‘வினாயகர் சதுர்தி வித் சேச்சீஸ்’

இன்னாபா எல்லாரும் எப்டி இருக்கீங்க? வினாயகர் சதுர்தியெல்லம் நல்லா கொண்டாடினீங்களா?.

என்ன? என்ன மேட்டர், நீ இப்ப என்ன சொல்ல வரன்னு எகிற்ரவங்களுக்கு ஒண்ணும் இல்லிங்னா ப்ளாக்ல என்ன எழுதறதுனு யோசிச்சிட்டிருந்தப்பதான் வினாயகர் சதுர்தினு ஆபீஸ் லீவ் உட்டுட்டாங்க.
இந்த ஒரு நாள் ரெண்டு நாள் லீவுக்கு ஊருக்கெல்லாம் போக முடியாது என்ன பண்ணலாம்னு ரூம் போட்டு யோசிச்சப்பதான் சரி ஒரு பயணக் கட்டுரை எழுதின மாதிரியும் ஆச்சு சாமி கும்பிட்ட மாதிரியும் ஆச்சு கெளம்புடான்னு நானும் என் ப்ரெண்ட் ஒருத்தரும் கெளம்பிட்டோம் (பய்யனூர்) கேரளாவுக்கு.



சரி ஆனா பதிவு போட ஏன் இவ்ளோ லேட்னு தானே கேக்குறீங்க? நான் என்னங்னா பண்றது பதிவு நேத்தே ரெடி ஆனா தலைப்பு தான் கெடைக்கவே மாட்டேன்றுச்சு.

சரின்னு நேத்து புல்லா திரும்ப ரூம் போட்டு யோசிச்சு இருக்குற கொஞ்சூண்டு மூளையை போட்டு கசக்கி கண்டுபிடிச்ச தலைப்புதானுங்னா ‘வினாயகர் சதுர்தி வித் சேச்சீஸ்’ அதுதான் லேட். தலைப்பு எப்டி சூப்பரா??. ஓகே ஸ்டார்ட் கேமரா ஆக்சன்......

காலைல 8 மணிக்கு ட்ரெய்ண், டாண்னு அலாரம் வெச்சு ஏழு மணிக்கு எழுந்தாச்சு உலக அதிசயம்ல்ல பின்ன. என்னைக்கு நாமெல்லாம் அந்த நேரத்துக்கு எந்திருச்சிருக்கோம் சூரியன் உதிக்கும் திசை கிழக்குன்னு எப்பயோ படிச்சது அது சரியா தப்பானு கன்பார்ம் பன்னகூட எழுந்ததில்லை ஏன்னா பாடம் சொல்லிகுடுக்கிற வாத்தி தப்பா சொல்லிகுடுக்க மாட்டார்னு அவ்ளோ.... நம்பிக்கை.

வெளியூர் போறோம் சீக்கிறம் காலை கடனை எல்லம் முடிச்சிட்டு கெளம்பலாம்னு பாத்தா வரமாட்டேன்னு வயிறு மக்கர் பண்ணுது.

நானும் சேச்சி எல்லாம் காட்டறேன் பாக்கலாம்னு எவ்ளவோ தாஜா பண்ணி பாக்குறேன் ம்கூம் அது சொல்லுது கண்ணுதானே பாக்க போகுது எனக்கென்னனு. அப்புறம் அப்டி இப்டினு கடைசில குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கி தரேன் கேரளாலன்னு பைசல் பன்னி எல்லாம் முடிச்சி குளிச்சு கெளம்பியாச்சு.



டிரெய்ன்ல ஏறியாச்சு ஒரு இடம் பாத்து பட்டறைய போட்டாச்சு என்னடா வந்த வேலைய பாக்காம இப்டி உக்காந்துட்டியேன்னு மனசு ஓன்னு ஒப்பாரி வைக்குது. நமக்குதானே தெரியும் ‘அதிகாலை’ ஏழு மணிக்கு எழுந்த கஷ்டம். கொஞ்ச நேரம் உக்காந்தே தூங்கலாம்னுதான்.

ஒரு வழியா பத்தரைக்கு ‘பய்யனூர்’ங்கிற ஊருக்கு வந்து இறங்கியாச்சு. ரிட்டர்ன் ட்ரெய்ன் சாய்ந்தரம் நாலரைக்குதான் அதுவரைக்கும் இந்த ஊர்லதான் பொழுத ஓட்டணும்.

இங்க ஒரு முருகர் கோவில் இருக்கு அருள் மிகு சுப்ரமண்யர் திருக்கோயில் அங்கதான் போக போறோம். அதுக்கு முன்ன டிரெய்ன் ஏறுறதுக்கு முன்ன சாப்புட்ட மூணு ஆப்பம் பாதி சீரணம் ஆயிட்டதால டீ அடிச்சிட்டு போலாம்னு ஒரு டீ அடிச்சிட்டு (ஒரு அரை மணி நேரம் கடத்தலாம்ல அதுக்காகதான்) நடக்க ஆரம்பிச்சாச்சு.

