வாழ்வின் ஒரு சுவை
Posted On Friday, September 28, 2007 at at 3:24 PM by மங்களூர் சிவாநானும் ரொம்ப நாளா இந்த விசயத்தை எழுதனும்னு நினைச்சுகிட்டு இருந்தேன் டைம் கிடைக்காத்தனால கொஞ்சம் லேட் ஆயிடிச்சி.
வாழ்க்கைனா இன்பம் துன்பம் எல்லாமே இருக்கும்னு சொல்லுவாங்க ஆனா இன்னும் 'கல்யாணம் ஆவாதனால' அந்த ‘துன்பம்’ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாம ஜாலியா வெட்டியா பீச், பார்க், சினிமா, ஷாப்பிங், நினைச்ச நேரத்துக்கு ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போறது வற்றதுன்னு சுத்திகிட்டு இருந்தேன்.
மங்களூருக்கு வந்து ஒரு 3 இல்ல மூன்றரை வருசம் ஆயிருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம ஜாலியாதான் போய்கிட்டு இருந்தது லைப். அப்பதான் திடீர்னு ஒரு நாள் இங்க மங்களூர்ல இந்து முஸ்லிம் கலவரம்னு டிவி பொட்டி சொல்லுது.
அந்த டைம் தான் எங்க ஆபீஸ்க்கு கலீக் ஒருத்தர் டெபுடேசன்ல வேற வந்திருக்கார். என்னாடா வந்த அன்னிக்கே எதாவது தப்பு தண்டால எறங்கிட்டாரானு நாங்க பசங்கல்லாம் போன் போட்டு கலாய்ச்சிகிட்டு இருந்தோம்.
சரி எங்கியாவது 'அவிங்க' ஜாஸ்தியா இருக்குற அவுட்டர் ஏரியால இருக்குமா இருக்கும் நாம தான் சிட்டி உள்ள இருக்கமேனு பெருசா ஒண்ணும் அலட்டிக்கல.
சரி ஏன் கலவரம்னு இப்ப பாக்க வேணாம் ஏன்னா சொல்ல வருகிற விசயம் வேற பாதைக்கு மாறிடும்.
அன்னைக்கு ஒரு அஞ்சு அஞ்சரை இருக்கும் அதுக்குள்ள ஆபீஸ்ல யார பாத்தாலும் இதை பத்திதான் பேச்சு. அதுக்குள்ள ஒரு தகவல் வந்திச்சு சாயந்தரம் ஆறு மணில இருந்து அடுத்த நாள் காலைல ஆறு வரைக்கும் ஊரடங்கு தடை curfew போட்டிருக்காங்கன்னு.
இதை பத்தில்லாம் அதிகமா கேள்விகூட படாததினால கொஞ்சம் பயமாதான் இருந்திச்சு. அப்பதான் 144 னா என்ன curfewனா என்னன்னெல்லாம் டிஸ்கசன். சரி டெபுடேசன்ல வந்திருக்கிறவரை ஓட்டல்க்கு சீக்கிறம் அனுப்பிருவோம்னு ஆட்டோ ஸ்டாண்ட்க்கு போனா ஒருத்தனும் இல்ல அஞ்சு மணிக்கே. சரி ஆனது ஆயிபோச்சு நாமலே ட்ராப் பண்ணீடுவோம்னு போனேன்.
பஸ்லாம் நிறுத்திட்டதாலயும் ஆட்டோவும் இல்லாததாலயும் ரோடுல எல்லாரும் நடந்து போய்ட்டிருந்தாங்க. பைக்ல போறப்ப ஒண்ணும் தெரியல பின்னால அவர் உக்காந்திருக்கார்ல பேசிகிட்டே போயாச்சு. ஆனா திரும்பி வற்றப்ப ரோடுல ஒரு ஈ , காக்கா கிடயாது. கொஞ்சம் படபடப்பாதான் இருந்தது. முக்குக்கு முக்கு ஒரு நாலு பேரு நிக்கிறான் அவன் எதுக்கு நிக்கிறான் கட்டைல அடிக்க போறானா இல்ல கல்ல கொண்டு அடிக்க போறானான்னு பயந்துகிட்டே ஒரு வழியா வீட்டுக்கு வந்துட்டேன்.
அடுத்த நாளும் சாயந்தரம் ஆறு மணில இருந்து அடுத்த நாள் காலைல ஆறு வரைக்கும் ஊரடங்கு தடை curfew போட்டுடாங்க. அதனால அன்னைக்கு கலீக்கை சாமி என் வீட்டுக்கே வந்துருய்யா ராசா என்னால இன்னிக்கு ட்ராப் பண்ண முடியாதுனு சொல்லி வீட்டுக்கு கூட்டிகிட்டு போய்ட்டேன்.
சின்ன சின்ன கலவரம் அங்க அங்க நடந்ததால அதுக்கடுத்த நாள்ல இருந்து 24 மணி நேரமா நீட்டிச்சிட்டாங்க.
