நிலா பொண்ணு நடக்குது

Posted in Labels: |

நம்ம 'தலை'ங்களுக்கெல்லாம் வேலை வெட்டி இல்லைன்னா!!















































Posted in Labels: |

இம்சை அரசிக்கு வாத்துக்கள்




புதியவர்களுக்காக - 5 (THINK BIG)

Posted in Labels: |

நீயெல்லாம் ஒரு பொம்பளையா??????

குமார் குட்டிபோட்ட பூனையாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். ஒரு முக்கியமான மெயிலை நேற்று இரவிலிருந்து எதிர் பார்க்கிறான் இன்னும் வரவில்லை.

அவள் மிக சமீபமாக ‘ஆர்க்குட்’ல் பழக்கம். அவ்வப்போது ஸ்க்ராப் அனுப்புவது வாழ்த்து அனுப்புவது என்று தொடர்ந்து இருவரும் அறிமுகமாகியிருந்தனர். அந்த நம்பிக்கையில் அனுப்பிய மெயில் இன்னும் பதில் வராததால்தான் இவ்வளவு குழப்பம்.

சாதாரணமாக ஏழு எட்டுமணிநேரம் ஆன் லைனில் இருக்கும் அவள் சரி அல்லது இல்லை எதாவது சொல்லி பதில் அனுப்பாதது சற்று கலவரப்படுத்தியது.

இப்படி மண்டை காய விடும்
'நீயெல்லாம் ஒரு பொம்பளையா?????’
என மனதில் கடிந்து கொண்டான்.

பிப்ரவரி 14, இது இன்றுவந்த இதேபோன்ற 10வது மெயில். இந்த பார்ட்டியிடமிருந்து பைசா தேறாது என குமாரின் மெயிலை டெலிட் செய்து கொண்டிருந்தான் ஆர்க்குட்டில் ‘தீபா வெங்கட்’வயது 35, சிங்கிள் என்ற பெயரில் பலரிடம் சாட் செய்யும் நைஜீரியன்.

குறிப்பு : இந்த கதையில் சம்பவங்கள் பாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. யாரையும் புண் படுத்துவதற்காக அல்ல.

தலைப்பு மட்டும் தமிழ்மணத்திலிருந்து சுட்டது.

Posted in Labels: , |

அவள் விகடனின் 4 பக்க மொக்கை.

மொக்கை போடுவது நம் யாருக்கும் புதிதல்ல ஆனால் இந்த மொக்கைகளையெல்லாம் எடுத்து தொகுத்து ஒரு நாலு பக்கத்துக்கு மொக்கை போட்டிருக்கும் அவள் விகடனை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

எல்லாரும் இப்படிதான் மேட்டர் இல்லாம இருக்குறாங்களோ?!

சாம்பார்ல உப்பு போடனும் , புளி கரைச்சு ஊத்தனும் , சாம்பார் பொடி போடனும்ங்கிறதெல்லாம் எழுதி முடிச்சிட்டாங்களோ?!

என்ன கொடுமை அபி அப்பா இது??

படம் பெரிதாக தெரிய படத்தின்மேல் க்ளிக் செய்யவும்.



























Posted in Labels: |

ஏய் புள்ள இது உனுக்கே நியாயமா??

Posted in Labels: |

கோலங்கள் கோலங்கள்

"அவள் போடும்
கோல அழகைவிட
அவள் கோலம் போடும்
அழகே அழகு"

கரண்ட் இல்லாமல் கம்ப்யூட்டரை ஆப் செய்துவிட்டு கை ஒடிந்தது போலிருந்தபோது பழைய ஆனந்தவிகடனை புரட்டிகொண்டிருந்தேன். அப்போது படித்த கவிதை கு.நாகராஜ் என்பவர் ஏப்ரலில் எழுதியது. கரண்ட் வந்ததும் அதை ஸ்டேடஸ் மெஸ்ஸேஜாய் போட்டிருந்தேன்.

‘ராம்’ சாட்டில் வந்து இது பா.விஜய் எழுதின கவிதையா அப்படின்னு கேட்டார். இல்லன்னு சொல்லிட்டு கோலம் பற்றிய flash back ல் மூழ்கிவிட்டேன்.

