வலை பதிவர் பட்டறை - 100% மொக்கை

மங்களூரில் வலை பதிவர் பட்டறை

மாமா வாடா போய் டீ சாப்புட்டு வரலாம்.

இல்ல நீ போப்பா நான் இப்பதான் டீ சாப்டேன்

அட பரவாயில்ல வாப்பா ரொம்ப கஷ்டப்பட்டு இழுத்துட்டு வந்தாச்சு.

'தம்மா எரடு 'சா' கொடு'

திண்டி ஏனு இதே ........
....... ஆயித்து கொடு

(நாளைக்கு பின்ன பதிவர் பட்டறைல போண்டா குடுக்கலைன்னு ஒரு வார்த்தை வந்திடப்படாதில்ல)

நண்பரிடம் இந்த 'ப்ளாக்' எல்லாம் தெரியுமா உனக்கு?

"அபார்ட்மெண்ட் பில்டிங்கதான் 'A'ப்ளாக் 'B' ப்ளாக் னு சொல்லுவாங்களே தெரியுமே".

அடப்பாவி அது இல்ல. இந்த இண்டர்நெட்ல தமிழ்ல எழுதுறாங்களே அவங்க பேர் 'ப்ளாக்கரஸ்'

"என்னது blackers ஆ?"

blackers இல்ல bloggers

அவங்க எழுதற பக்கத்துக்கு பேர் blog.

"சரி இப்ப என்ன அதுக்கு"

டேய் இப்ப அந்த மீட்டிங்லதான் இருக்கோம்

நண்பர் மெர்சலாகி சுத்தி பார்க்கிறார்.

டேய் நாம தான்டா அது.

"எனக்குதான் எதுவும் தெரியாதுன்னு சொல்லிகிட்டிருக்கேன்"

அதுக்கென்ன நான் உனக்கு 'ப்ளாக்' ஆரம்பிச்சி குடுக்கிறேன்.

"சரி எதோ எழுதுவாங்கன்னு சொன்னியே எனக்குதான் எதும் வராதே"

இப்ப 'ப்ளாக்' வெச்சிருக்கவங்கல்லாம் என்ன பெரிய எழுத்தாலர்களா? எதோ தோணினதை எழுதவேண்டியதுதான். அப்டி எதும் தோனலினா இருக்கவே இருக்கு காப்பி பேஷ்ட்

அப்ப்டியே ஒரு டிஸ்கி போட்டுற வேண்டியதுதான்

நான் ஒண்ணும் பாலகுமாரனும் இல்ல சுஜாதாவும் இல்ல நான் எழுதுரது ரொம்ப கேவலமாதான் இருக்கும்னு.

பதிவ படிச்சா அனுபவிக்கனும் ஆராயப்பிடாது

வேணும்னா படி இல்லினா 'xய்ழ்fச்' போ - ன்னு கேவலமா திட்டி ஒரு லைன்

இப்படி எதோ ஒன்னு.

இப்படிதான்யா ஓடிகிட்டிருக்கு தமிழ் வலைப்பூ உலகமே.

ஸோ இன்னும் ஒரு புதிய பதிவர் கூடிய விரைவில் உருவாக போகிறார் மங்களூரிலிருந்து.

டிஸ்கி:

சரி. இந்த மொக்கை போதும்னு நினைக்கிறேன். இப்பதான் தமிழ்மணத்தில பேர் வருதானு செக் பண்றதுக்குதான் இந்த மொக்கை பதிவு

Posted in Labels: |