முயற்சி திருவினை ஆக்கும்

ஒருத்தன் அதி தீவிர பக்தன். ஒருநாள் கடவுள்கிட்ட கடவுளே என் தொழில் பெருத்த நஷ்டம் ஆயிடிச்சு நான் ரொம்ப நொடிஞ்சி போயிட்டேன் வர்ற லாட்டரி குலுக்கல்ல மொத பரிசு 1 கோடி எனக்கு கிடைக்கற மாதிரி பண்ணிடு நான் பொழைச்சுகிறேன்னு வேண்டி அழுதானாம்.

அடுத்த நாள் திரும்ப கடவுள்கிட்ட கடவுளே நான் எவ்வளவு வேண்டியும் நீ கருணை காட்டலை என் தொழில் மூழ்கிடிச்சு இப்பவாவது கருணை காட்டு இன்னைக்கு குலுக்கல்லயாவது 1 கோடி கிடைக்கிற மாதிரி பண்ணு இல்லைனா என் வீடு ஜப்தியாயிடும்னு கதறி அழுது வேண்டினான் கடவுளுக்கும் ஐயோ பாவம்னு ஆயிடிச்சி.

ஆனால் அடுத்த நாள் திரும்ப வந்து கடவுளே என் மேல உனக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லயா என் தொழில் போயிடிச்சி, வீடும் ஜப்தியாயிடிச்சி அதனால என் பொண்டாட்டி பிள்ளைங்கள்லாம் என்னைய வெறுத்து விட்டுட்டு போக போறாங்க இந்த தடவயாவது 1கோடி கிடைக்கிற மாதிரி பண்ணுன்னு பொரண்டு அழ ஆரம்பிச்சான்.

கடவுள் டென்ஷனாகி முட்டாபயலே அதுக்கு போய் லாட்டரி டிக்கட் வாங்குடா மொதல்லன்னு லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டார்.

சொல்ல வருவது என்ன என்றால் எதாவது ஒன்று நடக்க வேண்டும் என நாம் நினைத்தால் ஆசைப்பட்டால் அதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும் அப்போதுதான் அது நிறைவேறும்.

முயற்சியே செய்யாமல் நிறைவேறவில்லை எனக்கு அதிர்ஷ்டமே இல்லய்யா என புலம்புவது வீண்.

டிஸ்கி : நிறைய பின்னூட்டம் வேணும்னா நல்ல பதிவாக போட வேண்டும் என்பது இல்லை, மொக்கை போட்டாலே போதும். பதிவுக்கும் பின்னூட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது வேறு விசயம் :-)).

தமிழில் பங்கு சந்தை குறித்த எனது இன்னொரு வலைப்பூவிற்கு செல்ல இங்க க்ளிக் பண்ணுங்க.

Posted in Labels: |