பேச்சிலரா இருக்கிறதால ஒரு அட்வான்டேஜ் என்னனா வெறும் அரிசியும் பருப்பும் இருந்தாகூட போதும் அதை வெச்சி சமாளிச்சிடலாம். எதுக்கும் இருக்கட்டும்னு மாகி பாக்கட், மாரி கோல்ட் பிஸ்கட் அது இதுன்னு கொஞ்சம் ஸ்டாக் பண்ணி வச்சிருந்ததால எனக்கு ஒரு கஷ்டமும் தெரியல.
ஆனா என் வீட்டுக்கு கீழ் மாடில இருந்த 4 நண்பர்கள் (அவங்க பேர் எல்லாம் அப்ப தெரியாது) அவங்களும் பேச்சிலர்ஸ்தான் ஆனா ஹோட்டல்ல சாப்பிடறவங்க வயித்துக்கு தான் எதுவும் தெரியாதே டைத்துக்கு கூவ ஆரம்பிச்சிடுமே, ஹோட்டலை தேடிப்போய் போலீஸ் லத்தியால செமயா அடிச்சிட்டாங்க. அன்னைக்கு முழுசும் சாப்பிடாம இருந்திருக்காங்கன்னு அப்புறமாதான் தெரிய வந்தது.
நான் இருந்த அபார்ட்மெண்ட்ல குழந்தைங்க, வயசானவங்களோட ரொம்ப பேர் பால் இல்லாம, காய்கரி இல்லாம மருந்து, மாத்திரை இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டுடாங்க.
எல்லாரும் மொட்ட மாடில நின்னுகிட்டு ரோடயே பாத்துகிட்டு அவங்கவங்களுக்கு தெரியவந்ததை பேசிகிட்டோம். இன்னும் சொல்லப்போனா அந்த அபார்ட்மெண்ட்ல நான் மூணு வருசமா இருக்கேன்றது அவங்களுக்கு தெரியும் ஆனா என் பேர அப்பதான் கேட்டு தெரிஞ்சிகிட்டாங்க. நானும் அப்டிதான்.
தூங்கற டைம் போக மீதி டைம் எல்லாம் லோக்கல் டிவி (நம்ம ஊர் AMN TV, கரண் டிவி மாதிரி ) பாத்துகிட்டே இருந்தோம் ஏன்னா அதுலதான் அடிக்கடி அப்டேட் வந்துகிட்டு இருந்தது.
அடுத்த நாள் ரேஷன் மாதிரி ஒரு 2 மணி நேரம் curfew relax பண்ணாங்க. அப்ப ஒவ்வொரு கடைலயும், மெடிக்கல் ஷாப்லயும் அந்த 2 மணி நேரத்துக்குள்ள வாங்கிட்டு போயிடனும்னு அலைமோதுற கூட்டத்தை பாத்தா வாழ்க்கைனா என்னன்னு புரியாதவனுக்கும் புரியும்.
அந்த ரெண்டு மணி நேரத்தில ஏறக்குறைய எல்லா கடைலயும் எல்லா ஸ்டாக்கும் காலி ஏன்னா ஊரடங்கு இருக்கிறதால ஹைவே எல்லாம் க்ளோஸ் பண்ணிட்டாங்க கடைக்கெல்லாம் சப்ளை இல்ல. எதாவது கிடைச்சா போதும்னு காஞ்சுபோன காய்கறியெல்லாம் க்யூல நின்னு வாங்கினாங்க.
ஊரடங்கு என்னைக்கு வரைக்கும்னு யாருக்கும் தெரியாது வேற. நான் என் கீழ் வீட்டுகாரங்களுக்காக துவரம்பருப்பு வாங்க 7,8 கடைக்கு ஓடினேன்.
காசு எவ்வளவு இருந்தாலும் அதை சாப்பிட முடியாதில்ல. பணம் சேர்ப்பதை தவிரவும் பல விசயங்கள் வாழ்வில் இருக்குன்னு உறைக்கிற மாதிரி அடிச்சி சொன்ன நிகழ்சி அது. எதோ எழுதியிருக்கிறேனே தவிர அந்த நாட்களில் இருந்த மன நிலையை வார்த்தைகளில் உணர்த்த முடியாது.
ரோசா குட்டி ராக்ஸ்
Posted On Sunday, September 23, 2007 at at 9:53 AM by மங்களூர் சிவாரோசா குட்டி ராக்ஸ்
என்ன சொல்றதுன்னு தெரியல நீங்களே பாருங்க
எனது இன்னொரு வலைப்பூவிற்கு செல்ல இங்க க்ளிக் பண்ணுங்க.
முடியாதது உலகில் கிடையாது
Posted On Saturday, September 22, 2007 at at 10:47 AM by மங்களூர் சிவாமுடியாதது என்பது உலகில் கிடையாது ஆங்கிலத்தில் "நட்த்திங் இஸ் இம்பாசிபள்' என்பார்கள் கீழே இருக்கும் படங்களை பாருங்கள் கண்டிப்பாக நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள்.
