வேறு என்ன வேண்டும் உலகத்திலே...அக்கம் பக்கம்
யாரும் இல்லா
பூலோகம் வேண்டும்

அந்தி பகல்
உன் அருகே
நான் வாழ வேண்டும்

என் ஆசை எல்லாம்
உன் இருக்கத்திலே
என் ஆயுள் வரை
உன் அணைப்பினிலே

வேறென்ன வேண்டும்
உலகத்திலே
இந்த இன்பம் போதும்
நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம்
வாழ்ந்துவிட்டேன்

(அக்கம் பக்கம்)

நீ பேசும் வார்த்தைகள்
சேகரித்து
செய்வேன் அன்பே
ஒரு அகராதி

நீ தூங்கும் நேரத்தில்
தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன்
தலை கோதி

காதோரத்தில்
எப்போதுமே
உன் மூச்சு காற்றின்
வெப்பம் சுமப்பேன்

கையோடுதான்
கை கோர்த்து நான்
உன் மார்பு சூட்டில்
முகம் புதைப்பேன்

(வேறு என்ன வேண்டும்)
(அக்கம் பக்கம்)

நீயும் நானும்
சேரும் முன்னே
நிழல் ரெண்டும்
ஒன்று கலக்கிறதே

நேரம் காலம்
தெரியாமல்
நெஞ்சம் இன்று
விண்ணில் மிதக்கிறதே

(வேறு என்ன வேண்டும்)
(அக்கம் பக்கம்)

Posted in Labels: |