செல்(வ)லமடி நீ எனக்கு - 2


அலோ எச்சூஸ் மி
அலோ

அடியே சில்லுவண்டு
என்னாடி மாமனை கண்டுக்கவே மாட்டிங்குற
கூப்பிட்டுகினே இருக்கேன்

என்ன மச்சி பாப்பாகிட்ட ஒரு ரியாக்சனும் இல்ல
மவுனம் சம்மதம்டா மச்சி

அவ சொக்காவ பிடிச்சி இழுடா

டேய் யார்ரா அவன் ஏண்டா பைக் மேல கார மோதின

டேய் பாடு
தகராறுக்கு மூன்று பேர் முன்னேற
பேச பேச பொளீரென ஒருவனுக்கு அறை விழுந்ததும் தடுமாறிப்போனான்
சுதாரிப்பதற்குள் இன்னொரு அறை விழுந்தது

டேய் என்னடா இங்க கலாட்டா யார்ரா இந்த பொண்ணு வாம்மா இங்க என்ன பிரச்சனை

ஓடுங்கடா போலீஸ் என பைக்கை கீழே போட்டு அந்த வழியாக சென்ற 52ம் எண் பேருந்தில் ஓடி தொத்திக்கொண்டார்கள்.

என்னம்மா உன் பேர்

அழும் தொனியில் சார் என் பேர் ரஷ்மி இங்க ஃபாத்திமா காண்வெண்ட்ல நைன்த் படிக்கிறேன். பஸ்ஸுக்கு நின்னுகிட்டிருந்தேன் அப்பதான் இந்த ரவுடி பசங்க என் ட்ரெஸ்ஸ பிடிச்சி இழுத்து கலாட்டா பண்ணானுங்க நல்ல வேளை நீங்க வந்ததும் ஓடீட்டாங்க. ரொம்ப தாங்க்ஸ் சார்.

சரி வாம்மா கார்ல உன்னைய ஸ்கூல்ல விட்டுடறேன்.

இல்ல சார் பஸ் வருது நான் போயிக்கறேன்.

சரி ஓகே. இது என் விசிட்டிங் கார்ட் வழில திரும்ப எதாவது பிரச்சனைன்னா கூப்பிடு ஓகே
டேக் கேர்

கார்டை பார்த்துவிட்டு எஸ்.கே பைனான்ஸ்னு இருக்கு
நீங்க போலீஸ் இல்லையா

இல்ல என் பேர் சூர்யா.
பிசினஸ் பண்ணிகிட்டிருக்கேன். இங்க குகை பாலம் கிட்டதான் என் ஆபீஸ்.
பாத்து ஜாக்கிரதையா போம்மா.

(தொடரும்)

Posted in Labels: |