கொலைவெறி

டட்டட்டட் டட்ட்டட்டட்
வீட்டு வாசலில் இரண்டு ஆட்டோ வந்து சரக் சரக் என் நிற்கிறது அதில் மொத ஆட்டோவிலிருந்து அபி அப்பா ஆக்ரோசமாக இறங்குகிறார் கையில் ஒரு அருவா.

பின்னால் இருந்த ஆட்டோவிலிருந்து அதோ ஆக்ரோசத்துடன் 4 பேர் நம்ம குசும்பன், தம்பி, கோபி, அய்யனார்.

அ.அப்பா: இன்னைக்கு 2nd Part போடறென்னு சொன்ன சிவாட்ட பதிவ வாங்கனும் இல்ல அவன் கதைய முடிக்கனும் கூப்பிடுங்கய்யா அவனை

எல்லாரும் பிளாட் முன்னாடி நின்னு கோரஸாக சிவா........... சிவா...........

குரூப் : தல வீடும் பூட்டிருக்கு ஆளும் ஆப் லைன்ல

அ.அப்பா : அப்படின்னா வீட்டுக்குள்ள தான் இருப்பான் உடைங்கய்யா பூட்ட

பூட்ட உடைச்சு உள்ள வந்தால் ஜாலியா கம்ப்யூட்டர்ல கேம்ஸ் விளையாடிக்கிட்டிருக்கேன்.

அ.அப்பா : வீட்டை பூட்டிட்டு உள்ள இருக்கியே உனக்கு வெக்கமா இல்ல?

நான் : பூட்ன கதவ உடச்சிகிட்டு உள்ள வறீங்களே இது அநியாயமா இல்ல. ஆமா என்ன விசயம்

அ.அப்பா : 2nd Part போடறென்னு நேத்து சொன்னியே எப்ப போடுவ?

நான் : ஹாங்?

அ.அப்பா : 2nd Part போடறென்னு நேத்து சொன்னியே எப்ப போடுவ?

நான் : கதை தோனறப்ப போடுவேன்

அ.அப்பா : கதை எப்ப தோனும்

நான் : 2nd Part போடறப்ப தோனும்

(இந்த போல்ட் டயலாக்க ஒரு 4 தடவ படிச்சிக்கங்க)

அ.அப்பா : இது சரிப்பட்டு வராது இவன் லெப்ட் கிட்னி எடுத்துருங்கய்யா

நான் : தாமதம்

அ.அப்பா : எதுக்கு

நான் : காலைல 7 மணிக்குதான் அபி பாப்பா வந்து வெளையாடறதுக்கு வேணும்னு புடுங்கிகிட்டு போச்சு

அ.அப்பா : அப்ப ரைட் கிட்னிய எடுத்துருங்க


நான் : இது ரொம்ப தாமதம் நட்ராஜ்க்கு ஒன்னு வேணும்னு அதையும்தான் புடுங்கிகிட்டு போச்சு

அ.அப்பா : அப்ப கிட்னியெ இல்லியா

நான் : கொஞ்சூண்டு சட்னி வேணா இருக்கு ஆளுக்கு ஒரு ஸ்பூன் அடிச்சிட்டு கிளப்புங்க

அ.அப்பா ஆக்ரோசமாகி அருவாளை தூக்கிபுடிச்சிகிட்டு வெட்ட ஓடி வர்ரார் பின்னாடியே நாலு பேரும் வரிசையா. நான் 4வது மாடிலருந்து கீழ இறங்கி ஓடி கார் பார்க்கிங்ல இருக்கிற பில்லரை சுத்தி திரும்ப மேல ஏறி திரும்ப படிக்கட்டுல இறங்கி கார் பார்கிங் லாட்க்கு வந்தாச்சு

நான் : உங்களுக்கும் மூச்சு இறைக்குதுல்ல

அ.அப்பா : ஏன்யா இப்படி ஏறி இறங்கி ஓடற

நான் : பின்ன பேசிகிட்டிருக்கும்போது திடீர்ன அருவாள எடுத்தா ஓடாம பின்ன

இந்த டயலாக் முடியறதுக்குள்ள துபாய் சிங்கங்கள் 4 பேரும் ஆக்ரோசமா மொகத்த வெச்சுகிட்டு நாலு ரவுண்ட் சுத்தி 5 வது ரவுண்ட் சுத்த ஆரம்பிச்சிட்டாங்க

நான்: ஏய் யேய் எதுக்குய்யா வயசுக்கு வந்த புள்ளைக்கு சடங்கு சுத்தறமாதிரி சுத்தறீங்க அடிகிறதா இருந்தா அடிச்சுபுட்டு துபாய் கிளம்புற வழிய பாருங்க

குசும்பன் கையை ஓங்கி அடிக்க பாத்தா பக்கத்துல அ.அப்பா இன்னும் கொஞ்சம் இல்ல அடி பட்டிருக்கும்.

அதுக்குள்ள டக்னு ஒரு கை வந்து தடுக்குது.
(டான் ட டான் டடான் மீஜிக்பா)

பாத்தா அது அ.அப்பாவோட லெப்ட் கைதான் அது

அ.அப்பா : (ஏறக்குறைய அழுகிற வாய்ஸில்)குசும்பா உன் கடமை உணர்சிக்கு ஒரு அளவே இல்லியா அடிக்கனும்னு வந்த சரி யார அடிக்கனும்னு தெரிஞ்சிக்க வேணாமா?

எல்லாரும் என்னைய தேட நான் தான் எப்பவோ எஸ் ஆயிட்டனே

போங்கப்பா எல்லாரும் போய் வேலை வெட்டிய பாருங்க