செல்(வ)லமடி நீ எனக்கு - 4

ஹலோ ரஷ்மி நான் சூர்யா

சொல்லுங்க சூர்யா

உன்னோட செயின் கிடைச்சிடிச்சு அந்த பசங்ககிட்டதான் இருந்தது நம்ம பசங்க போய் ரெண்டு தட்டு தட்டினதும் குடுத்துட்டானுங்க. பசங்க கொஞ்சம் லேட் பண்ணிருந்தாலும் கஷ்டம் அடகு வெச்சிருப்பானுங்க இல்ல வித்திருப்பானுங்க


ரொம்ப நன்றி சூர்யா நானே இந்த ரெண்டு நாள்ல எங்க அம்மாவுக்கு தெரிஞ்சிடுமோன்னு பயந்துகிட்டே இருந்தேன்.

இன்னைக்கு சனிக்கிழமை ஸ்கூல் இல்லையே எப்பிடி நான் வந்து வாங்கறது

நீ வேணா ஸ்பெஷல் க்ளாஸ் இருக்குனு சொல்லிட்டு வாயேன்

ஓகே நல்ல ஐடியா நான் வரேன்

அம்மாவிடம் ஹாப் டே ஸ்கூல் இருக்கு என்றும் அப்படியே நண்பியின் வீட்டுக்கு சென்று ரெக்கார்ட் நோட் வாங்கிவருவதாகவும் சொல்லிவிட்டு கிளம்பினாள்


குகை பாலத்தில் சூர்யாவின் கடை சாத்தியிருந்தது
எங்க போயிருப்பார் சூர்யா. தன் மொபைலை எடுத்து அவன் நம்பருக்கு டயல் செய்தாள்.

ஓ வந்துட்டியா நீ இங்க ஒரு பார்ட்டி கொஞ்சம் பணம் தரவேண்டியிருந்தது இன்னைக்கு விட்டா பிடிக்க முடியாது அதனால வந்தேன் நீ வர்றத மறந்துட்டேன். ஒண்ணு பண்ணேன் ஒரு பஸ் இல்ல ஆட்டோ பிடிச்சி கே.எஸ். தியேட்டர்கிட்ட வந்திடேன் நான் அங்க வெயிட் பண்ணறேன்

சற்று நேரத்தில் ரஷ்மி அங்கு ஒரு ஆட்டோவில் வந்தாள் வாசலிலேயே காத்திருந்த சூர்யா அவள் இறங்குமுன் அவள் மறுத்த போதும் ஆட்டோவிற்கு டிரைவரிடம் 100 ரூபாய் தாளை நீட்டினான்.

ஹலோ ரஷ்மி நல்லா இருக்கியா

நல்லா இருக்கேன். எப்பிடி இருக்கீங்க

எதுக்கு வாங்க போங்க வா போன்னு பேசலாமே இல்லைனா சூர்யானு பேர் சொல்லி பேசலாமே

சரி என் செயின் கிடைச்சதுன்னு சொன்னீங்களே குடுங்க

இப்பதான் சொன்னேன் வா போ ன்னு பேசலாம்னு

சரி என் செயின்

அது இப்ப பையன் எடுத்துகிட்டு வருவான். நேத்து வாங்கீட்டானுங்க.

என்று சொல்லி மொபைலை எடுத்து எதோ ஒரு நம்பருக்கு தட்டினான்

காசியா டேய் எப்படா வர
உன்கிட்ட என்ன சொன்னேன் நீ இப்பிடி பண்ணிகிட்டிருக்க
என்னது லேட்டாகுமா வண்டி பஞ்சரா இப்ப எங்க இருக்க?
என்னது கொண்டலாம்பட்டி பைபாஸ்கிட்டயா
அங்க எதுக்குடா போன

ஓ அப்டியா சரி பணம் ஜாக்கிரதை சீக்கிரம் வந்து சேரு இங்க பவர் ஹவுஸ் பக்கத்துல கே.எஸ்ல இருக்கேன் வந்துட்டு போன் பண்ணு
என்று சொல்லி டயல் செய்யாத போனை கட் செய்தான்

ரஷ்மி க்ளாஸ்ன சொல்லிட்டுதானே வந்திருக்க எப்பிடியும் உன் செயின் எடுத்துகிட்டு அவன் வர்றதுக்கு ஒண்றரை மணிநேரம் ஆயிடும் அதுக்குள்ள ஜாக்கிசான் படம் போட்டிருக்கான் பாத்திடுவோமா

இருவரும் பால்கனிக்கு சென்று படம் பார்த்தார்கள்

என்ன போனே வரலை என் செயின் எடுத்திட்டு வருவான் சொன்னியே

அதுதான் எனக்கும் புரியலை

திரும்ப தன் போனை எடுத்து முன் போலவே பலமுறை டயல் செய்தான்

ச்ச நம்பர் கிடைக்க மாட்டிங்குது
ஒண்ணு பண்ணுவோம் நீ வீட்டுக்கு போயிடு நான் நாளைக்கு வாங்கி வெச்சிகிட்டு உனக்கு போன் பண்ணறேன்

அரை மனதுடன் சரி என்றாள்

அவள் சென்று மறைந்ததும் தன் சட்டைபையில் இருந்த செயினை தொட்டு பார்த்துக்கொண்டான்.

(தொடரும்)

Posted in Labels: |