செல்(வ)லமடி நீ எனக்கு - 5

ஜகனாதனும் அவர் மனைவியும் மிகுந்த கவலையும் அச்சத்துடனும் உட்கார்ந்திருந்தார்கள்.

அங்கு நிலவிய மவுனம் அவர்களின் அச்சத்தை தூண்டுவதாக இருந்தது.

போட்டோவின் பின்னால் ஜஸ்ட் சாம்பிள் என எழுதியிருந்தது எதோ பெரும் விபரீதத்தை குறிப்பதாக அவ்ருக்கு தோன்றியது.

போலீஸ் கேஸ் என போனால் பெயர் தொலைகாட்சி, பேப்பர் என வந்துவிடும் பெண்ணின் எதிர்காலம் என்ன ஆவது. குடும்ப மானமே போய்விடும். யாரிடமும் பகிர்ந்து கொள்ளவோ அல்லது என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்கவோ முடியாததாக இந்த சம்பவம் அமைந்துவிட்டது.

போட்டோவில் பார்க்கும்போதே படிக்கும் பையன் இல்லை என தெளிவாக தெரிந்தது. அப்படியென்றால் யார் அவன்? எப்படி பழக்கம்.

இருவரும் ரஷ்மியின் அறையில் எதாவது கிடைக்கிறதா என தேடிப்பார்த்தனர். ஏமாற்றமாய் ஒன்றும் கிடைக்கவில்லை.

அவரின் கை தொலைபேசி ஒலித்தது

ஹாய் மாம்ஸ் கொரியர் கிடைச்சதா போட்டோ நல்லா வந்திருக்கா இல்லைனா சொல்லு வேற ப்ரிண்ட் வேணுமா இல்ல வேற போட்டோவே வேணுமா வழக்கமா சினிமா வில்லன்கள் சிரிப்பார்கள் இவன் சிரிக்கவில்லை

ஹலோ யார் பேசறீங்க என்ன .....

பாயிண்ட்க்கு நேரா வரேன், ஒரு ஆறு லட்ச ரூவா குடுத்திருங்க எல்லா போட்டோவும் குடுத்துடறோம். அப்புறம் பணம் குடுக்காம போலீஸ் அது இதுன்னு போனா என்ன நடக்கும்னு நான் சொல்ல வேண்டியதில்ல .

ஞாயித்துகிழமை சாயந்திரம் 7 மணிக்கு சீலநாயக்கன் பட்டி பைபாஸ் தாண்டி கொண்டலாம்பட்டி பைபாஸ்க்கு நடுவில திவ்யா தியேட்டராண்ட நம்ம ஆளு வெயிட் பண்ணுவான் குடுத்திட்டு போட்டோ வாங்கிக்கங்க.

சிறிது நேரத்தில் செல்லிற்கு அழைப்பு வந்த எண்ணை தொடர்புகொள்ள முயன்ற போது ஸ்விச்ட் ஆப் என செய்தி வந்தது.

(எவ்வளவு நாள்தான்யா போன்ல ப்ளாக்மெயில் பண்ணுவாங்கன்னு கேக்குறவங்களுக்கு அமெரிக்காலருந்து ஆப்ரிக்கா வரைக்கும் அதுதான் யுனிவர்சல் ஸ்டாண்டர்ட்)

நான்கரை மணிக்கு ரஷ்மி பள்ளியிலிருந்து வந்தாள்

கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஏதும் கூறாமல் கண்ணீர் ஒன்றையே பதிலாக தந்துகொண்டிருந்தாள் ரஷ்மி.

உயிருக்கு உயிராய் வளர்த்த செல்ல மகள் இவ்வாறு கண்ணீர் வடிப்பது நெஞ்சை பிசைவதாக இருந்தது.

அவளின் அம்மா மெதுவாக அவளிடம் விசாரித்தபோது பஸ் ஸ்டாண்டில் நடந்த கலாட்டா பற்றி சுருக்கமாக சொன்னாள் சூர்யா பற்றி ஏனோ ஏதும் சொல்லாமல் மறைத்தாள்.

* * * * * *
ஹைடா என அழைத்தவாறே அந்த பார் அண்ட் ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்தவன் அங்கிருந்த சூர்யாவிடம் என்னடா அந்த பொண்ணை உசார் பண்ணிட்ட போலிருக்கு தியேட்டர்ல பாத்தேன்.

எண்ணன்னே சாப்பிடறீங்க என வந்த சிறுவனிடம் குவாட்டர் எம்சி ஒரு வாட்டர் பாக்கட் சிப்ஸ் என்று சொல்லி மாப்ளை காசு குடுடா என சூர்யாவின் பாக்கெட்டுக்குள் உரிமையாக கையை விட்டு நூறு ரூபாய் எடுத்து பையனிடம் கொடுத்து அனுப்பினான்.

இல்லடா இன்னும் ஓகே ஆகலை அவ செயின்க்காகதான் இன்னைக்கு வந்தா அதைதான் நாம ஏற்கனவே வித்தாச்சே அத எங்கிருந்து குடுக்குறது. அதே மாதிரி ஒரு கவரிங் வாங்கி வெச்சிருக்கேன். ஆனா அதையும் இப்ப குடுக்க போறதில்ல. இப்ப குடுத்துட்டா அப்புறம் எப்பிடி அவளை டீல் பண்றது. சரி உன் மேட்டர் என்னாச்சு? என கேட்ட சூர்யா ஏற்கனவே மூக்கு முட்ட குடித்திருந்தான்

இல்ல மாமு அந்த புள்ளை பேரு என்ன ரம்யா

ஆங் அந்த புள்ளையோட அப்பன் நாம நெனைக்கிற மாதிரி அவ்ளோ வெயிட்டான பார்ட்டி இல்ல. சொம்மா எதுக்கு வேஸ்ட்டா அதுதான் ட்ரை பண்ணலை.

சரி ரஷ்மி அப்பனுக்கு போன் பண்ணியா பணத்துக்கு என்ன சொன்னான்?

போன் போட்டு இடமும் டைமும் சொல்லிட்டேன் அந்தாளு ஒண்ணும் சொல்லலை.

சரி திரும்ப ஒரு போன் போடு

தன் பாக்கெட்டிலிருந்த போனை எடுத்து உயிர்ப்பித்தான்.

ஜகனாதன் என்ன எல்லாம் ஞாபகம் இருக்கில்ல எதாவது சொதப்பினீங்க உங்களுக்குதான் கஷ்டம் ஞாயித்துகிழமை அதாவது இன்னைக்கு 7மணி திவ்யா தியேட்டர் என சொல்லி போனை அணைத்தான்.

(தொடரும்)

Posted in Labels: |