நான் சின்ன பையனா இருக்கப்ப எங்க அம்மா சாமிக்கு முன்னாடி ஒரு ஸ்டார் கோலம் போடுவாங்க. உம்மாச்சிக்கு அதுதான் ஸ்டாண்டர்ட்.

வாசலில் அதிகபட்சமா நடு வரி 9 புள்ளி அதன் பிறகு இரண்டு பக்கமும் இரண்டிரண்டு புள்ளிகளாக குறைந்து வந்து ஒரு புள்ளியில் முடியும் அதில் முறுக்கு பிழிந்ததை போல ஒரு கோலம். அவர்கள் காலத்தில் அதுதான் பாட்டி சொல்லி கொடுத்திருந்தார்களா என தெரியாது.

பொங்கல், தீபாவளி வந்தால் என் அக்காள் தெருவையே கூட்டி பெருக்கி யாரும் நடக்க முடியாத அளவிற்கு தெருவையே அடைத்து கலரிங் எல்லாம் செய்து கோலம் போடுவாள். பின் அதில் ஹாப்பி பொங்கல், ஹாப்பி தீபாவளி என எழுதி வைப்பாள்.

நான் தூங்கி எழுந்து பார்க்கும் போது பாதி கோலம் அழிந்தே போயிருக்கும் இருந்தாலும் மிக அழகாக இருக்கும். என் ஊரில் அனேகமாக எல்லார் வீடுகளிலும் இது போல பெரிய பெரிய கோலங்கள் போடுவார்கள்.

எப்படி அம்மாவிற்கு இவ்வளவு பெரிய கோலமெல்லாம் தெரியாமல் போயிருக்கும் என எனக்கு ரொம்ப நாளாக சந்தேகம் இருந்தது. சில வருடங்களில் அதற்கான விடை கிடைத்தது.

அண்ணன், அக்கா, நான் எல்லாரும் கிராமத்திலேயே படித்ததால் ஒரே பள்ளியில்தான் படிப்பு. அவள் அப்போது 12ம் வகுப்பு. வீட்டில் படிப்பதற்க்காக நோட்டு நோட்டாக வாங்கி கொடுக்க அவள் பள்ளியில் அவள் தோழிகளுடன் சேர்ந்து கோலம் போட்டு பழகியிருக்கிறாள் என்ற உண்மை ரிசல்ட் வந்த அன்றுதான் எங்களுக்கு தெரிந்தது.

எல்லோரும் அவளை திட்டு திட்டென்று திட்ட இதுதான் சாக்கு என நான் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டவன் போல ஆக்ட் கொடுத்து நாலு சாத்து சாத்திவிட்டேன். எவ்வளவு வாங்கியிருப்பேன் எப்ப கணக்க தீர்த்துக்கறதாம்.

அதன் பின் நான் கல்லூரி முடித்து சென்னைவாசியானேன் அங்கெல்லாம் இப்படி பெரிய கோலங்களை பார்த்ததாக நினைவில் இல்லை.

ஈரோட்டில் தினமலரில் வேலை பார்க்கும்போது கோலப்போட்டி நடத்துவார்கள் அப்போது ஆர்கனைசராக சென்ற ஞாபகம்

“அவள் போடும்
கோல அழகைவிட
அவள் கோலம் போடும்
அழகே அழகு”

என அழகான பெண்கள் கோலம் போடும்போது நினைத்திருக்கிறேன் ஆனால் இப்படி கவிதையாக எழுதி வைத்ததில்லை.

மங்களூர்வாசியான பின் அதுவும் இல்லை. நான் பார்த்த கடைசி கோலம் சன் டிவியில் தேவயானியுடையது

கோலங்கள் கோலங்கள்
அழியாத கோலங்கள்
(டொய்ண்ட்ட டொய்ண்ட்ட டொய்ண் டொய்ண் டட
டொய்ண்ட்ட டொய்ண்ட்ட டொய்ண் டொய்ண் டட)
ஆணென்பதும் பெண் என்பதும்
ஆண்டவன் கோலங்களே

இப்படி ஒரு ஐந்து நிமிசத்துக்கு அந்த பாடல் போகும் தேவயானியும் அதில் நடந்துகொண்டே இருப்பார் தினமும். அன்றைக்கு கிளம்பியிருந்தால் இந்நேரம் மங்களூருக்கே வந்து சேர்ந்திருக்கலாம்.

