செல்(வ)லமடி நீ எனக்கு - 1

குட் மார்னிங் சார்

வெரி குட் மார்னிங்

வரிசையாக குட் மார்னிங்களை பெற்றுக்கொண்டும் தலையசைப்பில் புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்டும் தன் கேபினுக்குள் நுழைந்தார் ஜகனாதன். அந்நிறுவனத்தின் மானேஜிங் டைரக்டர் கம் ஓனர்.

சார் கொரியர் என கொண்டு வந்தாள் ரிசப்ஷனிஸ்ட் 'சஷா'.

மோகனை பாக்க சொல்லும்மா.

சார் பர்சனல்னு போட்டிருக்கு அதனாலதான் ......

சரி என பெற்று கொண்டார்

கான்பிடென்ஷியல் என குறிப்பிடப்பட்டிருந்தது கொரியர். என்ன வந்திருக்கும் அப்படி பர்சனலாக என ஆச்சரியத்துடன் பிரித்து பார்த்தவருக்கு 1000 வாட் அதிர்ச்சி

பள்ளிக்கூடம் செல்லும் தன் ஒரே அன்பு மகள் யாரோ ஒரு தடியனுடன் ஹோட்டலில் ஒட்டி உரசியபடி உட்கார்ந்துகொண்டு ஒரு போட்டோ அவன் கை அவள் இடுப்பை சுற்றி வளைத்திருந்தது.

கொரியர் கவரில் வேறு எதுவும் இருக்கிறதா என திரும்பவும் நன்றாக பார்த்தார் ஒன்றும் இல்லை.

போட்டோவின் பின்புறம் கிறுக்கலான கையெழுத்தில் 'ஜஸ்ட் சாம்பிள்' என எழுதப்பட்டிருந்தது.

படபடப்பாக உணர்ந்தார். தலை சுற்றுவது போல இருந்தது பாக்கெட்டிலிருந்து பிபி மாத்திரை இரண்டு எடுத்து விழுங்கினார்.

இன்டர்காமில் பர்சனல் அஸிஸ்டன்ட் மோகனை அழைத்து அவசர வேலை இருப்பதாகவும் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளுமாறும் போன் எதும் செய்து தொந்தரவு செய்ய வேண்டாம் என சொல்லி வீட்டிற்கு அவசரமாக புறப்பட்டார்.

சார் எனி ப்ராப்ளம்

இல்ல மோகன் நத்திங்
நத்திங்

நான் வேணா உங்களை ட்ரைவ் பண்ணிகிட்டு போய் வீட்டுல விட்டுடட்டுமா
நோ நீங்க ஆபீஸ்ல இருந்து பாத்துக்கங்க ட்ரைவர் யார் இருக்கா பாருங்க இல்லைனா நான் போய்க்கறேன்

பி.கு: ஜி.ரா, CVR, ஜி, இம்சை அரசி இவர்கள் வரிசையில் நானும் இணைந்து விட்டேன்.

பி.குக்கு பி.கு: ஆனால் அவர்கள் வழியை பின்பற்றாமல் அதாவது பிரதி திங்களன்று இல்லாமல் தினமும் வெளியிடுவேன் ;)

பின்னூட்டத்தை பொறுத்து பின் குறிப்புகள் கூடவோ குறையவோ செய்யும்


(தொடரும்)

Posted in Labels: |