முயற்சி திருவினை ஆக்கும் என்றும் சொல்வார்கள்.
எப்போது உன்னால் முடியாது என பிறர் சொல்கிறார்களோ
யோசி
நன்றாக யோசி
எல்லா வழி முறைகளையும் ஆராய்ந்து பார்
முடிவெடு
உன்னில் இருக்கும் எல்லா ச்ச்க்திகளையும் பயன் படுத்து
தளர்ந்து விடாதே
வெற்றி எளிதானதல்ல எட்ட முடியாததல்ல
நாம் தான் காரணம்
Posted On at at 10:30 AM by மங்களூர் சிவாஎன்னிடம் நிறைய பேர் குறைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்."அவனால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்தேன்.""அவர்கள் செய்த செய்கையால் தான் எனக்கு இந்த நிலைமை.""அவனை நம்பால் இருந்திருந்தால் எனக்கு எந்த விதமான பிரச்சனைகளும் வந்திருக்காது"இவ்வாறு நிறைய.
இவர்கள் குறைப்பட்டுக் கொள்ளும் பொழுதுயெல்லாம் எனக்கு சிரிப்பு தான் வரும். கூடவே கேள்விகளும் வரும். எப்படி இவர்களின் அனுமதியில்லாமல் அது நடந்திருக்க கூடும்?.
தன் வாழ்க்கையினை யாரிடமோ ஒப்படைத்துவிட்டு எப்படி இவர்களால் இருக்க முடிகிறது? இவர்களை மீறி எப்படி ஒருவர் இவர்களுக்கு துன்பம் விளைவிக்க முடியும்.இதன் அடிப்படைக் காரணத்தை அறிய ஆசைப்பட்டேன். அதை என்னிடமே தேடியப் போது, எனக்குத் தோன்றியது ஒன்று தான். இவர்கள் அடிப்படையில் சோம்பேறிகள். நல்லது கெட்டதை யோசிக்க மறுப்பவர்கள்.
தனக்கு எது நல்லது என்பது தன்னை விட மற்றவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்று நம்பும் முட்டாள்கள். தன்னை விட மற்றவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்கள் அதனால் யார் என்ன சொன்னாலும் எதனையும் ஆராயாமல் அதன்படி உடனே செய்வார்கள். அவர்கள் செய்ததின் மூலம் நல்லது நடப்பின் தங்களால் நடந்தது என்றும், கெட்டது நடப்பின் பிறரால் நடந்தது என்றும் பேசுவார்கள்.
இவர்களுக்கு நான் ஒன்றை தான் சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டேன் அது,"தீதும் நன்றும் பிறர் தர வாரா" .
மனச்சோர்வு (Depression)
Posted On Friday, September 21, 2007 at at 7:12 PM by மங்களூர் சிவாநன்றி : பாரதி
நேற்று காயத்ரியின் "வாழ்வை சுமத்தல்" பதிவை படித்துவிட்டு சோகத்தில் திரிந்தபோது கண்ணுக்கு ஆறுதலாய் கிட்டிய பதிவு.
பிரச்னையில்லாத மனிதர்களே கிடையாது. பிரச்னைகளின் உச்சக்கட்டத்தில் மன நிலை பாதிக்கப்பட்டு பலர் கஷ்டப்படுகிறார்கள். Bipolar disorder என்ற வியாதியால் (சந்திரமுகி, அந்நியன் கதைகளின் கரு) பலர் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
என் பழைய நண்பன் ஒருவன் அடிக்கடி தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறான். தன் சொந்த அம்மாவையே கொலை செய்ய முயற்சித்திருக்கிறான். என்னுடன் வேலை பார்த்த ஒரு அமெரிக்க பெண்மணி மதிய சாப்பாட்டு நேரத்தில் ஆப்பிள் நறுக்கும் கத்தியை எடுத்து தன் கை நரம்புகளை வெட்டி விட்டு ரத்தம் சொட்ட சொட்ட தன் இருக்கையிலே மயங்கி கிடந்தார். Bipolar வியாதியால் வந்த தற்கொலை எண்ணம் தான் காரணம்.
பைபோலாரினால் பாதிக்கப்பட்ட பலர் இருக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் இது போன்ற வியாதிகள் இருந்தால் மனோதத்துவ நிபுணர்களை பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்கிறார்கள். இந்தியா போன்ற நாடுகளில் மனோதத்துவ மருத்துவர்களை பார்ப்பது கௌரவ குறைவாக கருதப்படுவதால், பலர் தங்களது பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் தங்களையும் வருத்தி மற்றவர்களையும் டார்ச்சர் செய்கிறார்கள்.
பைபோலாரினால் பாதிக்கப்பட்ட சிலர் தங்கள் அனுபவங்களையும் தீர்வுகளையும் வலைப்பதிவுகளில் எழுதுகிறார்கள். அமெரிக்க வாரப்பத்திரிகை (Businessweek) பாராட்டி எழுதிய சில வலைப்பதிவுகள்:
http://tenminutefreefall.blogspot.com/
Blogs.HealthCentral.com/depression/deborah-grays-blog
NickMack.net
இன்னொரு வலை பூ
Posted On at at 7:01 PM by மங்களூர் சிவாதமிழில் பங்கு சந்தை குறித்த எனது இன்னொரு வலைப்பூவிற்கு செல்ல இங்க க்ளிக் பண்ணுங்க.
