அவியல் 19-08-08

நேற்று அதிசயமாக சீக்கிரமே தூங்க போகும் வாய்ப்பு கிடைத்தது. நேற்று இரவிலிருந்து இப்போதெல்லாம் ஆறு படத்தில் வரும் ஃப்ரியா விடு ஃப்ரியா விடு ஃப்ரியா விடு மாமு வாழ்க்கைக்கு இல்லை காரண்டி என்ற பாட்டு ஏனோ பிடிக்கிறது. நேற்று கடைசியாக ஸ்கைப்பில் பேசியதால் கூட இருக்கலாம். ஸ்டாக் மார்க்கெட் அடி மேல் அடி வாங்கி லாபம் எல்லாம் போய் நட்டம் ஏற்பட்டபோதுகூட இந்த பாடல் அப்படி ஒன்றும் பிடித்திருக்கவில்லை.

காலையில் ஒரு தொலைபேசி அழைப்பு பள்ளிகால நண்பியிடமிருந்து பள்ளி படிப்பை முடித்து பலவருடங்கள் கழித்து பெங்களூரில் வேலை பார்க்கிறாராம் என் வலைப்பூவை எதேச்சையாக பார்த்தாராம் நன்றாக இருக்கிறதாம் என் அண்ணனிடம் நம்பர் வாங்கி பேசுவதாக சொன்னார். இன்னும் அவர் பெற்றோர்கள் ஊரில் இருப்பதால் நிறைய நண்பர்கள் பற்றி தெரிந்து வைத்திருந்தார். மகிழ்ச்சியாக இருந்தது.

நேற்று இரவு சீக்கிரம் தூங்க சென்றதால் காலையில் சற்று சீக்கிரம் எழமுடிந்தது எப்போதும் போல் பத்து மணிக்கல்லாமல் :). சீக்கிரம் எழுந்து டிபன் எதாவது செய்யலாம் என களத்தில் இறங்கி உப்புமாவிற்கு ரவையை வறுத்து வெங்காயம் அறிந்துவிட்டு பச்சைமிளகாயை பார்த்தால் இருந்த நான்கு பச்சைமிளகாயிலும் பூஞ்சைகாளான் பிடித்திருந்தது. எல்லாவற்றையும் அப்படி அப்படியே மூடி வைத்துவிட்டு ஹோட்டலுக்கு சென்றுவிட்டேன். இன்றுதான் ஒரு புதிய தகவல் தெரிந்து கொண்டேன் பச்சைமிளகாயிலும் பூஞ்சை காளான் பிடிக்கும் என.

அதே வேளையில் கொஞ்ச நேரம் சூரியன் எப்.எம் 93.5 கேட்டுக்கொண்டிருந்தேன். சன் டைரக்ட் வந்ததால் எனக்கு வேறு மாநிலத்தில் இருக்கும் ஒரு ஃபீலிங் இல்லாமல் இருந்து வருகிறது. அதில் பிளேடு நம்பர் ஒன் என்று ஒரு நிகழ்சி அதில் போன் செய்த ஒரு பெண் தான் எம்பிஏ படிப்பதாக கூற அதற்கு பிளேடு சங்கர் ஏங்க எம்பிஏ படிக்கிறீங்க உக்காந்து எம்பாமலே படிக்க வேண்டியதுதானே என சொல்ல என்னை அறியாமலேயே இந்த கடிக்கும் சிரித்தேன். இதற்கு முன் சரியாக வராத கேபிள்க்கு மாதத்திற்கு இரு நூற்று இருபது ரூபாய்கள் செலுத்திக்கொண்டிருந்தேன். கேட்டால் உன் வீடு கடைசியில இருக்கு இவ்ளோதான் வரும் என்றுகூட பதில் சொல்லியிருக்கிறார்கள். டிடிஎச் சேவை வந்த பிறகு கொஞ்சம் மாறியிருக்கிறார்கள் என கேள்வி.

ஒருவருக்கு மற்றொருவர் பகிரங்க கடிதம் எழுதும் சீசனாக இருந்தும் யாருக்கும் இதுவரை எழுதவில்லை, பேசாமல் ஜெர்மனிக்கு எழுதலாமா என காலையில் இருந்து யோசித்துக்கொண்டிருக்கிறேன்.