பாட்டு முடிந்தவுடன் அவசர அவசரமாக சேனலை மாற்றிவிடுவேன்.

இது வரைக்கும் பார்த்த கோலம் இதன் பிறகு கேட்ட கோலம். எப்போதாவது ஊருக்கு செல்லும் போது வேறு வழியில்லாமல் அம்மாவுடன் சேர்ந்து அழுவாச்சி சீரியல்கள் பார்ப்பேன்.

அம்மாவும் சன் டிவியை போட்டுவிட்டு அடுப்படிக்கு போய்விடுவார் நான் சேனல் மாற்றினால் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக வந்து திரும்ப சன் டிவிக்கு மாற்றிவிட்டு திரும்ப அடுப்படிக்கு போய்விடுவார் அப்படி வேறு வழியில்லாமல் பார்த்தது இல்லை இல்லை கேட்டது மலர்கள் என்ற தொடரில் வரும்

அரிசி மாவால “கோலம்” போடு
அரளி பூவால மாலை போடு
மாலை போடு
......
......

அரிசி மாவு கோலத்துக்கும் அரளி பூ மாலைக்கும் என்ன சம்பந்தம் என யோசித்துக்கொண்டே இரண்டு மூன்று நாட்கள் அந்த விளங்காத சீரியலை பார்த்தேன் அதுக்குள் அந்த பெண் “வைஷ்ணவி” சூசைட் செய்து செத்து போய்விட்டது. அடடா நாம ரெண்டு நாள் சீரியல் பார்த்ததுக்கு இவ்வளவு எஃபக்ட்டா என நினைத்துக்கொண்டு அதன் பிறகு எந்த சீரியலும் பார்ப்பதில்லை.

உங்களுக்கு பிடிக்காத சீரியல் சன் , ஜெயா, விஜய்யில் வந்தால் பின்னூட்டத்தில் சொல்லிவிட்டு போங்கள் (அந்த மூன்று சேனல்தான் இங்கே வருகிறது) அதை பார்த்து நிறுத்தி வைக்கிறேன்.

MARKETCRASH - HOW TO HANDLE

வாரத்தில 2 நாட்கள் நைட் ஷிப்ட் அதாவது ராத்திரி 8.00மணிக்கு போனா அதிகாலை2.00 - 2.30க்கு வீட்டுக்கு வந்திடலாம். சாதாரனமாக நைட் ஷிப்ட் இல்லாத நாட்களில் காலை 7 மணிக்கு வாக்கிங் போவதை வழக்கமாக கொண்டுள்ள உள்ள எனக்கு நேற்று நைட் ஷிப்ட் இல்லாத போதும் இன்று அலாரம் அடிக்கும் போது எழ முடியவில்லை சரி ஈவ்னிங் வாக் போலாம் என நினைத்து தூங்கி எழும்போது காலை 9.00 மணி.( இது எதாவது instinctஆ என தெரியவில்லை)

டிபன் சாப்பிட்டு மெதுவாக ICICIDIRECT ஆன்லைன் ட்ரேடிங் போர்டல் ஓப்பன் செய்தால் போர்ட்போலியோ மதிப்பு தாறுமாறாக இருக்கு. ட்ரேடிங் குவான்டிடி அப்டேட் ஆகவில்லை.

சரி இது எதோ ICICI போர்டல் ப்ராப்ளம் என நினைத்து மற்ற வணிகதளங்களை செக் செய்யும் போது தெரிந்தது சென்செக்ஸ் 1700 புள்ளிகள்ள் சரிவு 10% down side circuit filter triggered in NSE அதனால் பங்கு வர்த்தகம் 1 மணி நேரம் தடை செய்யப்பட்டுள்ளது.

11மணிக்கு திரும்ப வர்த்தகம் துவங்கியது ஆச்சரியமூட்டும் விதமாக 1400 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 18715.82 (-336) புள்ளிகளில் முடிந்தது.

இதற்குமுன் இது போல 2006 மே மாதம் மார்க்கெட் க்ராஷ் ஏற்பட்டு பங்கு வர்த்தகம் 1 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.

