நஒக - நான் அவன் இல்லை

காதல் யானை வருகிறான் ரெமோ
முத்த தந்தத்தில் முட்டுவன் ரெமோ
அப்பள இதயங்கள் பத்திரம் ரெமோ
ரேம்ப் ஆப் ரெமோ

காதுக்குள் அலறிக் கொண்டிருந்த நோகியா என் சீரிஸ் தன் தொண்டையை அடைத்துக் கொண்டது. அவளிடமிருந்துதான் போன் காலையில் இருந்தே இதற்காகத்தான் வெயிட்டிங். மிக மெல்லிய ஹஸ்கி குரலில் கன்னடத்தில் பேசினாள்.

சரிடா சரிடா என எல்லாம் கேட்டுக்கொண்டேன். எப்பிடித்தான் இப்படி பேசுறாளுகளோ அவளுகளுக்கும் கேக்காம நமக்கும் கேக்காம அவ்வளவு மெல்லிசா! ஹும்.

இப்போதுதான் ஒரு வாரமாக அம்ருதாவை தெரியும். சாதாரணமாகவே இங்கு பெண்கள் மிக அழகாக இருப்பார்கள் கேரளா சாயலும் இல்லாமல் நார்த் இந்தியன் மாதிரியும் இல்லாமல் இரண்டும் சேர்ந்த கலவையாக. இந்த ஊருக்கு வந்த புதிதில் ஒரு மாதம் பேருந்தில்தான் பயணம் அப்போதெல்லாம் நினைத்திருக்கிறேன் ஏன் நம்ம ஊர் டைரக்டர் எல்லாம் ஹீரோயின் தேடி மும்பைக்கும் அங்கயும் இங்கயும் அலையுறாங்க? சாதாரணமா நம்முடன் பேருந்தில் பயணம் செய்யும் பெண்ணே அவ்வளவு அழகாக இருப்பார்கள். அவர்களிலும் இவள் பேரழகியாகவே தெரிந்தாள்.

இன்னும் கொஞசம் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் ஐயங்கார் வீட்டு அழகே என அன்னியனில் பாடியது போல இந்த ஊரில் இவள். பக்கத்து வீட்டிற்கு குடி வந்திருக்கிறார்கள். கெனரா காலேஜில் பிபிஏ படிப்பதாக ஆண்ட்டி சொன்னார்கள்.

தனுஷ் ஒரு படத்தில் ஒரு பிகரை கரெக்ட் பன்ன ஓடி ஓடி அவர்கள் வீட்டுக்கு வேலை செய்வார் அது போல எந்த கஷ்டமும் இல்லாமலேயே அவர்கள் பரிச்சயமாகிவிட்டிருந்தார்கள். அவளின் அப்பா இங்கு கார்பொரேசன் வங்கியில் உயர் அதிகாரி.

பக்கத்து வீட்டிற்கு குடி வந்திருக்கிறோம் இன்னைக்கு பால் காய்ச்சுறோம் என சிலிண்டர் கேட்டு வந்து அவர்தான் அறிமுகம் செய்து கொண்டார் அப்போதுதான் இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்டார். அவ்வப்போது பார்க்கும் போதெல்லாம் இரண்டு நிமிடம் எதாவது பேசுவோம். என்ன செய்கிறேன் குடும்பம் பற்றியெல்லாம் கேட்டுக்கொண்டார். அப்படியே நானும். பார்க்கும்போதெல்லாம் ஒரு ஹாய் சொல்வதில் இருந்து என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதை உணரமுடிந்தது.

என்ன மாயமோ அவளிடம் மனதை பறிகொடுத்துவிட்டேன். அதிலிருந்து எல்லாமே தலைகீழ்தான். நண்பர் ஒருவரும் சேர்ந்து என்னை தூண்டிவிட்டதில் எப்படி அவளிடம் சொன்னேன் என்பதும் மறந்துவிட்டது. அவள் தந்தை என் மீதும் என் வேலை மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்க போகிறேன் என நினைக்கும் போது என் மேல் எனக்கே சிறிது வருத்தம் ஏற்பட்டாலும் அவளின் பால் கொண்ட காதல் மயக்கத்தில் அதெல்லாம் ஒரு பொருட்டாக தெரியவில்லை.

இன்று காலையிலிருந்தே ஒரு படபடப்பு. காதல் படத்தில் வருமே பரத்தும், சந்தியாவும் பஸ் ஏறி சென்னைக்கு ஊரை விட்டு ஓடிப்போவது எல்லாம் நினைவுக்கு வந்தது. எல்லாம் நல்ல படியாக நடக்கவேண்டும் என்றைக்கும் விட இன்று இரண்டு நிமிடம் அதிகமாகவே கும்பிட்டேன். மதியம் ஒரு மணிக்கு ட்ரெயின் டிக்கெட் எல்லாம் கடைசி நிமிடத்தில் தக்கலில் எடுத்திருந்தேன். ஏற்கனவே பேசி வைத்திருந்தபடி அவள் சரியாக வரவேண்டும்.

சார் சார் எவ்வளவு நேரமா போன் அடிக்குது எடுத்து பேசுங்க மேனேஜர் ரொம்ப நேரமா ட்ரை பன்னிகிட்டிருக்கிறாராம். ஜீமெயிலில் வந்திருந்த இந்த ஈமெயிலை
//
cheena (சீனா) said...
என்னாச்சு சிவா - பக்கத்து வீட்லே
யாரும் ஸ்மைல் பண்றாங்களா -

லைன் தான் கிளீயர் ஆச்சே !!
கதை கதை யா எழுதுறதெ
விட்டுட்டு ஆக வேண்டியதெ
பாக்க வேண்டிய்யது தானே
//

திறந்து வைத்த படி வாயைபிளந்து தூங்கி கொண்டிருந்தவனை எழுப்பினான் ஆபீஸ் பையன்.