சன் டி.வி டிடிஎச் விளம்பரம்
Posted On at at 12:05 PM by மங்களூர் சிவாசைனா - பொம்மை தயாரிப்பு
Posted On at at 10:56 AM by மங்களூர் சிவாஉலகின் 70 சதவிகித்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள் சைனாவால் தயாரிக்கப்படுகிறது. சமீபத்தில் பொம்மை தயாரிப்பு நிறுவனமா 'மாட்டல்' மற்றும் வேறு சில பொம்மைகள் தயாரிப்பு நிறுவனங்களில் நடந்த தயாரிப்பு முறைகேடுகளினால் அமெரிக்காவினர் இந்த விளையாட்டு பொம்மைகளை வாங்க அஞ்சுகின்றனர். அமெரிக்கா மற்றும் அயர்லாந்திற்கு மே 2007ல் இருந்து ஏற்றுமதியான் 94,000 வகையான பொம்மைகளுக்கு பணத்தை திறும்ப அளிக்க 'மாட்டல்' நிறுவனம் சம்மதித்துள்ளது.
சைனாவின் ஒரு பொம்மை தயாரிப்பு நிறுவனத்தினுள் எடுக்கப்பட்ட புகை படங்கள் கீழே.
‘வினாயகர் சதுர்தி வித் சேச்சீஸ்’
Posted On Monday, September 17, 2007 at at 3:16 PM by மங்களூர் சிவாஇன்னாபா எல்லாரும் எப்டி இருக்கீங்க? வினாயகர் சதுர்தியெல்லம் நல்லா கொண்டாடினீங்களா?.
என்ன? என்ன மேட்டர், நீ இப்ப என்ன சொல்ல வரன்னு எகிற்ரவங்களுக்கு ஒண்ணும் இல்லிங்னா ப்ளாக்ல என்ன எழுதறதுனு யோசிச்சிட்டிருந்தப்பதான் வினாயகர் சதுர்தினு ஆபீஸ் லீவ் உட்டுட்டாங்க.
இந்த ஒரு நாள் ரெண்டு நாள் லீவுக்கு ஊருக்கெல்லாம் போக முடியாது என்ன பண்ணலாம்னு ரூம் போட்டு யோசிச்சப்பதான் சரி ஒரு பயணக் கட்டுரை எழுதின மாதிரியும் ஆச்சு சாமி கும்பிட்ட மாதிரியும் ஆச்சு கெளம்புடான்னு நானும் என் ப்ரெண்ட் ஒருத்தரும் கெளம்பிட்டோம் (பய்யனூர்) கேரளாவுக்கு.
சரி ஆனா பதிவு போட ஏன் இவ்ளோ லேட்னு தானே கேக்குறீங்க? நான் என்னங்னா பண்றது பதிவு நேத்தே ரெடி ஆனா தலைப்பு தான் கெடைக்கவே மாட்டேன்றுச்சு.
சரின்னு நேத்து புல்லா திரும்ப ரூம் போட்டு யோசிச்சு இருக்குற கொஞ்சூண்டு மூளையை போட்டு கசக்கி கண்டுபிடிச்ச தலைப்புதானுங்னா ‘வினாயகர் சதுர்தி வித் சேச்சீஸ்’ அதுதான் லேட். தலைப்பு எப்டி சூப்பரா??. ஓகே ஸ்டார்ட் கேமரா ஆக்சன்......
காலைல 8 மணிக்கு ட்ரெய்ண், டாண்னு அலாரம் வெச்சு ஏழு மணிக்கு எழுந்தாச்சு உலக அதிசயம்ல்ல பின்ன. என்னைக்கு நாமெல்லாம் அந்த நேரத்துக்கு எந்திருச்சிருக்கோம் சூரியன் உதிக்கும் திசை கிழக்குன்னு எப்பயோ படிச்சது அது சரியா தப்பானு கன்பார்ம் பன்னகூட எழுந்ததில்லை ஏன்னா பாடம் சொல்லிகுடுக்கிற வாத்தி தப்பா சொல்லிகுடுக்க மாட்டார்னு அவ்ளோ.... நம்பிக்கை.
வெளியூர் போறோம் சீக்கிறம் காலை கடனை எல்லம் முடிச்சிட்டு கெளம்பலாம்னு பாத்தா வரமாட்டேன்னு வயிறு மக்கர் பண்ணுது.
நானும் சேச்சி எல்லாம் காட்டறேன் பாக்கலாம்னு எவ்ளவோ தாஜா பண்ணி பாக்குறேன் ம்கூம் அது சொல்லுது கண்ணுதானே பாக்க போகுது எனக்கென்னனு. அப்புறம் அப்டி இப்டினு கடைசில குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி தரேன் கேரளாலன்னு பைசல் பன்னி எல்லாம் முடிச்சி குளிச்சு கெளம்பியாச்சு.
