செல்(வ)லமடி நீ எனக்கு - 3




ட்ரிங்.... ட்ரிங்....

ஹலோ ஹலோ

காலைல இருந்து இது மூணாவது தடவையாக போன் வருகிறது எடுத்து பேச முற்படும்போது இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

போன் எதும் சரியில்லையோ என நினைத்துக்கொண்டு
அலுவலகத்துக்கு கிளப்பும் அவசரத்தில் டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தார்.


ட்ரிங்.... ட்ரிங்.... திரும்ப போன் ஒலித்தது

ஹலோ என அவள் குரலை கேட்டவுடன்

ஏய் என்னாடி ஆள் இட்டாந்து அடிக்கிறியா மவளே இஸ்கூலாண்ட இன்னைக்கு எப்பிடியும் வந்துதானே ஆவனும் இருக்குடி உனுக்கு

போன் துண்டிக்கப்பட்டது

என்ன செய்யலாம் வீட்டில சொல்லலாமா
மிகுந்த யோசனைக்குபின்
ரிசீவரை எடுத்து மனதிலிருத்தி வைத்திருந்த நம்பரை சுழற்றினாள்



ஹலோ சூர்யாங்களா?
நான் ரஷ்மி

எந்த ரஷ்மி
ஓகே ஐ காட் இட்
சொல்லு ரஷ்மி

சுருக்கமாக போன் வந்தது பற்றியும் அதில் கேட்டது எல்லாம் சொன்னாள்

ஓ அப்பிடியா சரி பைனான்ஸ்ல கலெக்சனுக்கு சில லோக்கல் பசங்க இருக்கானுங்க எப்படியும் அவனுங்களுக்கு தெரியாம இருக்காது.

நீ ஒண்ணு பண்ணும்மா ஒரு பத்து நிமிசம் முன்னாடி இன்னைக்கு பஸ் ஸ்டாப்புக்கு வா

போன் பண்ணது அன்னைக்கு தகராறு பண்ணவனுங்களாதான் இருக்கும் பாத்துக்கறேன் என்று சொல்லி போன் இணைப்பை துண்டித்தான்.

* * * *

ஹாய் என்றவாரே அருகில் வந்த சூர்யா பார்ப்பதற்கு நடிகர் சூர்யாவைப் போலவே இருந்தான்.

நீ போன் பண்ண ஒடனே நான் அவசரமா கிளம்பி வந்துட்டேன் ரஷ்மி, நான் இன்னும் சாப்பிடலை அந்த கடைல ஒரு போய் ஒரு ஜூஸ் சாப்பிட்டுகிட்டே என்னங்கிறத பேசிக்கலாமே இங்க வேணாம்.

இருவரும் அருகிலிருந்த கடைக்கு நடந்தார்கள்.

போனில் யார் என்ன பேசினார்கள் என திரும்ப ஒரு முறை அக்கரையுடன் விசாரித்துக்கொண்டான்.

அன்று நடந்த கலாட்டாவின் போது தன்னுடைய தங்க செயின் காணவில்லை எனவும் இன்னும் வீட்டுக்கு தெரியாது தெரிந்தால் பிரச்சனை என்றும் சொன்னாள்

அவள் வேண்டாம் என சொல்லியும் ஆரஞ்சு ஜூஸ் இரண்டாக ஆர்டர் செய்தான்.

கவலைப்படாமல் இருக்குமாறும் தான் எல்லாம் பார்த்துக்கொள்வதாகவும் உறுதி சொன்னான்.

பின் அவளை தன் காரிலேயே அவள் பள்ளிக்கு சற்று முன்பாக ட்ராப் செய்தான்.

மறக்காமல் அவள் மொபைல் நம்பரை கேட்டு பெற்றுக்கொண்டான்.

(தொடரும்)

Posted in Labels: |