சாதாரனமாக நான் Day Trade செய்வதில்லை. சில சமயம் என் holdingல் இருக்கும் பங்குகளில் செய்வேன். இல்லாத பங்குகளில் Margin trade செய்வதில்லை. ஒரு காலத்தில் அதை மட்டுமே செய்துகொண்டிருந்தேன். அவ்வளவு ரிஸ்க் மற்றும் நேரத்தை விரயம் செய்தும் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை. Day Trade தவறில்லை அது இல்லை என்றால் கையில் இருக்கும் பங்குகளை பணமாக மாற்ற முடியாது.

சரி மார்க்கெட் க்ராஷ்க்கும் Margin Tradingக்கும் உள்ள சம்பந்தம் என்ன என்றால் இது அணுப்பிளவு மாதிரிதான் எல்லா ஸ்டாப் லாஸ்களும் ஒரே நேரத்தில் trigger ஆகி (எரிகிற தீயில் பெட்ரோல் ஊற்றுவதை போல) ஏற்கனவே இறங்கிக்கொண்டிருக்கும் சந்தையை குப்புற தள்ளும்.

இதில் நஷ்டப்படுவவர்கள் இந்த Day traders தான். Quality Stockகளில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு சிறிது நஷ்டம் ஏற்பட்டாலும் விரைவில் அந்த பங்கின்விலை மேலே வந்துவிடும்.

சரி இப்போது என்ன செய்யவேண்டும் முதலாவது

1. Dont Panic.
2. Be patience
3. Cash is the only defensive weapon so sit in cash.
4. If you feel quality stock available at reasonable / cheap price buy in small quantity.
5. Investment is not a one time act. It is continous process.

Winners are not quitters.

All the best.

Posted in Labels: |

வித்யா கலைவாணி அக்காவிற்கு - எச்சரிக்கை

இன்று டாஸ் முடிந்து ஓப்பனிங் பேட்ஸ்மேனாக என்னை அறிவிக்காவிட்டால் எனக்காக காத்துக்கொண்டிருக்கும் இந்த அணிக்கு ஃபுட் பால் விளையாட போய்விடுவேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து 'கொல்லு'கிறேன்



பதிவர் உலக கிரிக்கெட் போட்டி-Update

இது பதிவர் உலக கிரிக்கெட் போட்டியின் latest update.

மங்களூர் சிவா ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்குவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததை அடுத்து ஆட்டத்தை பார்வையிட அமெரிக்காவிலிருந்து விரைந்திருக்கும் அவரது கேர்ள் பிரண்ட் ஹிலாரி டஃப்.

யார் இந்த ஹிலாரி டஃப் முன்ன பின்ன தெரியாது என யாரும் நாக்கு மேல பல்லு போட்டு சொல்லக்கூடாது என்பதற்க்காக அவரது 2 வது படம்.








Posted in Labels: , |

19000 - மீள் கவிதை

சென்செக்ஸ் 19000
கனவுகளோ ஆயிரமாயிரம்


மேலும் படிக்க இங்க க்ளிக் பண்ணுங்க



டிஸ்கி : இந்த கவிதை கடந்த வெள்ளிக்கிழமை 12-10-2007 அதாவது அந்த வாரத்தின் கடைசி Trading day அன்று போஸ்ட் செய்யப்பட்டது.

பதிவர் உலக கிரிக்கெட் போட்டி

பதிவர் உலக கிரிக்கெட் போட்டி




இங்க க்ளிக் பன்னுங்க

Posted in Labels: |

பிட்னெஸ் - பக்கம்

ஒரு 15 நிமிட உடற்பயிற்சி மூலம் அழகான ஒல்லியான வயிறு அமைப்பை பெறலாம். இது ரொம்ப சாதாரண, விரைவான மற்றும் வேகமான வழி.

சாதாரணம் என்று சொன்னேன் ஆனால் கொஞ்சம் கடினமான உடற்பயிற்சி (Simple doesn't mean easy).

கீழே உள்ள 8 பயிற்சிகளையும் 20 தடவை இடைவெளி விடாமல் செய்துவர விரைவில் பலன் கிடைக்கும். ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருக்கும் போக போக சரியாகிவிடும்.