டிரெய்ன்ல ஏறியாச்சு ஒரு இடம் பாத்து பட்டறைய போட்டாச்சு என்னடா வந்த வேலைய பாக்காம இப்டி உக்காந்துட்டியேன்னு மனசு ஓன்னு ஒப்பாரி வைக்குது. நமக்குதானே தெரியும் ‘அதிகாலை’ ஏழு மணிக்கு எழுந்த கஷ்டம். கொஞ்ச நேரம் உக்காந்தே தூங்கலாம்னுதான்.
ஒரு வழியா பத்தரைக்கு ‘பய்யனூர்’ங்கிற ஊருக்கு வந்து இறங்கியாச்சு. ரிட்டர்ன் ட்ரெய்ன் சாய்ந்தரம் நாலரைக்குதான் அதுவரைக்கும் இந்த ஊர்லதான் பொழுத ஓட்டணும்.
இங்க ஒரு முருகர் கோவில் இருக்கு அருள் மிகு சுப்ரமண்யர் திருக்கோயில் அங்கதான் போக போறோம். அதுக்கு முன்ன டிரெய்ன் ஏறுறதுக்கு முன்ன சாப்புட்ட மூணு ஆப்பம் பாதி சீரணம் ஆயிட்டதால டீ அடிச்சிட்டு போலாம்னு ஒரு டீ அடிச்சிட்டு (ஒரு அரை மணி நேரம் கடத்தலாம்ல அதுக்காகதான்) நடக்க ஆரம்பிச்சாச்சு.
கோயிலுக்கு போற வழியில நண்பருக்கு ஒரு டவுட் என்ன ‘யாரயும்’ காணும் வழியில இதுக்குதான் கேரளா போலாம் சேச்சி பாக்கலாம் அது இதுன்னு பில்டப் எல்லாம் குடுத்தியானு கேள்வி மேல கேள்வி.
பஞ்ச தந்திரம்ல கமல் சொல்லுவாரே கேள்வி கேக்குறது ரொம்ப ஏசி பதில் சொல்லி பாத்தாதான் அதோட கஷ்டம் தெரியும்னு அப்டிதான் என் நிலமையும்.
என் மனசுலயும் அதே கேள்வின்னாலும் நான் யார்கிட்ட போய் கேக்க? சமாளிச்சுகிட்டு சொன்னேன் எல்லாரும் நமக்காக கோயில்ல வெய்ட் பண்ணுவாங்க மாப்ளேன்னு....
அட கோயில்ல என்னங்க இவ்ளோ கூட்டம் அட நெசமாதானுங்க எல்லாரும் வெய்ட் பண்ணிகிட்டு இருக்காங்க. சரி ஒரு அஞ்சு நிமிசம் சாமி கும்பிட்டு வந்திருவோம்.
சாமி கும்பிட்டு வெளிய வந்ததுக்கப்புறம் தெரிஞ்சது அன்னைக்கு அங்க கோயில்ல ரெண்டு கல்யாணம்.
சரி எப்டியும் டிரெய்ண்க்கு கன்னா பின்னானு டைம் இருக்கு உக்காந்து வேடிக்கை பாப்போம்னு பாத்துட்டு வந்தவங்க போனவங்க மஞ்ச கலர், செவப்பு கலர், பச்ச கலர் சேலை, சுடிதார், மிடி, மினி, ஜீன் எல்லரயும் பாத்துட்டு பிறந்த ஜன்ம சாபல்யம் அடைஞ்சிட்டு அவிங்களை எல்லாம் வழி அனுப்பிட்டு.... நாங்க எங்க அனுப்பினோம் கல்யாணம் முடிஞ்சி எல்லாம் போயிட்டாங்க மத்தியாணம் ஒரு மணி கூட ஆகலை என்ன பண்ணலா.....ம்
அங்க இருக்கிற கோயில குளத்தில மீனுக்கு ஒரு பாக்கட் பொறியை ஒரு மணி நேரமா பிச்சி பிச்சி போட்டுட்டு திரும்ப நடராசா ஸ்டேசனுக்கு....
திரும்ப சாப்பிட்டு நாலரைக்கு டிரையின் ஏறியாச்சு மேல லக்கேஜ் வெக்கற பெர்த் கிடச்சது நீட்டி படுத்தாச்சு ஒரு ஒன்றரை மணி நேரம்.
இன்னும் எப்டியும் ஒரு மணி நேரம் ஆகும் போய் சேரரதுக்கு இன்னைக்கு பயணத்தை ப்ளாக்ல எழுதிடனும்னு நினைச்சுகிட்டே வர்ரப்ப
நண்பர் சொன்னார் அங்க டாய்லெட்ல எவனோ ஒருத்தன் அசிங்கமா படம் வரைஞ்சு என்னமோ மலயாளத்துல எழுதி வெச்சுருக்கான்.
