ச்சும்மாஆஆ

விகடகவியா இருந்த தெனாலிராமன் பற்றி அவருடைய அறிவு சாதுர்யம் பற்றி எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அதை வெச்சு ஒரு ரீமிக்ஸ்.

நம்ம இம்சை 23ம் புலிக்கேசி அரண்மனைல இருந்த மூணாவது ராணி மேல மந்திரி மங்குனி பாண்டிக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை.

அந்த காலத்துல அந்தபுரத்துல எல்லாம் ஏகப்பட்ட ராணிங்க இருப்பாங்க. அந்தம்மாவும் நல்லா கொழுக் மொழுக்குனு நம்ம (...ம் யார சொல்லலா...ம்) நமீதா மாதிரி இருக்கும்னு வெச்சிக்கங்களேன்.

அவிங்கள எப்படியும் ஒரு தடவயாவது நம்ம உலக நாயகன் ஸ்டைல்ல கிஸ் பண்ணனும்னு. ஒவ்வொருதடவை பாக்கறப்பவும் அந்த ஆசை ஜாஸ்தியாகிட்டே போச்சு. ஆனா என்ன செய்ய முடியும் ராணி ஆச்சே அவங்க.

நம்மாளு ராமன் கிட்ட போறார். போய் புலம்புறார்.
முடியல .....என்னால முடியல......
நீதான் எதாச்சும் செஞ்சு இதுக்கு ஹெல்ப் பண்ணனும்னு அழ ஆரம்பிச்சிட்டார்.

நம்ம ராமனும் என்னடா இவனோட பெரிய எழவா போச்சேன்னு நினைச்சுக்கிட்டு சரி நான் எதாச்சும் பண்ணி அதுக்கு வழி பண்ணறேன் ஆனா நீ எனக்கு 1000 பொற்காசு குடுக்கனும்னு சொல்றாப்டி. மயக்கத்துல மங்குனியும் சரி ஓகேன்னு சொல்லிடறாப்டி.

அடுத்த நாளு தெ.ராமன் அந்தம்மா போடற 'லிப்டிக்' ல ஒரு மருந்து தடவிப்புடறார் அதுலருந்து அந்தம்மா உதடெல்லாம் ஒரே அரிப்பு எந்தெந்த வைத்தியரெல்லாமோ வந்து பாக்கறாங்க எல்லா ராஜ வைத்தியமும் நடக்குது ஆனாலும் சரி செய்ய முடியல.

அந்தம்மாவோ துடியா துடிக்குது அதை பாத்து இம்சை ராஜாவுக்கும் ரொம்ப சங்கடமா போவுது என்ன பண்ணறதுன்னு தெரியாம எல்லாரும் முழிக்கறாங்க.

ராஜாகிட்ட ராமன் போய் சொல்லறார் அரசே நம்ம மந்திரி மங்குனி பாண்டியரின் எச்சிலில் ஒரு விசேஷ குணம் இருக்குது அவர் எச்சில் பட்டால் இது சரியா போயிடும்னு சொல்லறார் இம்சையும் வேற வழியில்லாம சரி எதோ பாத்து பண்ணுப்பா ராமான்னிடறார்.

மங்குனியும் இதுதான் சாக்குன்னு நமீதாவுக்கு (அட அந்த மூணாவது ராணிக்குப்பா)
உலக நாயகன் ஸ்டைல்ல நிறையவே குடுத்திடறார். கொஞ்ச நேரத்துல அந்த மருந்தோட பவர் குறைஞ்சு ராணிக்கும் அரிப்பு போயிடுது.

இம்சைக்கு ரொம்ப சந்தோசமாயிடுது.

மங்குனிபாண்டி அவருக்குதான் காரியம் முடிஞ்சி போச்சே. ராமனுக்கு சொன்னபடி பொற்காசு குடுக்காம அல்வா குடுத்திடறார்.

சின்ன பசங்க / பெண்கள் எல்லாம் இதுக்குமேல தயவு செஞ்சு படிக்க வேண்டாம் என மிக தாழ்மையுடன் கேட்டு 'கொல்லு'கிறேன்

பழி வாங்கும் படலம் GENTS SPECIAL
தொடர்சி நாளைக்கு

Posted in Labels: |