உன்னைப் பார்க்கும்வரை
Posted On Saturday, May 24, 2008 at at 6:00 PM by மங்களூர் சிவா
உன்னைப் பார்க்கும்வரை
என் கண்கள்
சைவமாய் இருந்தது.
ஒரேயொரு முறை
உன்னைப் பார்த்தேன்
மறுபடியும் பார்க்கவேண்டும் போலிருந்தது
பார்த்துக் கொண்டே இருந்தேன்...
மற்றபடி
நான் பார்த்த போதெல்லாம
நீ எதிரில்தான் இருந்தாய்
என்பதை
என்னால் நிச்சயித்துச்
சொல்ல முடியாது!

நேற்றிரவு
நிலவைப் பார்த்தேன்
நீ தெரிந்தாய்
கொஞ்சமும் இரக்கமின்றி
எல்லோருடைய கண்களும
குருடாகிவிட வேண்டுமென
பிரார்த்திக்கத் துவங்கினேன்.

தொட்டதும்
முழுதாய் என்னை
ஈர்த்துக் கொள்கிறாய்
மை உறியும்
தாள் போல்.
நல்லவேளையாய
நீ தடுத்துவிட்டாய்
கொஞ்சம் விட்டிருந்தால்
உனக்கு
திருஷ்டிகழிப்பதற்காக
பூசணிக்காயாய் நினைத்து
பூமியை உடைத்திருக்கும்
என் காதல்.

உன்னைப் பார்க்காத
தினங்களை
குப்பைத் தொட்டியில்
போட்டுவிடுகிறேன்.
அந்தக் கோயிலில்
நீ கண்மூடி நின்றபோது
பார்த்தேன்
கர்ப்பகிரகத்திலிருந்து
எழுந்துவந்த கடவுள்
உன்னை
மண்டியிட்டு
வணங்கியதை.

உன்னை
பார்த்ததற்கு முந்தைய
நாட்களை நான்
நினைத்துப் பார்க்கிறேன்
அப்போது நான்
பிரச்சனையின்றி இருந்தேன்.
உன் மடிமீது
முதன் முறையாக
உறங்கிய அன்று
விழித்துக்கொண்டது
என் தூக்கம்.
சுட்ட இடம் : ஆர்குட்
படங்கள் உதவி : தியாகராஜன் , மங்களூர்
படங்கள் உதவி : தியாகராஜன் , மங்களூர்