கால ஓட்டத்தில் காணாமல் போனது...

கால ஓட்டத்தில் காணாமல் போனவற்றில் ஏதாவது ஒன்றைப்பற்றி
பதிவிடுங்களேன். அப்படின்னு சுரேகா கூப்பிட்டிருக்காரு.
தலைவர் சொல்லி கேக்காம இருக்க முடியுமா!! :)

இதோ என் பதிவு.

சைக்கிள் :

அப்பிடியே ஒரு 12 வருசம் பின்னோக்கி போங்க 96களில் நான் சென்னையில் இருந்த காலம் எங்கு செல்வதாக இருந்தாலும் சைக்கிள்தான். அப்போது நான் மடிப்பாக்கத்தில் தங்கி இருந்தேன். வேலை பார்த்தது கோட்டூர்புரத்தில் ஏறக்குறைய பத்திலிருந்து பணிரெண்டு கிலோமீட்டர் இருக்கும். வேளச்சேரி தரமணி டைடல்பார்க் மத்திய கைலாஷ் வழியா கோட்டூர்புரம் செல்வேன். அங்கு வேலை முடிந்ததும் அங்கிருந்து நுங்கம்பாக்கம் வீட் க்ராப்ட்ஸ் சாலையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மையத்திற்கு , கம்ப்யூட்டர் படிக்க போவேன் மாலை 6.30ல் இருந்து 8.00 மணி வரை கம்ப்யூட்டர் வகுப்பு. வேலை முடிந்து நுங்கம்பாக்கம் செல்லும்போது கஷ்டம்லாம் ஒன்றும் தெரியாது ரொம்ப ஜாலியாதான் இருக்கும் கலர்ஃபுல்லான டைம் வேறு :) . ஆனால் கம்ப்யூட்டர் வகுப்பு முடிந்ததும் N0n stop நுங்கம்பாக்கம்-ல் இருந்து மடிப்பாக்கம் வரை சைக்கிள் மிதிக்கணும் ரூட் எல்லாம் சரியாக நினைவில்லை மறந்து போச்சு. குறைஞ்சது இருவது கிலோமீட்டராவது இருக்கும். இன்னைக்கு நினைத்துக்கூட என்னால பார்க்க முடியாது. மோட்டார் சைக்கிளில் செல்வதற்கே டயர்டா இருக்குன்னு யோசிக்கிற ஆளா மாறிப்போயிட்டேன், ஆனா அந்த காலத்தில் சைக்கிளில் போய் வந்திருக்கிறேன். அதுவும் மதியத்துக்கு வீட்டுல இருந்து கட்டி எடுத்துகிட்டு போற டிபன்பாக்ஸ் சாப்பாடு அவ்ளோதான் அந்த காலத்துல எல்லாம் நினைச்ச நேரத்துக்கு நினைச்சதை வாங்கி சாப்பிடற அளவு சம்பளமும் கிடையாது.

போன் டைரி:

அதே 96களில் சென்னையில் இருந்தது ஸ்கைசெல் மற்றும் ஆர்பிஜி இரண்டு செல்போன் சேவைகள் மட்டுமே இன்றைக்கு மாதிரி குப்பை பெறுக்குகிறவன், தள்ளுவண்டிகாரனிடமெல்லாம் செல்போன் பார்க்க முடியாத காலம் இன்கமிங் மற்றும் அவுட் கோயிங் எல்லாம் மிக அதிகமான விலையில். எனக்கு தெரிந்த எல்லாரிடமும் ஒரு பாக்கெட் டைரி வைத்திருப்பார்கள் தொலைபேசி எண்களை குறித்துக்கொள்ள குறைந்தது ஒரு 25 -5 0 எண்கள் மனப்பாடமாகவும் தெரிந்து வைத்திருப்பார்கள். இன்று பெரும்பாலோரிடமிருந்து அந்த டைரி மறைந்துவிட்டது. எல்லாம் செல்போனிலேயே பதிவு செய்து வைத்துக்கொள்கிறார்கள். அது போல 4,5 எண்களுக்கு மேல் போனை பார்க்காமல் சொல்லவும் திணறும் நிலையாகிவிட்டது. போன் தொலைந்தால் அவ்வளவுதான்.

