(நஒக) கன்ட்ரி ஃப்ரூட்!?

ஹலோ ராம்

என்ன சொல்லு

இல்ல கொஞ்சம் உன் டிபார்ட்மெண்ட் வரைக்கும் வரட்டுமா கொஞ்சம் மெயில் செக் பன்னனும் என் சிஸ்டம்ல citirix வர்க் ஆகலை.

வா ஆனா என் வேலைய டிஸ்டர்ப் பன்னாம குடுக்கற சிஸ்டம்ல பாத்துட்டு போகனும். நீ உக்காந்திருக்க சிஸ்டம் விடுன்னு ராவுடி பன்னக்கூடாது.

ஆம் ஓகே வரேன்.

ஹாய்டா(!) எப்டி இருக்க?

யா குட், நீ

எனக்கென்ன சூப்பரா இருக்கேன்(!). ஹலோ கை குடுத்தா கை குடுக்கனும்பா இன்னும் கன்ட்ரி ஃப்ரூட்டாவே இருக்க.
மெதுவாக கை கொடுத்து, இல்ல நான் வேற திங்கிங்ல இருந்தேன் கவனிக்கில

அது சரி நீ என்னைக்கு ஆபீஸ்ல ஆபீஸ் வேலைய பத்தி திங் பன்ற இன்னைக்கு புதுசா

(மனசுக்குள் நான் கன்ட்ரி ஃப்ரூட்டா இவ பெரிய லண்டன் காரி நெனப்பு நெக்ஸ்ட் டைம் இங்கிலிஷ் காரன் ஸ்டைல்ல ஹக் பன்னி டார்லிங் ஹெள ஆர் யூ னு கேக்குறேன்.)

எல்லாரும் கொசு வத்தி சுத்திக்கங்க (அதான்பா ப்ளாஷ் பேக்)

1993 கிராமத்தில் ஒரு பள்ளி கூடம்

என்னடா இன்னைக்கும் இந்த வாத்தியார் வரலையா ஜாலிதான் ஆனா இந்த பீரியடும் அந்த ட்ராயிங் மாஸ்டர் வந்து ஒக்காந்துப்பானே சும்மா விட மாட்டானே.

மாப்பு அந்த நோட்ட எடுறா

ராம் எதுக்குடா

டேய் எடுறா எனக்கு 4 பேப்பர் வேணும் அதுல கிழிக்க போறேன்

அடப்பாவி வேணாடா, அவன் அழிக்கறதுக்கு ரப்பர் கேட்டாலே அழுவான்டா அவன் நோட்டுலயா

ஆமாடா அதனாலதான்டா எடுறா

(ஒரு படிப்பாளியின் நோட்டிலிருந்து 4 பக்கம் கிழிக்கபடுகிறது)
.. .. ..
.. .. .. ..

டேய் எவன்டா அது தலை மேல பேப்பர் ராக்கெட் செஞ்சு விடறது இப்ப சொல்ல போறீங்களா இல்லியா நான் HM கிட்ட போய் சொல்ல போறேன். Blah blah blah.. ... .. .. .. .. ..

ஆஹா இவ நம்ம படிப்புக்கு(!?!?!?) ஒலை வெச்சிருவா போல இருக்கே நான் கலெக்டராவேன்னுல்ல எங்க வீட்டுல எல்லாம் நெனச்சிட்டிருக்காங்க காலிபன்னிடுவாளாட்ட இருக்கேன்னு மனசுல நெனச்சிகிட்டு

வீணா இல்ல நான் முரளி மேல விட்டது உன் மேல விழுந்திருச்சு சாரி... ... ...

(எப்பா கன்வின்ஸ் பன்றதுக்குள்ள தாவு தீந்திருச்சு இப்பல்லேர்ந்தே இப்பிடியா என்ன கொடுமை பெனாத்ஸ் இது)

இப்டி இருந்த இவளுக எங்க???

எல்லாரும் கொசு வத்தி ரிவர்ஸ்ல சுத்திக்கங்க (அதான்பா ப்ளாஷ் பேக்லர்ந்து ரிடர்ன்)

ஏய் என்ன ஆச்சு கல்லு மாதிரி நிக்கிற?
(முதுகுல சுள்ளுனு ஒரு அடிவிழுகிறது) என்ன யோசனை

ஆங் ஒன்னும் இல்லை கன்ட்ரி ஃப்ரூட்னு சொன்னியே அதுதான் யோசிச்சிகிட்டிருந்தேன்.

அடப்பாவி இன்னுமாடா அதை மனசுல வெச்சிட்டிருக்க!! கன்ட்ரி ஃப்ரூட்.

ஓ சாரிடா
(இதுதான் ட்விஸ்ட் ஒத்துகிட்டா ஒத்துக்கங்க இல்லைனா போங்க. ஒரு பொண்ணு சாரின்னு சொல்றது எவ்ளோ பெரிய ட்விஸ்ட்)

Posted in Labels: , |