அதுக்கென்ன இப்ப
இல்ல ஒண்ணும் இல்ல
என்ன போன் நம்பர் எழுதாம போய்டானா?
ஆமா எப்டி தெரியும். அட நானும் தானே பாத்ரூம் போனேன்.
கதவோரம் நின்னுகிட்டு வரும் போது சமீபத்தில படித்த ஒரு ப்ளாக் ஞாபகம் வந்துச்சு அதுல ஒருத்தர் ட்ரெய்ன்ல போறப்ப டாடா காட்டுற கொயந்தைங்களுக்கு திரும்ப டாடா காட்டணும் இல்லைனா அதுங்களுக்கு ஏமாத்தமா இருக்கும் அது இதுனு எழுதியிருந்தார் அது கப்புனு ஞாபகம் வந்திடிச்சு.
சரி டாடா காமிக்கலாம்னா எல்லாம் தடி மாடு தாண்டவராயனுங்கதான் ரோடுல இருக்கானுங்க. நாமெல்லாம் ‘சாட்’லயெ Male + Male = bye னு பார்முலா சொன்னவங்க இவனுங்களுக்கு போய் டாடா காட்டலாமா? நம்ம பாலிசி என்ன ஆவறது. கடைசி வரைக்கும் யாருக்கும் டாடா காமிக்காமலே மங்களூர் வந்து சேர்ந்தேன் இனிய கேரள நினைவுகளோடு.
பி.கு இதுல நான் டிரெய்ன்க்கு ஸ்டேசன்ல வெய்ட் பண்ணப்ப ரெண்டு மணி நேரம் சைட் அடிச்ச பிகர் பத்தில்லாம் சொல்லல ஏன்னா இப்பவே அவன் அவன் காதுல புகையரது இங்க வரைக்கும் நெடி ஏறுதே.
மங்களூர் சிவா
மங்களூர் பற்றி மங்களூர் சிவா
Posted On at at 1:14 PM by மங்களூர் சிவாமொத பாகம் படிக்காதவங்க இங்க போய் படிச்சிட்டு வாங்க.
எந்த ஒரு விசயம் பற்றியும் குறை சொல்வது எளிது. ஆனால் அதன் பெருமைகளை சொல்வது மிகவும் சிரமம். அதனால மங்களூரின் சிறப்புகளை முதலில் பார்க்கலாம்.
Advantage Mangalore
சிறப்புன்னு சொன்னா எனக்கு என்ன என்ன சிறப்பா தோணுதோ அதை சொல்றேன்.
சிறிய ஊராக இருப்பதாலும் ட்ராபிக் இல்லாமல் இருப்பதால் அதிக பட்சமாக 5 நிமிடத்தில் ஆபீஸ்க்கு போக முடியுது. நம்ம நண்பர்கள் சாதாரணமாக சொல்லும் டயலாக் டாப் கியர் போடறதுக்குள்ள ஆபீஸ் வந்திடும். குடும்பத்திற்காக நிறைய நேரம் ஒதுக்க முடியும்.
‘Pollution’ மிக குறந்த ஊர். இன்றைக்கு பெரிய பிரச்சனையே இந்த காற்று மாசுபடுதலும் அதனால் வரும் பாதிப்புகளும்.
தண்ணீர் பஞ்சம் கடந்த ஐந்து வருடத்தில் இதுவரை கேள்விபடவில்லை. (அதுதான் வருசத்துல ஆறு மாசம் மழை பெய்யுதே)
தமிழர் கன்னடர் பிரச்சனை இல்லை. பெங்களூர் அல்லது மைசூரில் இருப்பவர்களுக்கு இது ஒரு பெரிய தலைவலி எப்ப எதுக்கு ஸ்ட்ரைக் பன்னுவானுங்கன்னே தெரியாது உதைப்பானுங்கன்னும் தெரியாது.
கர்நாடகாவின் சூப்பர் ஸ்டார் டாக்டர் ராஜ்குமார் மறைந்தபோது பெங்களூரில் என்ன என்ன கலாட்டா நடந்து என்று டி.வி. நியூஸ் பாத்த எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.
ஒரு வருடத்திற்கு முன் இங்கு இந்து முஸ்லிம் பிரச்சனை காரணமாக ஊரடங்கு தடை சட்டம் (curfew) போடப்பட்டது அது கூட பிரச்சனையின் தீவிரத்தை குறைக்கவே.
இதுக்காக இது ‘கலவர பூமி’ன்னு எல்லாம் நினைக்காதீங்க. எந்த இடத்திலும் பிரச்சனை அல்லது கலவரம் என வந்தால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருட்டு, கொள்ளை போன்ற ஆதாயம் தேடும் சிலர் இருக்கவே இருப்பார்கள். அவர்களை அடக்குவதற்காக அப்போது curfew போடப்பட்டது. மீடியாக்கள் ஊதி பெரிது படுத்திவிட்டன. ஊரடங்கு அமலில் இருக்கும் போது வாழ்க்கை அது ஒரு தனி பதிவே போடலாம்.