சிறுவயது தைரியம்:

சிறு வயதுல கிராமத்துல பிறந்து பள்ளி படிப்பு முழுவதும் அந்த கிராமத்திலேயே கிராமத்துல என்ன பொழுது போக்கு இருக்கமுடியும் சொல்லுங்க பசங்க எல்லாம் சேர்ந்து கிணத்துக்கு குளிக்க போவோம் அப்படி கத்துகிட்டதுதான் நீச்சல். கிணத்துல அப்போதெல்லாம் மோட்டார் வைத்து நீர் இறைப்பது குறைவுதான் மாடுகட்டி ஏற்றம் இறைப்பார்கள் மாடு பின்னால் வரும்போது ஒரு ரப்பரால் ஆன பை கிணற்றுக்குள் போய் தண்ணீரை அதில் சேமித்துக்கொள்ளும் முன்னால் போகும்போது அந்த ரப்பர் பை மேலே வந்து அதற்காக ஏற்படுத்த பட்டுள்ள கால்வாயில் பாய்ந்து தொட்டியிலோ நிலத்திலோ பாய்ச்சுவார்கள் அதற்கு கவலை இறைக்கிறது (ஏற்றம் இறைக்கிறது) என்று சொல்லுவார்கள் அந்த திட்டின் மேல நின்று கிணத்துக்குள் போட்டி போட்டுக்கொண்டு குதிப்போம் கீழ மண் இருக்கா கல் இருக்கா பாறை இருக்கா தண்ணி எவ்வளவு ஆழம் இருக்கு ஒன்னும் தெரியாது சில நாட்கள் தண்ணீர் பாம்புடன் கட்டி புரண்டதும் உண்டு ஆனால் மனதில் பயம் இருந்ததில்லை ஆனால் இன்னைக்கு சில நாட்கள் இங்க மங்களூரில் நீச்சல்குளத்திற்கு போவதுண்டு அழகா எழுதி வைச்சிருப்பான் 25 அடி ஆழம் இருக்கிறது என கீழ எந்த கல்லு பாறை எதும் இல்லைங்கிறது நல்லா தெரியும் இருந்தாலும் மேல இருந்து குதிக்கறப்ப கொஞ்சம் உதறல் இருக்கத்தான் செய்யுது!! காணாமல் போனது அந்த 'சிறுவயது தைரியம்'.


எழுத நான் அழைப்பது 2 பேரை: (யாரை கோத்து விடலாம்!?!?)

1. ஜாக்கி சேகர்
2. காஞ்சனா ராதாகிருஷ்ணன்.

நிலா! நிலா! ஓடி வா!- ஜே.கே.ரித்தீஸ் ஸ்பெஷல்

அவியல் 19-08-08

நேற்று அதிசயமாக சீக்கிரமே தூங்க போகும் வாய்ப்பு கிடைத்தது. நேற்று இரவிலிருந்து இப்போதெல்லாம் ஆறு படத்தில் வரும் ஃப்ரியா விடு ஃப்ரியா விடு ஃப்ரியா விடு மாமு வாழ்க்கைக்கு இல்லை காரண்டி என்ற பாட்டு ஏனோ பிடிக்கிறது. நேற்று கடைசியாக ஸ்கைப்பில் பேசியதால் கூட இருக்கலாம். ஸ்டாக் மார்க்கெட் அடி மேல் அடி வாங்கி லாபம் எல்லாம் போய் நட்டம் ஏற்பட்டபோதுகூட இந்த பாடல் அப்படி ஒன்றும் பிடித்திருக்கவில்லை.

காலையில் ஒரு தொலைபேசி அழைப்பு பள்ளிகால நண்பியிடமிருந்து பள்ளி படிப்பை முடித்து பலவருடங்கள் கழித்து பெங்களூரில் வேலை பார்க்கிறாராம் என் வலைப்பூவை எதேச்சையாக பார்த்தாராம் நன்றாக இருக்கிறதாம் என் அண்ணனிடம் நம்பர் வாங்கி பேசுவதாக சொன்னார். இன்னும் அவர் பெற்றோர்கள் ஊரில் இருப்பதால் நிறைய நண்பர்கள் பற்றி தெரிந்து வைத்திருந்தார். மகிழ்ச்சியாக இருந்தது.

நேற்று இரவு சீக்கிரம் தூங்க சென்றதால் காலையில் சற்று சீக்கிரம் எழமுடிந்தது எப்போதும் போல் பத்து மணிக்கல்லாமல் :). சீக்கிரம் எழுந்து டிபன் எதாவது செய்யலாம் என களத்தில் இறங்கி உப்புமாவிற்கு ரவையை வறுத்து வெங்காயம் அறிந்துவிட்டு பச்சைமிளகாயை பார்த்தால் இருந்த நான்கு பச்சைமிளகாயிலும் பூஞ்சைகாளான் பிடித்திருந்தது. எல்லாவற்றையும் அப்படி அப்படியே மூடி வைத்துவிட்டு ஹோட்டலுக்கு சென்றுவிட்டேன். இன்றுதான் ஒரு புதிய தகவல் தெரிந்து கொண்டேன் பச்சைமிளகாயிலும் பூஞ்சை காளான் பிடிக்கும் என.

