எம்மா எம்மா நோடுதே நோடுதே

எம்மா எம்மா நோடுதே நோடுதே
நோட பாரதன்ன நான் நோடுதே

எம்மா எம்மா மாடுதே மாடுதே
மாட பாரதன்ன நான் மாடுதே

இது ஒரு ஜூப்பர் ஹிட் அஜால் குஜால் சாங்-ன்றது பெங்களூர்ல இருந்து வலை பின்னுற ச்சே வலை எழுதற ப்ளாகர் எல்லார்க்கும் தெரிஞ்சிருக்கும். யூ2 லயோ, உதயா, உஷே, இல்லைனா இ-கன்னடா, இசட்-கன்னடா எதுலயாவது கன்டிப்பா பாத்திருப்பீங்க நம்ம கன்னட ஜூப்பர் ஸ்டார் ரவிச்சந்திரனும் கன்னடா அல்ட்ரா ஸ்டார் உபேந்திராவுடைய பொண்டாட்டி ப்ரியங்கா திரிவேதியும் கலக்கின பாட்டு அது. பெங்களூர் தவிர மத்த ஊர்ல இருந்து வலை பின்னறவங்க யூ ட்யூப்ல தேடிக்கங்க.

யார் அந்த ப்ரியங்கா திரிவேதின்னு நாக்கு மேல பல்லை போட்டு கேக்குறவங்களுக்கு ஒரு இன்ட்ரோ. ராஜான்னு ஒரு தமிழ் படம் நம்ம அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிச்சது அதுல இந்தம்மா ஒரு அப்பாவி நம்மாளு பொசுக்கு பொசுக்குன்னு இந்த பாப்பாவுக்கு உம்மா குடுத்துருவார் அதுவும் உதட்டுல. அந்த படத்தை ரிப்பீட்லாம் பாத்து எத்தனை குடுத்தார்னெல்லாம் எண்ணினாதா ஞாபகம்.

அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி இந்த பாட்ட பாக்கவும் அடடா இந்த புள்ளையவா நாம அப்பாவின்னு நெனைச்சோம்னு ஆயிடிச்சு. இதை சொல்ல வற்றப்ப நேத்து சாட் பண்ணிகிட்டிருக்கப்ப ஒரு அம்மிணி திடீர்னு நான் ஒரு அப்பாவின்னு சொல்ல (அவங்களை அவங்களே சொல்லிக்கிறாங்களாம்), அதுக்கு ஸ்பெல்லிங்காச்சும் தெரியுமான்னு கேட்டதெல்லாம் நான் இப்ப உங்களுக்கு சொல்ல போறதில்லை.

இன்னைக்கு காலைல ஒரு 7 மணி இருக்கும் வாக்கிங் போறப்ப ரோடு ஓரத்துல ஒருத்தன் புளிய மரத்தை கட்டிபுடிச்சிகிட்டு விழுந்து கிடந்தான். சரி தண்ணி வண்டியா இருக்கும்னு நினைச்சுகிட்டு நடந்தா நடு ரோடுல ஒரு பல்சர் இருக்கு அதுவும் ஹெட் லைட் எல்லாம் உடைஞ்சு அப்பதான் புரிஞ்சது இது ஆக்சிடெண்ட்.

காலங்காத்தால இதை பாத்ததுக்குதான் இந்த பாட்டோட மொத ரெண்டு வரி இப்ப புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.

சரி பாத்துட்டு என்ன பன்னியிருக்கனும் நான்?. ஆனா நான் ஏற்கனவே டாக்டர்கிட்ட எனக்காக வாங்கிவெச்சிருந்த அப்பாயிண்ட்மெண்ட் வேஸ்ட் ஆயிடக்கூடாதேன்னு தாண்டி போயிகிட்டே இருந்துட்டேன். (என்னங்க பன்றது வேலைக்கு போவாம ஆஸ்பத்திரி ஸ்டேஷனுக்கெல்லாம் போறதுக்கு டைம் இல்லைங்க )

இதுக்கு அர்த்தம்தான் இது அடுத்த ரெண்டு வரிக்கான அர்த்தம்.

டிஸ்கி : வண்டி ஓட்டறப்ப ஜாக்கிரதையா ஓட்டுங்கப்பு.

மீடியா நண்பர் ஒருத்தருக்கு போன் போட்டு சொல்லியிருக்கேன் கவனிச்சுப்பார்ன்னு நம்பறேன்.

Posted in Labels: |