ந்த திராட்சை = 2 மே.க
செய்முறை:
1. பொங்கல் பானையில் நீரை விட்டு கொதிக்க விடவும். நீர் கொதித்து வரும் போது அதில் பாலை சேர்க்கவும்.
2. பால் பொங்கியதும், ஏற்கனவே சுத்தப்படுத்தி, நீரில் கழுவிய அரிசியை போடவும். அரிசி அரை பதத்திற்கு வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்க்கவும். [சர்க்கரையை நீரிலோ பாலிலொ கரைத்துவிடுவது நல்லது] பாலும், சர்க்கரையும் சேர்ந்த பின்னர் அடுப்பின் வெப்பத்தை குறைக்கவும். தீய்ந்து போவதற்கு சாத்தியங்கள் அதிகம். ஆகவே அடிக்கடி அகப்பையால் கிளறிவிடவும்.
3. அரிசி நன்றாக வெந்ததும், அதில் நெய்யையும் முந்திரி & உலர்ந்த திராட்சையும் சேர்த்து கிளறி அடுப்பின் இருந்து இறக்கவும்.
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
Posted On Wednesday, December 31, 2008 at at 4:21 PM by மங்களூர் சிவாஇனிய
ஆங்கில புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.
வாட் எவர் ஹாப்பன்ஸ் லைஃப் ஹாஸ் டு கோ ஆன்
Posted On Sunday, November 23, 2008 at at 10:31 AM by மங்களூர் சிவாதலைப்பிற்கான காரணம் / அர்த்தம் அதிகம் பேருக்கு தெரிந்திருக்கும் என நம்புகிறேன். புரியாதவர்களுக்கு பதிவில்.
போன வாரம் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் நானும் மனைவியும் கூர்க் சென்றிருந்தோம். க்ளைமேட் மிகவும் அருமையாக இருக்கிறது. நண்பர்களுக்காக சில போட்டோக்கள் மட்டும் ஆர்குட்டில் இணைத்திருக்கிறேன்.
பகல் கொள்ளை - பகல் கொள்ளை அப்படி என்று கேள்விப்பட்டிருப்பீர்கள் அது என்ன என்று தெரியவேண்டும் என்றால் ஒருமுறை க்ளப் மகிந்த்ரா ரிஸார்ட்டில் தங்கி வரவும்.
பல விமர்சனங்களை படித்த பின்பும் கடந்த செவ்வாய்கிழமை வாரணம் ஆயிரம் படம் போய் பார்த்தோம். இருட்டாக மிலிடரி சீன் வரும் போதெல்லாம் (மணிரத்னம் பட எஃபக்ட்) காதலில் விழுந்தேன் படம் கழுத்தை அறுத்ததை போல் ஆகிவிடக்கூடாதே என்ற பயம் இருந்துகொண்டே இருந்தது.
சில பதிவர்கள் பயமுறுத்திய அளவு படம் மோசமாக இல்லை. படம் நன்றாகவே இருந்தது. படத்தில் ஆங்கில, இந்தி கலப்பு மிக மிக அதிகம். சமீரா ரெட்டிக்கு மேக்கப் நன்றாக இருக்கிறது பளிச் என இருக்கிறார், அப்படியே ரம்யாவுக்கும் மேக்கப் கொஞ்சம் போட்டிருக்கலாம். சமீரா ரெட்டிக்கு பதில் நயந்தாராவே போட்டிருக்கலாம் என மனைவியிடம் சொன்னதுக்கு தின்பதற்கு கொடுத்த இரண்டு பிஸ்கட்களையும் கையிலிருந்து பிடுங்கிக்கொண்டுவிட்டாள் :((
சூர்யா மிகவும் மெனக்கெட்டு மிகப்பிரமாதமாக செய்திருக்கிறார் குறிப்பாக பள்ளி மாணவனாக வரும் காட்சிகளில் கணாகாணும் காலங்கள் பார்ப்பது போன்ற எஃபக்ட்.
ட்ரெய்னில் சமீராவை பார்த்ததும் சூர்யா செய்யும் குறும்புகள் மிக இனிமை.
மற்றபடி படத்தின் தலைப்பிற்கும் படத்திற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை.
பதிவின் தலைப்பு படத்தில் வரும் டயலாக்.
