யாரந்த மோகினி

என் முக உரைகள் உன்
முகவரியைத் தேடும்

உன் வாழ்த்துரை என்
வாழ்வுரையில் சேரும்

நம் தொடக்க உரையை எழுத
தொல்காப்பியம் தேவைஇல்லை
இதயங்கள் போதுமடி

இல்லறம் நடத்த
அன்புரைகள் கேட்டுவா
வசந்த உரை ஒன்று
வாழ்வில் சேர்ந்து
எழுதுவோம் கண்ணே!

Posted in Labels: |