~~~ சேமிப்பு ~~~

காணாமல் போன
உன் ஆபீஸ் ID
ரப்பர் பேண்ட்
கிளி பச்சை துப்பட்டா
கைக்குட்டை

எல்லாம் என் பெட்டியில்
யார் என்ன
சொன்னாலென்ன
என்ன தெரியும்
சேமிப்பை பற்றி
அவர்களுக்கு


அடுத்து நான் சுடப்போவது
உன் இதழில் இருந்து
முத்தத்தைதான்
என் கவலையோ
அதை எப்படி பெட்டியில்
சேமிப்பது??

பி.கு : மேல இருக்குற தீவாளி ஸ்வீட்ல இருந்து பசங்க எல்லாம் சண்டை போடாம ஒவ்வொருத்தரா எடுத்துக்கங்க.

பொண்ணுங்களுக்கு நோ ஸ்வீட்.

Posted in Labels: , |