நச்சுனு ஒரு கதை

வாடா மச்சி இப்பதான் என் வீட்டுக்கு வழி தெரிஞ்சிதா? கம்ப்யூட்டரில் அமர்ந்திருந்த பரத்துக்கு நான் அவன் வீட்டிற்கு போனது ஆச்சரியமாக இருந்திருக்கும் போல.

அப்பிடியெல்லாம் இல்லடா சின்ன சின்ன வேலைகள் அது இதுன்னு வரமுடியறதில்லடா முன்ன மாதிரி என்றவாறே உள்ளே நுழைந்தேன்.

என்னடா எதோ ஸ்மெல் வற்ற மாதிரி இருக்கே

அதெல்லாம் ஒன்னும் இல்லடா என்றவாறே ‘ஜிடாக்’கில் சாட்டிக்கொண்டிருந்தான்

அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமலாக நான்கு இடங்களில் அடுக்கப்பட்ட பேப்பர் அதிலும் சில கீழே விழுந்து இரைந்து கிடந்தது. கொஞ்சம் அதிக உயரமாக அடுக்கப்பட்டு இருந்ததன் மேல் ஹெல்மெட்

ஒரு மார்கமாகத்தான் இருக்கிறான் என்பது சொல்லாமலே தெரிந்தது.

இருடா மாப்பி போய் ஒரு டீ அடிச்சிட்டு வருவோம் ஒரு பத்து நிமிசம் நெட் பாத்துகிட்டிரு அதுக்குள்ள ரெடியாயிடறேன் என எழுந்தான்.

கீ போர்டை முன்னே பின்னே நகர்த்த இடமில்லை பழைய வீக் புத்தகங்கள் இரண்டு மூன்று பால் பென், வாட்ச், சின்ன டார்ச், ஆஷ் ட்ரே இத்யாதி இத்யாதிகள் அனைத்தும் கம்ப்யூட்டர் டேபிளில் தஞ்சம் புகுந்திருந்தன.

அதெற்கெல்லாம் ‘ஹை லைட்’டாக கேபினெட்டின் மேல் ஒரு செராமிக் டீ கப்பூம், மோடத்தின் மேல் முழுவதும் சாப்பிட்டு முடிக்காத சேமியா உலர்ந்த டிபன் தட்டு. செம ஃபார்ம்லதான் இருக்கிறான் போல என நினைத்துக்கொண்டேன்.

இன்டெர் நெட் எக்ஸ்ப்ளோரர் கிளிக் செய்த உடனேயே ஒரு ஏடாகூடமான பக்கத்திற்கு அது அழைத்துச் செல்ல முற்பட்டது. ஓ இதுதான் ஹோம் பேஜா வெளங்கும்.

ஒரு வழியாக எஸ்கேப் செய்து இரண்டு மெயில் செக் பன்னுவதற்குள் பேன்ட் சர்ட் போட்டுக்கொண்டு வந்தான்

எது எப்படி இருந்தாலும் வெளியே கிளம்பும்போது மட்டும் ‘டீக்’கா ட்ரெஸ் போட்டு சென்ட் அடிச்சி கிளம்பி ஊரை ஏமாத்துறதே பொழப்பா போச்சு பக்கத்துல இருந்து பாத்தாதானே தெரியும் லட்சணத்தை. இந்த விசயத்தில் நானும் அப்பிடித்தான் ஹிஹி ஹி.

ஒரு தம்மை எடுத்து வாயில் வைத்துக்கொண்டேன்
மாப்பி மேட்ச் பாக்ஸ் குடுறா

அங்கதான்டா எங்கயோ லைட்டர வெச்சேன் காணோம் நீ உள்ள கேஸ் பத்தவெச்சி அதுல பத்தவெச்சிக்கடா

வேறு வழியில்லாமல் அப்படியே பத்த வெச்சிகிட்டு பிஸ் அடிக்க பாத் ரூமுக்குள் நுழைந்து வெளியே வரும்போதுதான் கவனித்தேன் பாத்ரூம் உட் கதவில் போஸ்டரில் ஒய்யாரமாய் இருந்த ‘ஜெனிபர் லோபஸ்’ஸை

இத்துனூன்டு போட்டுகிட்டு என்னா போஸ் குடுக்கறாளுகய்யா

அடப்பாவி எப்படா வாங்கின இந்த போஸ்டரை, எங்க வாங்கின? (தெரிஞ்சா நமக்கும் பிரயோசனம் ஆகுமில்ல)

ஆமாடா ஆர்ச்சிஸ்ல போன வாரம்தான் வாங்கினேன். இந்த போஸ்ல நயந்தாரா கிடைச்சிருந்தா இன்னும் நல்லா செமத்தியா இருந்திருக்கும்

எப்பவும் கடைசி நேரத்துல ஓடிப்போய் காக்கா குளியல் குளிப்பேன் இப்பிடி எல்லாம் இருந்தா ஒரு ரெண்டு நிமிசம் சேத்து குளிக்க மாட்டனா அதுக்குதான் என்றான்

ட்விஸ்ட் முதல் பின்னூட்டத்தில்