HOT JOB
Posted On Thursday, September 13, 2007 at at 9:52 AM by மங்களூர் சிவா





நட 'தி வாக்'
Posted On Friday, September 7, 2007 at at 1:02 PM by மங்களூர் சிவாநட 'தி வாக்' சிவாஜி தி பாஸ் ஸ்டைலில் படிக்கவும்.
நேற்று உஷா அக்கா அவர்களின் "சர்க்கரை நீயா - நானா" படிக்க நேர்ந்தத அதில் அவர் இரண்டு லின்க் கொடுத்திருந்தார் ஒன்று தேசிகன் அவர்கள் பக்கம் இன்னொன்று டாக்டர் முருகானந்தம் அவர்களின் பக்கம். சரி ஒரு எட்டு போய் பார்ப்போம் என்று போய் பார்த்தேன் அதில் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் நோயை தவிர்ப்பது எப்படி அல்லது சர்க்கரை நோய் இருப்பவர்கள் நோயின் தீவிரத்தை குறைப்பது எப்படி என்றெல்லாம் இருந்தது.
'ஜங்க் புட்' தவிர்த்தாலே ஏறக்குறைய வயிறு சம்பந்தமான எல்லா பிரச்சனைகளும் தீரும். இந்த பானி பூரின்னு ஒண்ணு விக்கறான் அவன் கடை எப்பவுமே எதாவது ஒரு டிச்சி பக்கத்துலயே இருக்கும். அவன் ஒரு நாள் வியாபாரத்துக்கு எல்லா தட்டயும் கழுவ ஒரே ஒரு பக்கட் தண்ணிதான் கொண்டு வருவான். அதுல ஒரு முக்கு முக்கிட்டு ஒரு பீத்த துணியால (பீ துணின்னும் படிக்கலாம்) ஒரு தொடை துடைச்சுட்டு குடுப்பான். நம்ம மக்களும் என்னமோ கோயில்ல உண்டை கட்டிக்கு நிக்கிற மாதிரி அவன் கிட்ட கை ஏந்தி நிக்கிறதுகள் யாரும் படிக்காத முட்டாள்கள் இல்லை டை எல்லாம் கட்டிண்டு இல்ல நிக்கிறாங்க. நார்த் இண்டியன்ஸ் இதுல ஃப்ர்ஸ்ட்.
சரி விஷயத்துக்கு வருகிறேன். சில மாதங்களுக்கு முன் சென்னையில் ஒரு உறவினர் வீட்டில் வாக் (walk) என்று புத்தகம் படிக்க நேர்ந்தது இரண்டு டாக்டர்கள் எழுதிய புத்தகம். அதில் இருந்து நினைவில் இருக்கும் தகவல்களும் மற்றும் வேறு படித்த தகவல்களும் இங்கே.
நடை பயிற்சி அல்லது நடப்பது எல்லா உடற்பயிற்சிகளையும் விட மிக எளிதான பயிற்சி. இதை 'ஏரோபிக் ப்ளஸ்' என்கிறார்க்ள். இதற்க்கு தனி கோச் எல்லாம் தேவை இல்லை. மனதும் நேரமும் மட்டுமே தேவை. சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்த நோய் இருப்பவர்கள் மட்டும் செய்ய வேண்டும் என்பது இல்லை. தினமும் ரெகுலராக நடப்பவர்களுக்கு சர்க்கரை / உயர் ரத்த அழுத்த பிரச்சனைகள் இருந்தால் அது கட்டுக்குள் இருக்கும்.
அதை விட முக்கியமாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) அதிகரிக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தாலே சளி, தலைவலி போன்ற சிறு சிறு பிரச்சனைகள் வராது.
உடம்பு வெயிட் போடாமல் இருக்கும். ட்ரெட் மில்லில் நடப்பதை விட அதி காலையில் சாலையில் நடப்பது இன்னும் சிறப்பானது ஏன் என்றால் வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்லும் போது போர் அடிக்காது. மனசுக்கும் ரிலாக்ஸ்டாக இருக்கும்.
காலையில் வளி மண்டலத்தில் ப்ராண வாயுவின் அளவு (Oxygen) அதிகமாக இருக்கும். பொல்யூசன் இருக்காது. முதுமையாகுவது (Aging) மெல்ல ஆகும். (காலேஜ் / ஸ்கூல் விடும் டைம் என்றால் கண்ணுக்கும் குளிர்ச்சியாக இருக்கும் இது மட்டும் ஐயாவோட அடிஷன்).
அப்படி நடக்கும்போது கட் ஷூ அணிவதை விட லேஸ் கட்டும் ஷூ அணிவது நல்லது இது மட்டும் ஞாபகம் இருக்கு ஏன் என்று ஒரு ஐந்து பக்கத்துக்கு எழுதியிருந்தார்கள். அதெல்லாம் செலக்டிவ் அம்னீசியாவில போய் விட்டது.
எனவே தினசரி மிக குறைந்த பட்சம் முப்பது நிமிடங்கள் நடப்போம் ஆரோக்கியத்தை பேணுவோம்.
