வாழ்வின் ஒரு சுவை

நானும் ரொம்ப நாளா இந்த விசயத்தை எழுதனும்னு நினைச்சுகிட்டு இருந்தேன் டைம் கிடைக்காத்தனால கொஞ்சம் லேட் ஆயிடிச்சி.

வாழ்க்கைனா இன்பம் துன்பம் எல்லாமே இருக்கும்னு சொல்லுவாங்க ஆனா இன்னும் 'கல்யாணம் ஆவாதனால' அந்த ‘துன்பம்’ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாம ஜாலியா வெட்டியா பீச், பார்க், சினிமா, ஷாப்பிங், நினைச்ச நேரத்துக்கு ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு போறது வற்றதுன்னு சுத்திகிட்டு இருந்தேன்.


மங்களூருக்கு வந்து ஒரு 3 இல்ல மூன்றரை வருசம் ஆயிருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாம ஜாலியாதான் போய்கிட்டு இருந்தது லைப். அப்பதான் திடீர்னு ஒரு நாள் இங்க மங்களூர்ல இந்து முஸ்லிம் கலவரம்னு டிவி பொட்டி சொல்லுது.

அந்த டைம் தான் எங்க ஆபீஸ்க்கு கலீக் ஒருத்தர் டெபுடேசன்ல வேற வந்திருக்கார். என்னாடா வந்த அன்னிக்கே எதாவது தப்பு தண்டால எறங்கிட்டாரானு நாங்க பசங்கல்லாம் போன் போட்டு கலாய்ச்சிகிட்டு இருந்தோம்.

சரி எங்கியாவது 'அவிங்க' ஜாஸ்தியா இருக்குற அவுட்டர் ஏரியால இருக்குமா இருக்கும் நாம தான் சிட்டி உள்ள இருக்கமேனு பெருசா ஒண்ணும் அலட்டிக்கல.

சரி ஏன் கலவரம்னு இப்ப பாக்க வேணாம் ஏன்னா சொல்ல வருகிற விசயம் வேற பாதைக்கு மாறிடும்.

அன்னைக்கு ஒரு அஞ்சு அஞ்சரை இருக்கும் அதுக்குள்ள ஆபீஸ்ல யார பாத்தாலும் இதை பத்திதான் பேச்சு. அதுக்குள்ள ஒரு தகவல் வந்திச்சு சாயந்தரம் ஆறு மணில இருந்து அடுத்த நாள் காலைல ஆறு வரைக்கும் ஊரடங்கு தடை curfew போட்டிருக்காங்கன்னு.



இதை பத்தில்லாம் அதிகமா கேள்விகூட படாததினால கொஞ்சம் பயமாதான் இருந்திச்சு. அப்பதான் 144 னா என்ன curfewனா என்னன்னெல்லாம் டிஸ்கசன். சரி டெபுடேசன்ல வந்திருக்கிறவரை ஓட்டல்க்கு சீக்கிறம் அனுப்பிருவோம்னு ஆட்டோ ஸ்டாண்ட்க்கு போனா ஒருத்தனும் இல்ல அஞ்சு மணிக்கே. சரி ஆனது ஆயிபோச்சு நாமலே ட்ராப் பண்ணீடுவோம்னு போனேன்.

பஸ்லாம் நிறுத்திட்டதாலயும் ஆட்டோவும் இல்லாததாலயும் ரோடுல எல்லாரும் நடந்து போய்ட்டிருந்தாங்க. பைக்ல போறப்ப ஒண்ணும் தெரியல பின்னால அவர் உக்காந்திருக்கார்ல பேசிகிட்டே போயாச்சு. ஆனா திரும்பி வற்றப்ப ரோடுல ஒரு ஈ , காக்கா கிடயாது. கொஞ்சம் படபடப்பாதான் இருந்தது. முக்குக்கு முக்கு ஒரு நாலு பேரு நிக்கிறான் அவன் எதுக்கு நிக்கிறான் கட்டைல அடிக்க போறானா இல்ல கல்ல கொண்டு அடிக்க போறானான்னு பயந்துகிட்டே ஒரு வழியா வீட்டுக்கு வந்துட்டேன்.

அடுத்த நாளும் சாயந்தரம் ஆறு மணில இருந்து அடுத்த நாள் காலைல ஆறு வரைக்கும் ஊரடங்கு தடை curfew போட்டுடாங்க. அதனால அன்னைக்கு கலீக்கை சாமி என் வீட்டுக்கே வந்துருய்யா ராசா என்னால இன்னிக்கு ட்ராப் பண்ண முடியாதுனு சொல்லி வீட்டுக்கு கூட்டிகிட்டு போய்ட்டேன்.

