ஆணீயம் / பெண்ணியம் !?!?

ஒருத்தன் கல்யாணம் ஆன உடனே புது பொண்டாட்டிகிட்ட ஏ இந்தா இங்க பாரு நான் உனக்காக எல்லாம் என்னைய மாத்திக்கனும் அது இதுன்னு எல்லாம் நினைச்சுகிட்டு இருக்காத.

எனக்கு பசங்க பொண்ணுங்கன்னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் ரொமப ஜாஸ்தி அவங்க கூடத்தான் சுத்திகிட்டிருப்பேன் அப்டியே நாங்க தண்ணி அடிக்க அங்க இங்க போவோம் எவ்வளவு நேரம் ஆவும்னல்லாம் தெரியாது வற்றப்பதான் வருவேன்.

சில நாள் வரமாட்டேன். அது மாதிரி நீயும் எனக்காக உன்னைய எதுவும் மாத்திக்க வேணாம் நீ எப்பிடி இருந்தியோ அப்பிடியே இரு அப்ப்டின்னு சொன்னானாம்.

அதுக்கு அந்தம்மா சொன்னுச்சாம் பரவாயில்லிங்க நீங்க எப்பிடி வேணா இருங்க வீட்டுக்கு வந்தா வாங்க இல்லைன்னாலும் பரவாயில்லை. நீங்க இருக்கீங்களோ இல்லியோ டெய்லி ராத்திரி பத்து மணிக்கு நம்ம பெட்ரூம்ல "xxx" நடக்கும் எப்பிடி வசதின்னு கேட்டுச்சாம்.

பாவிப்பய 'டாண்'னு வீட்டுக்கு வந்திடறான்றத தனியா வேற சொல்லனுமா!!

என்னடா இவன் வில்லங்கமாவே எழுதறானேன்னு கோச்சுக்காதீங்க இது எனக்கு இங்லீஷ்ல வந்த மெயில் ஃபார்வர்ட். விட்டுகொடுத்து வாழ்ந்தாதான் வாழ்க்கை.

Posted in Labels: |