மங்களூர் சிறு குறிப்பு
Posted On Thursday, September 6, 2007 at at 3:35 PM by மங்களூர் சிவாமங்களூர் பற்றிய சிறு குறிப்பு. சிறு குறிப்பு தான் ஏனா இது நேத்ராவதி நதிக்கரையில் அமைந்த ரொம்ப சின்ன ஊர். ஊரை ஒரு சுத்து சுத்தி வந்தாலும் ஒரு 15 கிலோமீட்டர்தான் ஆகும்.
பழைய கேரளாவாக இருந்து எல்லை தகராறு பாக பிரிவினையில் கர்நாடகாவாக ஆன ஊர் இருந்த போதும் மேடு பள்ளமான ரோடுகள், பசுமையான இயற்கை கேரளாவை ஞாகபப்படுத்தும். ஊரை சுத்தி பாக்குறேன்னு 15 கிலோ மீட்டர் தாண்டி போயிடாதீங்க அப்புறம் எந்த மோனே எந்த வேணம்னு எதாவது ஒரு சேச்சி சம்சாரிக்கும். 15-20 வது கிலோ மீட்டரில் கேரளா வந்துவிடும்.
அன்னை மங்களாதேவி குடி கொண்டுள்ள இந்த ஊர் மங்களாபுரம் என அழைக்க பட்டு வந்தது மருவி மங்களூர் என்றாகிவிட்டது. வெள்ளைக்காரன் வாயில எந்த ஊர் பேர்தான் நுழைஞ்சிருக்கு.
மங்களூரின் சிறப்பு என்னன்னு பார்த்தால் ஒண்ணும் இல்லிங்க அட நெஜமாதாங்க. ஆனா நீங்க உடுப்பி, கொல்லூர், தர்மஸ்தலா, சுப்ரமண்யா, ஹொரனாடு (ஷ்ரி அன்னபூர்னேஸ்வரி)எங்க போகனும்னாலும் மங்களூர்ல கால் வைக்காம போக முடியாது. (இது எங்க ஏரியா உள்ள வராதன்னு யாரும் சொல்லமாட்டாங்க.)
இங்க வருஷத்துல ஆறு மாசத்துக்கு மழை பெய்யுதுங்க அட நெசமாதான். ஆகா இவ்ளோ நல்ல விஷயம் இருக்கு சொல்றதுக்கு ஒண்ணும் இல்லைன்னு சொல்லிட்டியேனு யாரும் குத்தம் சொல்ல வேணாம் நீங்க இருந்து பாத்தா தெரியும் எங்க போனாலும் கங்காரு அதோட குட்டிய தூக்கீட்டு அலையுற மாதிரி ரெயின் கோட் தூக்கீட்டு அலைய வேண்டியிருக்கு. துவைச்ச ட்ரெஸ் மாச கணக்குல காயுது.
மங்களூரில் பார்க்க வேண்டிய கோயில்கள்
1. மங்களாதேவி
2. கதிரி மஞ்சுநாதர் ஆலயம்
3. குதிரொளி கோகர்நதேஷ்வரா ஆலயம்.
மத்தபடி பீச் இருக்கு. வந்த புதுசுல ஆஹா மாப்ளை பீச்க்கு போலாம்னு ஒரு க்ரூப் கிளம்பி போனா எங்களையும் எங்க பக்கத்துல ஓடற நாயயும் சேர்த்து ஒரு 150 பேர் இருந்திருப்போம் அதுவும் ஞாயித்துகிழமை எங்கன சொல்லி அழ? நாங்கள்லாம் மெட்ராஸ்ல பீச் பாத்துட்டு பீச்னா அப்டிதான் இருக்கும்னு நம்பி வந்தவங்க. அப்புறம் பீச் பாக்குற ஆசையே போயிடிச்சு. இப்போல்லாம் ஞாயித்துகிழமை பீச்க்கு ஒரு 200 பேர் வாராங்களாம் நம்ம நண்பரின் தகவல்.
பிக் பஸார் ஆட்லாப்ஸ் தெரியுங்களா? அதுக்கென்ன அதுதான் எங்க ஊரில ஏழெட்டு இருக்கேனு மெட்ராஸ்காரங்க பெங்களூர்காரங்க சொல்றது கேக்குது. ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை இந்த ஊர்ல ஒண்ணே ஒண்ணு இருக்கு அனில் அம்பானியும் காசை என்ன பண்றதுன்னு தெரியாம இங்க ஒண்ணு கட்டிபுட்டார். பீச்சுக்கு வராத மொத்த கூட்டமும் அங்கதான் ஓசில ஏசி காத்து வாங்குறாங்க. ஸோ மை ப்ரபெரண்ஸ் ஆல்ஸோ பிக் பஸார். ஓசில சைட் அடிக்குறதுக்கு ப்ரபெரண்ஸ் வேறயானு கேக்காதீங்கப்பு இங்கன எம்.ஜி. ரோடு, ப்ரிகேட் ரோட் இல்லை ஒரு ஸ்பென்சர் ப்ளாசா ம்கூம்... எதுவும் இல்லை. நோ அதர் சாய்ஸ்.
அடுத்த் பாகம் படிக்க இங்க க்ளிக் பண்ணுங்க.