கீழுள்ள 1 - 8 படங்கள் அனிமேஷன் GIF பைல்கள் லோட் ஆகும் வரை சிறிது வெய்ட் ப்ளீஸ்

1.Flutter Kicks






2.Scissor Kicks






3.Ball Transfer Crunch






4.Air Bike Crunches






5.Oblique Crunch






6.Hip Thrusts






7.Belly Blaster






8.Plank Knee-ins






9.Standing Lateral Bend






10.Wide Leg Upward Dog





மை ப்ரெண்டின் அழும்பு

Posted in Labels: |

நவராத்திரி - தசரா

அனைவருக்கும்
இனிய நவராத்திரி தசரா நல்வாழ்த்துக்கள்





இது மங்களூரில் உள்ள குதிரொளி கோகர்னாத் (சிவன்) ஆலயம்

19000

சென்செக்ஸ் இப்ப 19000
கனவுகளோ ஆயிரமாயிரம்

க்ளோபல் எக்சஸ் லிக்விடிடி
எகிற வைக்கும் ஹை பி.பி
சூதனமா வாங்கிவிக்கணும் பங்கு
இல்லைனா ஊதிருவாங்கடி சங்கு

டாலர் ரொம்ப வீக்கா போச்சு
IT ஸ்டாக்கெல்லாம் நாக்குதள்ளிடுச்சு
கண்ணை மூடினா வருது Graph
ஆயிட்டனா நான் இப்ப Crack

ரிஸ்க் இல்லாம வாழ்க்கையில்லை
புரியலைனா நாம ஆம்பிளையில்ல
எதிர்பார்ப்பை கொஞ்சம் கம்மிபண்ணு
லட்சியத்தை அடைஞ்சு சாதனை பண்ணு

டிஸ்கி 1: சென்செக்ஸ் நேற்றைய புள்ளிகள் 18814 இன்று 19000 அடைவதற்கான வாழ்த்து கவிதை

டிஸ்கி 2: அப்படி வராத பட்சத்தில் ‘Over Heated’ மார்க்கட்டை Cool பண்ணுவதற்கான கவிதை

டிஸ்கி 3 : இதுல மானே தேனே பொன்மானேலாம் எங்க போடறதுன்னு தெரியலை அருட்பெருங்கோ, காயத்ரி ஹெல்ப் பண்ணுங்க

Posted in Labels: , |

கொலைவெறி

டட்டட்டட் டட்ட்டட்டட்
வீட்டு வாசலில் இரண்டு ஆட்டோ வந்து சரக் சரக் என் நிற்கிறது அதில் மொத ஆட்டோவிலிருந்து அபி அப்பா ஆக்ரோசமாக இறங்குகிறார் கையில் ஒரு அருவா.

பின்னால் இருந்த ஆட்டோவிலிருந்து அதோ ஆக்ரோசத்துடன் 4 பேர் நம்ம குசும்பன், தம்பி, கோபி, அய்யனார்.

அ.அப்பா: இன்னைக்கு 2nd Part போடறென்னு சொன்ன சிவாட்ட பதிவ வாங்கனும் இல்ல அவன் கதைய முடிக்கனும் கூப்பிடுங்கய்யா அவனை

எல்லாரும் பிளாட் முன்னாடி நின்னு கோரஸாக சிவா........... சிவா...........

குரூப் : தல வீடும் பூட்டிருக்கு ஆளும் ஆப் லைன்ல

அ.அப்பா : அப்படின்னா வீட்டுக்குள்ள தான் இருப்பான் உடைங்கய்யா பூட்ட

பூட்ட உடைச்சு உள்ள வந்தால் ஜாலியா கம்ப்யூட்டர்ல கேம்ஸ் விளையாடிக்கிட்டிருக்கேன்.

அ.அப்பா : வீட்டை பூட்டிட்டு உள்ள இருக்கியே உனக்கு வெக்கமா இல்ல?

நான் : பூட்ன கதவ உடச்சிகிட்டு உள்ள வறீங்களே இது அநியாயமா இல்ல. ஆமா என்ன விசயம்

அ.அப்பா : 2nd Part போடறென்னு நேத்து சொன்னியே எப்ப போடுவ?

நான் : ஹாங்?

அ.அப்பா : 2nd Part போடறென்னு நேத்து சொன்னியே எப்ப போடுவ?

