நாம் தான் காரணம்

என்னிடம் நிறைய பேர் குறைப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்."அவனால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்தேன்.""அவர்கள் செய்த செய்கையால் தான் எனக்கு இந்த நிலைமை.""அவனை நம்பால் இருந்திருந்தால் எனக்கு எந்த விதமான பிரச்சனைகளும் வந்திருக்காது"இவ்வாறு நிறைய.

இவர்கள் குறைப்பட்டுக் கொள்ளும் பொழுதுயெல்லாம் எனக்கு சிரிப்பு தான் வரும். கூடவே கேள்விகளும் வரும். எப்படி இவர்களின் அனுமதியில்லாமல் அது நடந்திருக்க கூடும்?.

தன் வாழ்க்கையினை யாரிடமோ ஒப்படைத்துவிட்டு எப்படி இவர்களால் இருக்க முடிகிறது? இவர்களை மீறி எப்படி ஒருவர் இவர்களுக்கு துன்பம் விளைவிக்க முடியும்.இதன் அடிப்படைக் காரணத்தை அறிய ஆசைப்பட்டேன். அதை என்னிடமே தேடியப் போது, எனக்குத் தோன்றியது ஒன்று தான். இவர்கள் அடிப்படையில் சோம்பேறிகள். நல்லது கெட்டதை யோசிக்க மறுப்பவர்கள்.

தனக்கு எது நல்லது என்பது தன்னை விட மற்றவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்று நம்பும் முட்டாள்கள். தன்னை விட மற்றவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்கள் அதனால் யார் என்ன சொன்னாலும் எதனையும் ஆராயாமல் அதன்படி உடனே செய்வார்கள். அவர்கள் செய்ததின் மூலம் நல்லது நடப்பின் தங்களால் நடந்தது என்றும், கெட்டது நடப்பின் பிறரால் நடந்தது என்றும் பேசுவார்கள்.

இவர்களுக்கு நான் ஒன்றை தான் சொல்லிக் கொள்ள ஆசைப்பட்டேன் அது,"தீதும் நன்றும் பிறர் தர வாரா" .

Posted in Labels: |