அதே வேளையில் கொஞ்ச நேரம் சூரியன் எப்.எம் 93.5 கேட்டுக்கொண்டிருந்தேன். சன் டைரக்ட் வந்ததால் எனக்கு வேறு மாநிலத்தில் இருக்கும் ஒரு ஃபீலிங் இல்லாமல் இருந்து வருகிறது. அதில் பிளேடு நம்பர் ஒன் என்று ஒரு நிகழ்சி அதில் போன் செய்த ஒரு பெண் தான் எம்பிஏ படிப்பதாக கூற அதற்கு பிளேடு சங்கர் ஏங்க எம்பிஏ படிக்கிறீங்க உக்காந்து எம்பாமலே படிக்க வேண்டியதுதானே என சொல்ல என்னை அறியாமலேயே இந்த கடிக்கும் சிரித்தேன். இதற்கு முன் சரியாக வராத கேபிள்க்கு மாதத்திற்கு இரு நூற்று இருபது ரூபாய்கள் செலுத்திக்கொண்டிருந்தேன். கேட்டால் உன் வீடு கடைசியில இருக்கு இவ்ளோதான் வரும் என்றுகூட பதில் சொல்லியிருக்கிறார்கள். டிடிஎச் சேவை வந்த பிறகு கொஞ்சம் மாறியிருக்கிறார்கள் என கேள்வி.

ஒருவருக்கு மற்றொருவர் பகிரங்க கடிதம் எழுதும் சீசனாக இருந்தும் யாருக்கும் இதுவரை எழுதவில்லை, பேசாமல் ஜெர்மனிக்கு எழுதலாமா என காலையில் இருந்து யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

குடும்பத்துடன் பார்க்கும்படியான சினிமா

சுப்ரமணியபுரம் பார்த்தேன்... ம்.. நல்லா இருந்தது. நல்லபடம்ன்னா இப்ப கற்றது தமிழ், பருத்திவீரன் , சுப்ரமணியபுரம்ன்னு ஹிட் ஆகற எல்லாத்துலயும் ரத்தம் ரத்தம். மனசை தைரியமாக்கிட்டுத்தான் படம் பார்க்கனும்.

இந்த இயக்குனர்கள், திறமை இருக்கு நல்ல எடுக்கறாங்க, ஆனா கொஞ்சம் ரத்தம் குறைச்சு ஏ சர்டிபிகேட் வராம, குடும்பமா குழந்தைகளோடு பார்க்க அழகா நாலுபடம் செய்தா ... நல்லாருக்குமில்ல....இப்ப குழந்தைகள் இந்த படத்தைப் பார்க்கலயான்னா , பார்க்கிறாங்க ஆனா நல்லது இல்லை . அப்படின்னு முத்துலட்சுமியக்கா அவங்க பதிவுல சொல்லியிருந்தாங்க,

நானும் என் மருமவன் பேபி பவனுக்கு போன் போட்டு ஸ்கூல்ல யாராச்சும் உன்னைய ஏமாத்திட்டாங்கன்னா என்னாடா கண்ணா பண்ணுவ அப்படின்னு கேட்டேன் கடிச்சி வச்சிருவேன் மாமா ரத்தம் வர மாதிரி அப்படின்னான் ஏண்டாப்பா உனக்கு இப்பவே இந்த கொல வெறி அப்படின்னு நினைச்சிகிட்டு இல்ல கண்ணா அப்பிடி எல்லாம் செய்யக்கூடாது அப்படின்னு ஒரு வழியா சொல்லிட்டு,

நம்ம வருங்கால கவுஜாயினி என் மருமவ நிலா பாப்பாவுக்கு போன் போட்டேன் யாராவது உன் பென்சில் பேனா பல்பம் எதாச்சும் எடுத்துகிட்டு ஏமாத்தினாங்கனா என்ன செல்லம் பண்ணுவ அப்படின்னு கேட்டேன் அதுக்கு சொன்னா காம்பஸாலயே குத்திருவேன் மாமா அப்படின்னு எனக்கு 'பக்'னு ஆகீடுச்சு.

நெக்ஸ்ட்டு யார்கிட்ட கேக்கலாம் ஆங் நம்ம காமிரா கவிஞர் பொண்ணு அதுவும் எனக்கு மருமவதான் ஆகணும் சரின்னு ஜெயச்சிரி பாப்பாவுக்கு போன் போட்டா அது சொன்னிச்சி
தொடைலயே நறுக்குனு கிள்ளிடலாம் இல்லைனா
கா விட்டுடலாம் இல்லைனா
மண்டைலயே கொட்டிடலாம் இல்லைனா
மிஸ்ஸுகிட்ட சொல்லிடலாம் இல்லைனா
அவன் புஸ்தகத்தை எடுத்து கிழிச்சி வெச்சிடலாம் இல்லைனா
அவன் வாட்டர் பாட்டில கீழ கொட்டிடலாம்
மாமா இன்னும் இருக்கு கேளுங்க மாமா ................

