புத்தாண்டு சபதம்

என் பாசக்கார அக்கா ஷைலஜா புத்தாண்டு சபதம்னு ஒரு பதிவு போட்டிருக்காங்க அத பாத்தவுடனே நாமளும் எதாவது சபதம் எடுக்கணுமோ அப்பிடினு பாத்தா நாமதான் எப்பவுமே சபதத்தோடதானே திரியுறோமே இப்ப என்ன புதுசா வேற அப்டின்னு உள்ள இருந்து ஒரு சவுண்டு.

அதோட விட்டாங்களா எங்க அக்கா ஜிமெயில் 'சாட்'ல வேற வந்து நீங்களும் சபதம் எடுத்தே ஆகனும்னு கண்டிஷன் வேற போட்டுபிட்டாங்க.

பள்ளிகூட பருவத்தில் அப்பாக்கு வர்ற டைரிய அடம்பிடித்து வாங்கி சிவராமன் ஐந்தாம் வகுப்பு 'பி' பிரிவு அரசினர் நடுநிலை பள்ளி அப்பிடின்னு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சு அந்த டைரிய அப்பிடியே விட்றுவேன் ஆறாவது ஏழாவது படிக்கும் போது அது மாறிடிச்சு 'அரசினர் உயர்நிலை பள்ளி'ன்னு எழுதுவேன்ல!!அப்பிடியும் மீறி எழுதினா ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் அப்டின்னு என்னைக்காவது எழுதியிருப்பேன் கேவலமா பரிச்சை எழுதிட்டு வந்து!.இப்ப சமீபத்துல எங்க வீடு ஷிப்ட் பண்ணினோம் சென்னைக்கு அப்ப தேவை இல்லாத புத்தகங்கள் டைரிகள் எல்லாம் எடைக்கு போட்டுடலாம்னு பாத்துகிட்டு இருக்கிறப்ப அண்ணனோடது அக்காவோடதுன்னு நிறைய டைரிகள் கிடைச்சது எதாவது முக்கியமானது எடைக்கு போட்டிட போறோம்னு உள்ள திறந்து பாத்தா அவிங்களும் என்னைய மாதிரியே சபதம் எடுத்துருக்காங்க போல டைரில மொத பக்கம் பேர் மட்டும்தான் எழுதுவோம்னு.

ஏற்கனவே இப்பிடித்தான் பலவருசங்கள் புத்தாண்டு அன்று சபதம் எடுக்குறதும் அத ரெண்டு நாள் கூட கடைபிடிக்க முடியாம திணறரதுமே நம்ம பொழப்பா போச்சேன்னு எதோ ஒரு புத்தாண்டு அன்னைக்கு இனிமேத்து சபதமே எடுக்கறதில்ல அப்பிடின்னு ஒரு சபதம் எடுத்து இன்னைக்கு வரைக்கும் காப்பாத்திகிட்டு வரேன்.

அடடா என்னடா இது நம்ம எடுத்த சபதத்துக்கு வந்த சோதனைன்னு நெனச்சிகிட்டே சரி எப்பிடியும் பதிவு போடறேன்னு நாக்கு குடுத்தாச்சு ச்ச வாக்கு குடுத்தாச்சு காப்பாத்தணுமில்ல!!

அதனால அன்னைக்கு என்னைக்கோ ஒரு நாள் எடுத்த அந்த சபதத்தை அதாவது இனிமே சபதமே எடுக்க மாட்டேன்கிறத இன்னைக்கு புதுப்பிச்சிக்கிறேன்.

ஜோரா கைதட்டுங்கப்பா எல்லாரும், விசிலடிக்கிறவங்க விசிலடிங்க!!

அதுக்கு முன்னாடி புத்தாண்டு தின சபதம் உங்களுக்கும் இருக்குமே.. இனிமே விடாம டைரி எழுதறது ,இனிமே தினம் வாக் போவது,இனிமே சக்கரைஇல்லாமல் காஃபி, இனிமே ஃபிகர்பக்கம் தலைவைப்பதில்லை இனிமேமெகா சீரியல் பாக்றதில்ல இப்படி ஏதாவது இருக்குமே?

கொஞ்சம் விரிவா எழுதுங்க ப்ளீஸ்,,.... அப்படியே நீங்க எழுத விரும்பும் 4பேரையும் அழைச்சிடுங்க.என்ன?

சபதம் எடுத்தவங்களில் நான் அழைக்கு நாலுபேர்..நாலுபேருக்கு(ம்) முன்கூட்டியே நன்றி!!

1. காயத்ரி நாதன்
2. புதுகை தென்றல்
3.ரூபஸ் அருள்
4. நந்து f/o நிலா

வாங்க வந்து கலக்குங்க!!
பிரியங்களுடன்

மங்களூர் சிவா