செல்(வ)லமடி நீ எனக்கு - 6 (நிறைவு பகுதி)

பாகம்1, பாகம்2, பாகம்3,
பாகம்4, பாகம்5,

ஜெகநாதன் பணத்தை தயார் செய்து எடுத்துக்கொண்டு தன் காரில் ஏறி கிளம்பினார்.

சரி மாப்பி இப்ப கெளம்பினா சரியா இருக்கும் வாடா என இரண்டு பேரும் பாரிலிருந்து வெளியேறினர். அதுவரை பக்கத்து டேபிளில் குடித்துக்கொண்டிருந்த ஒருவன் இவர்கள் பின்னால் மெல்ல பின்தொடர்ந்து நடந்தான்.

இரண்டு பேரும் காரில் ஏறி கிளம்பினார்கள். பைபாஸை அடைந்து வலது பக்கமாக திரும்பி சற்று தொலைவு கூட சென்றிருக்காது எதிர்புறமிருந்து வேகமாக வந்த லாரியை கண்டு இவர்கள் சுதாரிப்பதற்குள் லாரி கார் மீது இடித்து கார் அப்பளமாய் நொறுங்கியிருந்தது.* * * * * *

'சஷா' மோகனை கொஞ்சம் என் கேபின்க்கு வரச்சொல்லுமா என் இன்டர்காமில் சொல்லிவிட்டு லேப்டாப்பில் மூழ்கினார் ஜகனாதன்.

மோகன் உனக்கு ரொம்ப தாங்க்ஸ் தாங்ஸ்டா கட்டி அணைத்துக்கொண்டார்.

எதுக்கு இப்பிடியெல்லாம் சொல்லறீங்க ரஷ்மிக்கு ஒண்ணுன்னா எப்பிடி சும்மா இருக்கிறது. நீங்க எனக்கு மொதல்ல பெரியப்பா அப்புறம்தான் பாஸ். கண்ணீர் துளிர்த்தான். சின்ன பொண்ணுங்களை எப்பிடியாவது ஏமாத்தி போட்டோ எடுத்து ப்ளாக் மெயில் பண்றதே இவனுங்களுக்கு வேலை.

பணம் போனா கூட பரவாயில்ல ஆனா இவனுங்களால எவ்வளவு பேருக்கு பிரச்சனை.
லாரிகாரனுக்கு, போலீஸ் கேஸ் எல்லாம் பாத்துப்ப இல்ல.

கேஸ் எல்லாம் ரொம்ப ஈஸி ரெண்டு பேரும் செம தண்ணி அதனால பிரச்சனை இல்லை. எல்லாம் நான் பாத்துக்கறேன்.

சுபம்
~~~~~~~~~

Posted in Labels: |