ஆட்டோ கட்டணம் நம்ம ஊரை எல்லாம் compare பண்ணா சரியாக வாங்குகிறார்கள். மீதி சில்லரை கரெக்டாக குடுக்கிறார்கள். சமீப காலமாக சில ஆட்டோ ஓட்டுனர்கள் அதிகம் கேட்கிறார்கள் என தகவல் நம்ம ஊர் ஆளுங்க நிறைய இங்க வந்துட்டாய்ங்களோ??
சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களை ஒப்பிடும்போது வாடகை செலவு குறைந்த ஊர். இப்போது நான் இருக்கும் இரண்டு பெட் கொண்ட வீட்டு வாடகை 2500 ஆனால் இதே அளவு வீட்டிற்கு சென்னையில் குறைந்தது 5000 கொடுக்க வேண்டும்.
உடுப்பி, தர்மஸ்தலா, சுப்ரமண்யா, கொல்லூர், ஷ்ரிங்கேரி, ஹொரநாடு போன்ற உலக புகழ்வாய்ந்த கோவில்கள் போக மங்களூர் வந்தே போக முடியும். (டூரிஸம் / டூரிஸ்ட் ஆப்பரேட்டர்களுக்கு நல்ல பிஸினஸ்).
Disadvantage Mangalore
இன்றுவரை கர்னாடகத்தின் தலைநகரான பெங்களூருக்கு ட்ரெயின் கிடையாது. இதோ இப்ப வரப்போகுது இப்ப வரப்போகுதுன்னு அஞ்சு வருஷமா சொல்லிகிட்டிருக்காங்க (பஸ் மட்டுமே ஒரே வழி).
கேட்டா ‘சக்கலேஸ்பூர் காடு’ மலை பாதை இருக்கு அங்க land slip நிறைய ஆகுது அது இதுன்னு சொல்றாங்க. டெக்னாலஜி இவ்ளோ வளர்ந்த காலத்தில இது சரி என தோன்றவில்லை. (கடல்ல பாலம் கட்டறாங்க பாலைவனத்தில ‘snow park’ பன்னறாங்க உம்.. என்னத்த சொல்ல). இதனால இங்கிருந்து சென்னைக்கு போக train route கேரளால்லம் சுத்திகிட்டு போகுது பதினெட்டு மணி நேரம் ஆகுது.
இங்க ஒரு ஏர் போர்ட் இருக்கு இண்டர்நேசனல் ஏர் போர்ட்னு பேரு ஆனால் இன்னும் night landing facility இல்லை.
இங்க வந்த புதுசுல ராத்திரி ஒரு எட்டரை மணிக்கு வீட்டுக்கு போக பஸ் ஸ்டாப்ல நின்னுகிட்டிருந்தேன் ரோடுல ஒரு ஈ, காக்கா இல்ல புது எடம் பாஷை வேற தெரியாது ஹிந்தியும் தெரியாது ஹிந்தி படிப்பது தமிழனுக்கு அழகா? அப்டினு படிக்காம விட்டாச்சு. பயந்து போயி ஆபீஸ்க்கே திரும்ப போயிட்டேன். அப்புறம் எங்க மேனேஜர் என்னைய வீட்டுல ட்ராப் பண்ணினார்.
இந்த ஊர் மக்களின் வாழ்க்கை முறை அப்படி ராத்திரி எட்டு எட்டரைக்கு சாப்புட்டு படுத்திருவாங்க. ஓகோ அப்ப விடிய காலைல எழுந்து வேலைவெட்டி பாப்பாங்கன்னு தப்பு கணக்கு எல்லாம் போட்டுராதீங்க.
நாமெல்லாம் ராக்கோழியா சுத்துன ஆளுங்க ம் என்ன பன்ன?. இப்ப கொஞ்சம் பரவாயில்ல ரோடுல ராத்திரி ஒரு பத்து மணி வரைக்கும் ஆள் நடமாட்டம் இருக்கு.
உங்க கிட்ட எவ்வளவுதான் காசு இருந்தாலும் நல்ல சாப்பாடு கிடைக்காது. இனிப்பான சாம்பார், இனிப்பு ரசம் எல்லாம் இனிப்பு மயம் வெல்லம் போட்டு சமைப்பாங்களாம். சரி பரவாயில்ல சாம்பார் செய்யறாங்களேன்னு நினைச்சா சாம்பார்ல பெரிய வெள்ளரிக்காய் (கன்னடத்துல செளத்தே காய்) இல்லைனா வெள்ளை பூசணிக்காய் (கன்னடத்துல கும்ப்ளே காய்) இது ரெண்டு தவிர வேற காயே போட மாட்டாங்க.
நீங்க டெய்லி வேற வேற ஹோட்டலுக்கு போனாலும் மாத்தி மாத்தி இதையேதான் போடுனானுங்க. பொரியலும் அப்படிதான் வாரத்தில மூணு நாள் கோவைக்காய் பொரியல் செய்வானுங்க.