* * * * * * * * * * *
நாளொரு சட்னியும் தினமும் அதே இட்லியுமாக வாழ்க்கை இனிமையாக போய்க்கொண்டிருக்கிறது. (பதிவின் தலைப்பிற்கும் இட்லிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. எங்கு வேணும்னாலும் துண்டு போட்டு தாண்ட தயார்)
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
பை
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Posted On Saturday, October 25, 2008 at at 7:23 PM by மங்களூர் சிவாநண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
மங்களூர் சிவா
”என்னமோ புதுசு புதுசுசா செஞ்சு கலக்குற கண்ணு”
Posted On Tuesday, October 21, 2008 at at 10:55 AM by மங்களூர் சிவா
”என்னமோ புதுசு புதுசுசா செஞ்சு கலக்குற கண்ணு”
நண்பா இது என்னன்னு நீ சொல்லலை இருந்தாலும் நீ சொன்னா மாதிரியே சொல்லி வெச்சிருக்கேன் இதோட பின்விளைவுகள் மத்தியானம்தான் தெரியும்னு நினைக்கிறேன்.
சினிமா சினிமா
Posted On Saturday, October 18, 2008 at at 7:22 PM by மங்களூர் சிவாமக்களே என்னைய யாரும் மறந்திடலையே??. குடும்பஸ்தன் ஆகீட்டேன் அதனால முன்ன மாதிரி அடிக்கடி மொக்கைபோட முடியலை அதுதான் லேட்டு.
தொடருக்கு அழைத்த மை ப்ரெண்ட் & ராப் -க்கு நன்றி.
1.அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
எங்க கிராமத்துல எதாவது விசேஷம்னா டெக், காசட் வாடகைக்கு எடுத்துகிட்டு வந்து படம் போடுவாங்க அப்படி பாத்ததுண்டு ஏழு அல்லது எட்டு வயசு இருக்கலாம். வீட்டுல ரொம்ப நேரம் பாக்க விடமாட்டாங்க ரொம்பா ஸ்ட்ரிக்ட்டு அதனால அந்த வயதில் முழுசா படம் பாத்ததா நினைவில்லை.
ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
ராகவேந்திரா அப்படின்னு நினைக்கிறேன். பக்கத்து வீட்டுல இருக்கவங்க எல்லாம் சாமி படம் நல்லா இருக்குன்னு சொல்லி எங்க அம்மா கூட்டிகிட்டு போன முதல் & கடைசி படம் இதுதான்.
இ. என்ன உணர்ந்தீர்கள்?
இண்டெர்வல்ல சாப்பிட்ட பஜ்ஜியில காரம் அதிகம்னுதான்
:))
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
காதலில் விழுந்தேன். தங்கமணியுடன் பார்த்த முதல் திரைப்படம். இந்த படத்துக்கப்புறம் எந்த படத்துக்கு கூப்பிட்டாலும் வரதுக்கு ரொம்ப யோசிக்கிறா ஓவரா பாதிச்சிடிச்சி போல
:))
3.கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தலை ஜே.கெ.ரித்தீஸின் நாயகன் பாதி சரோஜா பாதி பார்த்தேன் டவுன்லோட் செய்து என்னத்த உணரறது கொட்டாவி கொட்டாவியா வந்தது.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
சேது, அன்பே சிவம், முகவரி இன்னும் நிறைய இருக்கு மறந்து போச்சு.
5.உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?
பேர மாத்து ஊரை மாத்து அப்படின்னு இவங்க அடிக்கிற அரசியல் காமெடிகள், காவிரி - ஒகேனக்கல் பிரச்சனைக்கு நடிகர்கள் அடிக்கும் காமெடி ஸ்டண்ட்கள், நாலு படம் ஹிட்டாகறதுக்குள்ள அடுத்த சி.எம் நாந்தான்னு இவனுங்க செய்யும் அலப்பரைகள் சுவாரஸ்யமானவை மிகவும் பிடிக்கும்.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
சில நல்ல சீன்கள் வரும்போது மட்டும், ஒரு பூவை க்ளோசப்பிலோ அல்லது ஒரு புலி மானைத் துரத்தி கொல்வது போலவோ காட்டி நம்மை ஏமாற்றும் அந்த தொழில் நுட்பம் என்னை மிகவும் தாக்கும். (நன்றி ச்சின்ன பையன்).
