வெண்பொங்கல் செய்முறை

தேவையான பொருட்கள்

பச்சரிசி 1 பங்கு
பயத்தம் பருப்பு 1கரண்டி
மிளகு, சீரகம் 1 மேசைக் கரண்டி
முந்திரிப் பருப்பு 18
நெய் தாராளமாக
இஞ்சி சிறிதளவு
உப்பு தேவையானளவு
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

அரிசி, பருப்பைக் களைந்து, ஒன்றரை பங்கு தண்ணீர் விட்டு, பானையிலோ,ரைஸ்குக்கரிலோ வேக விடவும். வெந்ததும் உப்பு சேர்க்கவும். மிளகு, சீரகத்தைஒன்றிரண்டாகத் தட்டி, நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். இஞ்சியைத் தோல் நீக்கிசிறிதாக நறுக்கி, கறிவேப்பிலையுடன், சிறிது நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.

முந்திரியையும் நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். கடைசியாக மீதமுள்ள நெய்யைஊற்றிக் கிளறி, ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

Posted in Labels: |