நான் : கதை தோனறப்ப போடுவேன்

அ.அப்பா : கதை எப்ப தோனும்

நான் : 2nd Part போடறப்ப தோனும்

(இந்த போல்ட் டயலாக்க ஒரு 4 தடவ படிச்சிக்கங்க)

அ.அப்பா : இது சரிப்பட்டு வராது இவன் லெப்ட் கிட்னி எடுத்துருங்கய்யா

நான் : தாமதம்

அ.அப்பா : எதுக்கு

நான் : காலைல 7 மணிக்குதான் அபி பாப்பா வந்து வெளையாடறதுக்கு வேணும்னு புடுங்கிகிட்டு போச்சு

அ.அப்பா : அப்ப ரைட் கிட்னிய எடுத்துருங்க


நான் : இது ரொம்ப தாமதம் நட்ராஜ்க்கு ஒன்னு வேணும்னு அதையும்தான் புடுங்கிகிட்டு போச்சு

அ.அப்பா : அப்ப கிட்னியெ இல்லியா

நான் : கொஞ்சூண்டு சட்னி வேணா இருக்கு ஆளுக்கு ஒரு ஸ்பூன் அடிச்சிட்டு கிளப்புங்க

அ.அப்பா ஆக்ரோசமாகி அருவாளை தூக்கிபுடிச்சிகிட்டு வெட்ட ஓடி வர்ரார் பின்னாடியே நாலு பேரும் வரிசையா. நான் 4வது மாடிலருந்து கீழ இறங்கி ஓடி கார் பார்க்கிங்ல இருக்கிற பில்லரை சுத்தி திரும்ப மேல ஏறி திரும்ப படிக்கட்டுல இறங்கி கார் பார்கிங் லாட்க்கு வந்தாச்சு

நான் : உங்களுக்கும் மூச்சு இறைக்குதுல்ல

அ.அப்பா : ஏன்யா இப்படி ஏறி இறங்கி ஓடற

நான் : பின்ன பேசிகிட்டிருக்கும்போது திடீர்ன அருவாள எடுத்தா ஓடாம பின்ன

இந்த டயலாக் முடியறதுக்குள்ள துபாய் சிங்கங்கள் 4 பேரும் ஆக்ரோசமா மொகத்த வெச்சுகிட்டு நாலு ரவுண்ட் சுத்தி 5 வது ரவுண்ட் சுத்த ஆரம்பிச்சிட்டாங்க

நான்: ஏய் யேய் எதுக்குய்யா வயசுக்கு வந்த புள்ளைக்கு சடங்கு சுத்தறமாதிரி சுத்தறீங்க அடிகிறதா இருந்தா அடிச்சுபுட்டு துபாய் கிளம்புற வழிய பாருங்க

குசும்பன் கையை ஓங்கி அடிக்க பாத்தா பக்கத்துல அ.அப்பா இன்னும் கொஞ்சம் இல்ல அடி பட்டிருக்கும்.

அதுக்குள்ள டக்னு ஒரு கை வந்து தடுக்குது.
(டான் ட டான் டடான் மீஜிக்பா)

பாத்தா அது அ.அப்பாவோட லெப்ட் கைதான் அது

அ.அப்பா : (ஏறக்குறைய அழுகிற வாய்ஸில்)குசும்பா உன் கடமை உணர்சிக்கு ஒரு அளவே இல்லியா அடிக்கனும்னு வந்த சரி யார அடிக்கனும்னு தெரிஞ்சிக்க வேணாமா?

எல்லாரும் என்னைய தேட நான் தான் எப்பவோ எஸ் ஆயிட்டனே

போங்கப்பா எல்லாரும் போய் வேலை வெட்டிய பாருங்க

ச்சும்மாஆஆஆ

ஒரு டாக்டர் வேலைய
இன்சினியர் செய்ய முடியுமா இல்லை

இல்ல இன்சினியர் வேலைய
டாக்டர்தான் செய்ய முடியுமா

அவங்கவங்க அவங்கவங்க வேலைய
பாத்தாதான் அது சரியா இருக்கும்

என்னப்பு புரியலையா
சரி கீழ இருக்குற படம்லாம்
பாருங்க புரியுதான்னு








































































Posted in Labels: , |