6.தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
குமுதம், விகடனில், தமிழ்மணத்தில் வரும் சினிமா பற்றிய பதிவுகள் படிப்பதுண்டு.
7. தமிழ்ச்சினிமா இசை?
தமிழ் சினிமா பாடல்கள் மிகவும் பிடிக்கும் அதை சத்தமாக தெருவுக்கே கேட்கும்படி அலறவிட்டு கேட்பது எனக்கு சிறுவயதிலிருந்தே மிக மிக பிடிக்கும். சிறுவயதில் அதாவது ஒன்பதாவது பத்தாவது படிக்கும் காலத்தில் இதுக்காக பயங்கரமா திட்டெல்லாம் வாங்கியிருக்கேன் வீட்டுல.
8. அ. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?
மங்களூர் வந்த புதிதில் கன்னடம் கற்பதற்காக ஏகப்பட்ட கன்னட படங்கள் பார்த்ததுண்டு இப்பல்லாம் அந்த தப்ப செய்யறதில்லை எத்தனை படத்ததான் தமிழ்ல பாத்துட்டு அதையே கன்னடத்துல பாக்குறது!?!? :)) , ஹிந்தி காலேஜ் படிக்கும்போது ரங்கீலாவில் ஆரம்பித்து ஏகப்பட்ட படம் பார்த்திருக்கிறேன் பார்த்து வருகிறேன். அப்புறம் ஆங்கிலப்படங்கள் & விஜய் டிவியில் வரும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ஆங்கில படங்கள். சில கொரியன் படங்கள்.
8. ஆ. அதிகம் தாக்கிய படங்கள்?
பிடித்த படங்கள்னு சில சொல்லலாம் தாக்கிய படங்கள்னு சொல்றது அதிகம்தான். ஹிந்தில தில்வாலே, கபிகுஷிகபிகம், முன்னாபாய், லஹேரகஹோ முன்னாபாய், சர்கார், இன்னும் நிறைய.
ஆங்கில படங்களில் ஜேம்ஸ்பாண்ட் படம்லாம் தேடித்தேடி பார்த்ததுண்டு கேசினோ ராயல் வரை. அதைத்தவிர பேஸ் ஆஃப், ஜீமான்ஜூ, ப்ரூஸ்லி & ஜாக்கி சான் படங்கள், இன்னும் நிறைய கிடைக்கிற டிவிடி எல்லாம் பார்ப்பேன்.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
விவேக் காமெடி ஒன்னு வரும் எனக்கு ஐ.ஜிய தெரியும் ஆனா அவருக்குதான் என்னைய தெரியாது அப்படின்னு அந்தமாதிரிதான், எனக்கு நயந்தாராவ தெரியும் ............. சினிமா உலகுக்கும் நமக்கும் அம்புட்டுதான் சம்பந்தம்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஒகேனக்கல், காவேரி, அடுத்த சி.எம் , பி. எம்னு எந்த காமெடிக்கும் குறைவில்லாம ஜேஜேன்னு எப்பவும் போல இருக்கும்.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
நான் பெரும்பாலான சமயம் பார்ப்பது செய்தி சேனல்கள். சன் மியூசிக் பார்ப்பதுண்டு அதில் பழையபாடல்களே திரும்ப திரும்ப வரும் அதனால் எனக்கு ஒன்னும் பெரிய பாதிப்பா இருக்காது.
நம் மக்கள் சோறே இல்லைன்னாலும் இருந்திடுவாங்க சினிமா இல்லாம இருக்க மாட்டார்கள். குருவி தாங்கமுடியலைன்னாலும் திட்டிட்டு போய் குசேலன் பார்ப்பார்கள் அதையும் தாங்கமுடியலைன்னாலும் அப்போதைக்கு திட்டிட்டு அடுத்து எந்த அட்டுப்படம் வந்தாலும் பார்ப்பவர்கள் ஆச்சே :))
இந்த தொடரை தொடர அழைப்பது
யார் யார் விருப்பம் இருக்கோ அவங்க எல்லாம் எழுதுங்க ஆப்பீஸர்ஸ்.




