நீங்கள் sysindian ஆ?

அன்பு நண்பர்களே நான் இந்த வலை பூ உலகிற்கு வந்து மூன்று மாதங்கள் ஆகிறது. நான் என் முதல் பதிவில் சொல்லியபடி பத்து வருடங்களாக வலையை உபயோகிப்பவன். பத்து வருடங்களுக்கு முன்பே sysindia.com எனும் வலை தளத்தில் Discussion forums ல் இதே போன்று பல விஷயங்கள் பலருடன் உரையாடி இருக்கிறோம்.

நான் வலை பூ ஆரம்பித்த இந்த மூன்று மாத காலத்திலேயே என் பழைய sysindia நண்பர்கள் சிலர் கிடைத்துவிட்டார்கள். அவர்களில் ஒருவர் பிளாக்கில் பெரும்பாலும் அனைவராலும் அறியப்பெற்ற 'பெனாத்தல் சுரேஷ்'.

இன்னொருவர் சந்தனமுல்லை.

மற்றும் நாணயம் எழுதி வரும் தென்றலும் பழைய sysindia வாசகர் என பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இதை படிக்கும் நீங்கள் ஒரு sysindia forum மெம்பர் ஆக இருந்தால் உங்களை பற்றி பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் அன்பு நண்பன் சிவா மங்களூர்.

Posted in Labels: |