அப்படின்னு அடுக்கிகிட்டே போனாளா ஆஹா சினிமா படம் எடுக்கிறவங்களா நல்லா கவனிச்சிக்கங்கப்பா குழந்தைங்களோட படம் பாக்கணும்னா எப்படி எடுக்கணும்னு

நன்றி : குசும்பன்

Posted in Labels: |

மங்களூர் கிளை - பா.க.ச

தல சீக்கிரம் கிளம்புங்க உங்களுக்காக வண்டி வெளில வெயிட்டிங்

ஏ யாருப்பா நீ யாரு பேசறது எங்க கெளம்பணும். எப்பிடி என் நம்பர் கிடைச்சது!?

நாந்தான் தல மங்களூர் சிவா கூகுள்ல எத தேடினாலும் லிங்க் தான் வரும் ஆனா உங்க பேர போட்டு தேடினா உங்க மெயில் ஐடி பாஸ்வேர்ட் க்ரெடிட் கார்ட் டெபிட் கார்ட் நம்பர் பாஸ்போர்ட் ரேஷன் கார்ட் விவரம் எல்லாம் வருதே தலை. உங்களுக்கு கல்யாணம் ஆவப்போகுதாம் அதுக்கு முன்னாடி ஒரு பேச்சிலர் பார்ட்டி அப்படியே மங்களூர் கிளை திறந்ததுக்கு எல்லாம் சேத்து ஒரு பங்ஷன் வெச்சிருக்கோம் நாளைக்கு காலைல சீக்கிரம் வெளில வண்டி வெயிட்டிங்.

தல வெளியில் வந்து பார்த்துவிட்டு

என்னப்பா வண்டி எதுவும் காணுமே

தலை நல்லா கண்ணை தெறந்து பாருங்க சைக்கிள் இருக்கும்.

என்னது சைக்கிளா !?!?!? சரி அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன், அட இல்லப்பா சைக்கிள் எதும் இல்லையே :(.

நல்லா பாருங்க தல ஒரு மூனு சக்கர சைக்கிள் இருக்கும்.
யோவ் அதுல எப்பிடிய்யா அதுவும் குழந்தைங்க ஓட்டற சைக்கிள் அதுல :(

தலை ரெண்டு சக்கர சைக்கிள் ஓட்டணும்னா பேலன்ஸ் வேணும் அதுதான் எப்பவும் கிடையாதே ராத்திரி குவாட்டர் விட்டா திரும்ப தெளியறப்ப ராத்திரி ஆகிடும்ல அதனாலதான் தலை மூனு சக்கர சைக்கிள் அனுப்பினேன் உங்க திறமை மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு சீக்கிரம் கிளம்புங்க தலை அபி அப்பாவுக்கு தெரிஞ்சா பிரச்சனை நட்டுவோட கண்ணாடி போட்டு குசும்பன் கல்யாணத்துல போட்டோ எடுத்ததுக்கே காண்டாகி இருக்கார். நட்டோட சைக்கிள் எடுத்துட்டு வந்துட்டேன்னு தெரிஞ்சா அவ்ளோதான்.

சரிப்பா மங்களூர் எந்தபக்கம்பா இருக்கு

தல பெங்களூர் வந்துட்டு போன் போடுங்க வழி சொல்லறேன் அங்கிருந்து பக்கம்தான் 370கி.மி.

என்னாது பெங்களூர்ல இருந்து 370 கிலோ மீட்டராஆஆஆ அவ்வ்வ்வ்வ்வ்

தலை உங்க திறமை உங்களுக்கு தெரியாது சட்டுபுட்டுன்னு கிளம்பி டாப் கியர் போட்டு தூக்குங்க வண்டிய

60 நிமிடம் கழித்து

தலை எங்கிருக்கீங்க திருப்பத்தூர் தாண்டீட்டீங்களா?? என்னாது வீட்டுக்கு பக்கத்து தெருல ஓவர் ஸ்பீடுன்னு மடக்கீட்டாங்களா?????????????????????

Posted in Labels: |

பெஸ்ட் ப்ளாக்ஸ் ஆப் ஆல் டைம் By LinQ.


அட என்ன கொடுமைங்க இது?

"Best Blogs of All times" - ஆ நம்ம வலைப்பூவை தேர்ந்தெடுத்திருக்காங்க. எந்த போட்டியும் இல்லாம :))
அல்லாரும் ஜோரா ஒருக்கா கை தட்டுங்க. :))

நம்ம கோயமுத்தூர் மைனர் சஞ்சய் Best Lanuage Blog of July 08 க்கு மூவரில் ஒருவரா தேர்ந்தெடுத்திருக்கப்பட்டிருக்கார். ;)) அவருக்கும் வாழ்த்துக்கள்.

Posted in Labels: |

சிரிப்பதற்காக மட்டுமே..* * * * * * * * * * * * *

Posted in Labels: |