ச்சும்மாஆ

ஒரு நாள் நிலா அப்பா ஈரோடு ப்ரப் ரோடுல நிலாவை தூக்கிகிட்டு நடந்து போய்கிட்டிருந்தாராம்.

அப்ப அங்க ஒரு கடைல எடை பாக்கிற மெசின் இருந்தது,
அதை பாத்ததும் நிலா அப்பா..அப்பா.. எனக்கு எடை பாக்கனும்னு கேட்டு அடம் புடிச்சது. புள்ளைங்க கேட்டு என்னைக்கு நாம இல்லன்னிருக்கோம். சரின்னு மிசின்ல நிக்க வெச்சதும் காசும் நாந்தான் போடுவேன்னு அடம்.

வேற வழி இல்லாம சரின்னு கைல ஒரு ரூவா காயினும் குடுத்தார்.

ஆனா எவ்வளவு எட்டி எட்டி பாத்தும் புள்ளையால அதுல காசு போடறதுக்கு முடியலை.

உடனே நிலா அப்பா பேஜாராகி (பின்ன புள்ளை கஷ்டப்படுதில்ல)
புள்ளைய கைல தூக்கி புடிச்சிகிட்டு,

ஆம் இப்ப காசு போடுடா செல்லம்னார். நிலாவும் காசு போட்டுச்சு, எடை சீட்டும் வந்தது எடை பூஜ்ஜியம்ன்னு.

Posted in Labels: |