நம்ம கெட்ட நேரம்னா நேத்து ஒரு ஹோட்டல்ல கோவைக்காய் பொரியல் சாப்பிட்டிருப்போம் இன்னைக்கு ஒரு ஹோட்டல் போனா அங்கயும் கோவைக்காய் பொரியல் போடுவானுங்க பாருங்க கண்ணுல ரத்தம் வரும்.
பத்து ரூபாய் மீல்ஸ்ல இருந்து நூறு ரூபாய் மீல்ஸ் வரைக்கும் ட்ரை பண்ணி பாத்துட்டு எடுத்த முடிவு வேணான்டா கைபுள்ள கற்றது கை மண் அளவுன்னாலும் பரவாயில்ல என்ன தெரியுமோ செஞ்சு சாப்புடுன்னு மாசம் முப்பது நாளும் மத்தியான சாப்பாடு self cooking தான். அப்டி இல்லைனா நண்பர்களின் வீடுகளில்தான் மதிய சாப்பாடு. டிபன் பொருத்தவரைக்கும் Manageable.
இதைவிட கூத்து என்னன்னா இங்க பல்மட்டா(Balmatta) அப்டின்ற இடத்துல ஒரு ஹோட்டல் இருக்கு பேரு ‘இந்திரா பவன்’ மத்தியாணம் ஒரு மணிக்கு கரெக்டா சாத்திடுவான் கேட்டா lunch hour அட சத்தியமாங்க என்ன கொடுமை சரவணா இது.
அப்புறம் ஜாலியா சுத்தி பழகினவங்களுக்கு இங்க பீச், பிக் பஜார் விட்டா போறதுக்கு வேற போக்கிடமும் கிடையாது. Ad Labsலயும் ரஜினி இல்ல கமல் படம் மட்டும்தான் போடுவான் வருசத்துக்கு எத்தினி படம் இவங்கள்து வருதுன்னு உங்க எல்லாருக்கும் சொல்லனுமா? (எல்லா DVDயும் கெடைக்குது அது வேற விசயம்). கன்னட படமும் சகிக்காது எத்தனை தமிழ் படத்தைதான் கன்னடத்துல பாக்குறது. இதை பற்றி பெங்களூரிலிருந்து வலை பதியும் நண்பர்கள் பதிவில் அதிக விவரம் கிடைக்கலாம்.
டேய் நாங்களே தெலுங்கில இருந்துதானேடா ரீமேக் பண்ணறோம்னு ரவியும் விஜயும் வந்து சத்தியம் பண்ணாலும் கேக்க மாட்டானுங்க. ‘ன்னா என்னங்னா ன்னா பரவாலிங்னா’ன்னு விஜய்கிட்ட சொன்னாலும் சொல்வானுங்க. சரி இதை பத்தி இன்னொரு பதிவுல பாக்கலாம்.
என்னடா இவன் சாப்பாடு சினிமா பத்தி மட்டும் சொல்லியிருக்கான்னு பாக்குறீங்களா? மனிதனுக்கு மிக அவசியமானது உணவு , உடை, உறைவிடம், பொழுதுபோக்கு இதுல உடையும், உறைவிடமும் பிரச்சனையில்ல மீதி ரெண்டும்தான்.
வினாயகர் சதுர்த்தி
Posted On Friday, September 14, 2007 at at 10:20 AM by மங்களூர் சிவாஅனைவருக்கும் இனிய வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
காதல்
Posted On Thursday, September 13, 2007 at at 7:28 PM by மங்களூர் சிவாகாதல் கடிதம் தீட்டவே
ப்ளாக்ஸ்பாட் எல்லாம் காகிதம்
இ-கலப்பை இல்லைனா
கைவிரல்கள் தேய்ந்திடும்
ஓர்குட்டும் 'ஜி'டாக்கும்
அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும்
'IM' உன்னை சேர்ந்திடும்
வைரமுத்து இன்னைக்கு இந்த பாட்டு எழுதினா இப்டிதான் எழுதிஇருப்பார்.
என்னடா பய புள்ள பாட்டெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கே இவ்ளோ நாள் நல்லாத்தானே இருந்தானு பாக்குறீங்களா. இன்னைக்கு ஒரு ப்ளாக் படிச்சேன் அதுல அண்ணாத்த ஒருத்தர் காதல் பத்தி புட்டு புட்டு வெச்சிருந்தார். அப்ப இருந்து இப்டிதான் ஆயிட்டேன்.
சரி வந்தது வந்துட்டீங்க அப்டியே ஒரு எட்டு போய் அந்த ப்ளாக் நீங்களும் பார்த்துடுங்க.
பாகம்1
பாகம்2
பாகம்3
வலைப்பூ - BLOG
Posted On at at 10:20 AM by மங்களூர் சிவாஉங்கள் வலைப்பூவை
கலர்ஃபுல் ஆக்குவது எப்படி?.
இந்த பதிவில் வலைப்பூவை
கலர்ஃபுல் ஆக்குவது எப்படி என பார்ப்போம்.
என்ன கலர்ஃபுல்லா இல்ல??