சின்ன சின்ன கலவரம் அங்க அங்க நடந்ததால அதுக்கடுத்த நாள்ல இருந்து 24 மணி நேரமா நீட்டிச்சிட்டாங்க.

பேச்சிலரா இருக்கிறதால ஒரு அட்வான்டேஜ் என்னனா வெறும் அரிசியும் பருப்பும் இருந்தாகூட போதும் அதை வெச்சி சமாளிச்சிடலாம். எதுக்கும் இருக்கட்டும்னு மாகி பாக்கட், மாரி கோல்ட் பிஸ்கட் அது இதுன்னு கொஞ்சம் ஸ்டாக் பண்ணி வச்சிருந்ததால எனக்கு ஒரு கஷ்டமும் தெரியல.

ஆனா என் வீட்டுக்கு கீழ் மாடில இருந்த 4 நண்பர்கள் (அவங்க பேர் எல்லாம் அப்ப தெரியாது) அவங்களும் பேச்சிலர்ஸ்தான் ஆனா ஹோட்டல்ல சாப்பிடறவங்க வயித்துக்கு தான் எதுவும் தெரியாதே டைத்துக்கு கூவ ஆரம்பிச்சிடுமே, ஹோட்டலை தேடிப்போய் போலீஸ் லத்தியால செமயா அடிச்சிட்டாங்க. அன்னைக்கு முழுசும் சாப்பிடாம இருந்திருக்காங்கன்னு அப்புறமாதான் தெரிய வந்தது.

நான் இருந்த அபார்ட்மெண்ட்ல குழந்தைங்க, வயசானவங்களோட ரொம்ப பேர் பால் இல்லாம, காய்கரி இல்லாம மருந்து, மாத்திரை இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டுடாங்க.

எல்லாரும் மொட்ட மாடில நின்னுகிட்டு ரோடயே பாத்துகிட்டு அவங்கவங்களுக்கு தெரியவந்ததை பேசிகிட்டோம். இன்னும் சொல்லப்போனா அந்த அபார்ட்மெண்ட்ல நான் மூணு வருசமா இருக்கேன்றது அவங்களுக்கு தெரியும் ஆனா என் பேர அப்பதான் கேட்டு தெரிஞ்சிகிட்டாங்க. நானும் அப்டிதான்.

தூங்கற டைம் போக மீதி டைம் எல்லாம் லோக்கல் டிவி (நம்ம ஊர் AMN TV, கரண் டிவி மாதிரி ) பாத்துகிட்டே இருந்தோம் ஏன்னா அதுலதான் அடிக்கடி அப்டேட் வந்துகிட்டு இருந்தது.

அடுத்த நாள் ரேஷன் மாதிரி ஒரு 2 மணி நேரம் curfew relax பண்ணாங்க. அப்ப ஒவ்வொரு கடைலயும், மெடிக்கல் ஷாப்லயும் அந்த 2 மணி நேரத்துக்குள்ள வாங்கிட்டு போயிடனும்னு அலைமோதுற கூட்டத்தை பாத்தா வாழ்க்கைனா என்னன்னு புரியாதவனுக்கும் புரியும்.

அந்த ரெண்டு மணி நேரத்தில ஏறக்குறைய எல்லா கடைலயும் எல்லா ஸ்டாக்கும் காலி ஏன்னா ஊரடங்கு இருக்கிறதால ஹைவே எல்லாம் க்ளோஸ் பண்ணிட்டாங்க கடைக்கெல்லாம் சப்ளை இல்ல. எதாவது கிடைச்சா போதும்னு காஞ்சுபோன காய்கறியெல்லாம் க்யூல நின்னு வாங்கினாங்க.

ஊரடங்கு என்னைக்கு வரைக்கும்னு யாருக்கும் தெரியாது வேற. நான் என் கீழ் வீட்டுகாரங்களுக்காக துவரம்பருப்பு வாங்க 7,8 கடைக்கு ஓடினேன்.

காசு எவ்வளவு இருந்தாலும் அதை சாப்பிட முடியாதில்ல. பணம் சேர்ப்பதை தவிரவும் பல விசயங்கள் வாழ்வில் இருக்குன்னு உறைக்கிற மாதிரி அடிச்சி சொன்ன நிகழ்சி அது. எதோ எழுதியிருக்கிறேனே தவிர அந்த நாட்களில் இருந்த மன நிலையை வார்த்தைகளில் உணர்த்த முடியாது.

Posted in Labels: |