கோயிலுக்கு போற வழியில நண்பருக்கு ஒரு டவுட் என்ன ‘யாரயும்’ காணும் வழியில இதுக்குதான் கேரளா போலாம் சேச்சி பாக்கலாம் அது இதுன்னு பில்டப் எல்லாம் குடுத்தியானு கேள்வி மேல கேள்வி.

பஞ்ச தந்திரம்ல கமல் சொல்லுவாரே கேள்வி கேக்குறது ரொம்ப ஏசி பதில் சொல்லி பாத்தாதான் அதோட கஷ்டம் தெரியும்னு அப்டிதான் என் நிலமையும்.

என் மனசுலயும் அதே கேள்வின்னாலும் நான் யார்கிட்ட போய் கேக்க? சமாளிச்சுகிட்டு சொன்னேன் எல்லாரும் நமக்காக கோயில்ல வெய்ட் பண்ணுவாங்க மாப்ளேன்னு....



அட கோயில்ல என்னங்க இவ்ளோ கூட்டம் அட நெசமாதானுங்க எல்லாரும் வெய்ட் பண்ணிகிட்டு இருக்காங்க. சரி ஒரு அஞ்சு நிமிசம் சாமி கும்பிட்டு வந்திருவோம்.

சாமி கும்பிட்டு வெளிய வந்ததுக்கப்புறம் தெரிஞ்சது அன்னைக்கு அங்க கோயில்ல ரெண்டு கல்யாணம்.

சரி எப்டியும் டிரெய்ண்க்கு கன்னா பின்னானு டைம் இருக்கு உக்காந்து வேடிக்கை பாப்போம்னு பாத்துட்டு வந்தவங்க போனவங்க மஞ்ச கலர், செவப்பு கலர், பச்ச கலர் சேலை, சுடிதார், மிடி, மினி, ஜீன் எல்லரயும் பாத்துட்டு பிறந்த ஜன்ம சாபல்யம் அடைஞ்சிட்டு அவிங்களை எல்லாம் வழி அனுப்பிட்டு.... நாங்க எங்க அனுப்பினோம் கல்யாணம் முடிஞ்சி எல்லாம் போயிட்டாங்க மத்தியாணம் ஒரு மணி கூட ஆகலை என்ன பண்ணலா.....ம்

அங்க இருக்கிற கோயில குளத்தில மீனுக்கு ஒரு பாக்கட் பொறியை ஒரு மணி நேரமா பிச்சி பிச்சி போட்டுட்டு திரும்ப நடராசா ஸ்டேசனுக்கு....

திரும்ப சாப்பிட்டு நாலரைக்கு டிரையின் ஏறியாச்சு மேல லக்கேஜ் வெக்கற பெர்த் கிடச்சது நீட்டி படுத்தாச்சு ஒரு ஒன்றரை மணி நேரம்.

இன்னும் எப்டியும் ஒரு மணி நேரம் ஆகும் போய் சேரரதுக்கு இன்னைக்கு பயணத்தை ப்ளாக்ல எழுதிடனும்னு நினைச்சுகிட்டே வர்ரப்ப

நண்பர் சொன்னார் அங்க டாய்லெட்ல எவனோ ஒருத்தன் அசிங்கமா படம் வரைஞ்சு என்னமோ மலயாளத்துல எழுதி வெச்சுருக்கான்.

அதுக்கென்ன இப்ப

இல்ல ஒண்ணும் இல்ல

என்ன போன் நம்பர் எழுதாம போய்டானா?

ஆமா எப்டி தெரியும். அட நானும் தானே பாத்ரூம் போனேன்.


கதவோரம் நின்னுகிட்டு வரும் போது சமீபத்தில படித்த ஒரு ப்ளாக் ஞாபகம் வந்துச்சு அதுல ஒருத்தர் ட்ரெய்ன்ல போறப்ப டாடா காட்டுற கொயந்தைங்களுக்கு திரும்ப டாடா காட்டணும் இல்லைனா அதுங்களுக்கு ஏமாத்தமா இருக்கும் அது இதுனு எழுதியிருந்தார் அது கப்புனு ஞாபகம் வந்திடிச்சு.

சரி டாடா காமிக்கலாம்னா எல்லாம் தடி மாடு தாண்டவராயனுங்கதான் ரோடுல இருக்கானுங்க. நாமெல்லாம் ‘சாட்’லயெ Male + Male = bye னு பார்முலா சொன்னவங்க இவனுங்களுக்கு போய் டாடா காட்டலாமா? நம்ம பாலிசி என்ன ஆவறது. கடைசி வரைக்கும் யாருக்கும் டாடா காமிக்காமலே மங்களூர் வந்து சேர்ந்தேன் இனிய கேரள நினைவுகளோடு.

பி.கு இதுல நான் டிரெய்ன்க்கு ஸ்டேசன்ல வெய்ட் பண்ணப்ப ரெண்டு மணி நேரம் சைட் அடிச்ச பிகர் பத்தில்லாம் சொல்லல ஏன்னா இப்பவே அவன் அவன் காதுல புகையரது இங்க வரைக்கும் நெடி ஏறுதே.

மங்களூர் சிவா

Posted in |