நீயெல்லாம் ஒரு பொம்பளையா??????

குமார் குட்டிபோட்ட பூனையாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். ஒரு முக்கியமான மெயிலை நேற்று இரவிலிருந்து எதிர் பார்க்கிறான் இன்னும் வரவில்லை.

அவள் மிக சமீபமாக ‘ஆர்க்குட்’ல் பழக்கம். அவ்வப்போது ஸ்க்ராப் அனுப்புவது வாழ்த்து அனுப்புவது என்று தொடர்ந்து இருவரும் அறிமுகமாகியிருந்தனர். அந்த நம்பிக்கையில் அனுப்பிய மெயில் இன்னும் பதில் வராததால்தான் இவ்வளவு குழப்பம்.

சாதாரணமாக ஏழு எட்டுமணிநேரம் ஆன் லைனில் இருக்கும் அவள் சரி அல்லது இல்லை எதாவது சொல்லி பதில் அனுப்பாதது சற்று கலவரப்படுத்தியது.

இப்படி மண்டை காய விடும்
'நீயெல்லாம் ஒரு பொம்பளையா?????’
என மனதில் கடிந்து கொண்டான்.

பிப்ரவரி 14, இது இன்றுவந்த இதேபோன்ற 10வது மெயில். இந்த பார்ட்டியிடமிருந்து பைசா தேறாது என குமாரின் மெயிலை டெலிட் செய்து கொண்டிருந்தான் ஆர்க்குட்டில் ‘தீபா வெங்கட்’வயது 35, சிங்கிள் என்ற பெயரில் பலரிடம் சாட் செய்யும் நைஜீரியன்.

குறிப்பு : இந்த கதையில் சம்பவங்கள் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் புண் படுத்துவதற்காக அல்ல.

தலைப்பு மட்டும் தமிழ்மணத்திலிருந்து சுட்டது.

Posted in Labels: , |