ராகவன் கவுத்துட்டீங்களே!!

ராகவன் கவுத்துட்டீங்களே!!

நான் உங்க போஸ்ட்டை படிச்சிட்டு அதுக்கு ஒரு கமெண்டும் போட்டுட்டு ஒடனே எங்க HR ல போயி யோவ் உன் வேலையும் வேணாம் ஒண்ணும் வேணாம். பிசாத்து நீ குடுக்குற சம்பளத்துக்கு எவனாவது வேலை செய்வானா. பாத்துகினே இருய்யா எனக்காக எங்கிருந்தோ ஒரு ராஜகுமாரி வருவா பாரு அதுவும் 'ஸ்கோடா ஒக்டோவியால' அப்டி இப்டின்னு கன்னா பின்னான்னு கேட்டுட்டு வந்திட்டேன்.

சார் சார் வேணாம் சார் நீங்க ரொம்ப நல்லவரு வல்லவரு நாலு விசயம் தெரிஞ்சவரு. உங்களாலதான் இந்த கம்பெனியே நடக்குது அப்டீன்னெல்லாம் அவங்க சொல்லவந்து ஆனா சொல்லலைங்கறத நான் மைண்ட் ரீடிங் பன்னி தெரிஞ்சிகிட்டேன் அது தனி.


ராஜகுமாரி வருவா ரைட்டு அது என்ன ஸ்கோடா ஒக்டோவியாங்கறீங்களா என்னங்க இப்பல்லாம் அஞ்சாயிரம் பத்தாயிரம் சம்பாறிக்கறதுங்களே சாப்ட்வேர் ஆளைத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நின்னாகூட பரவாயில்லை ஒத்த கால்ல அதுவும் ஒத்த விரல்ல நிக்கிதுங்களாம் நான் சொல்லலை நம்ம வசந்தம் ரவிங்கிறவர் பதிவு போட்டு சொல்லியிருக்கார். அப்டி இருக்கப்ப முப்பதாயிரம் வாங்கிட்டிருக்க எனக்கு வறப்போற ராஜகுமாரி கொறைஞ்சது லட்ச ரூவா வாங்க மாட்டாங்களா இல்ல அவங்க கிட்ட ஸ்கோடாதான் இருக்காதா?

உங்க பதிவுல கமெண்ட் போட்டுட்டு மூனு நாளா மெயில் பாக்ஸையே திறந்து வெச்சுகிட்டு உக்காந்திருக்கேன். ஸ்கோடா வேணாம் அட்லீஸ்ட் ஒரு ஃபோர்ட் பீஸ்டா வேணாம்பா ஒரு 800 அட அதுவும் வேணாம் ஒரு கைனெடிக் ஹோண்டா இல்ல ஸ்கூட்டி பெப் அட ஒரு BSA SLR கூட வரலிங்னா என் பின்னூட்டத்துக்கும் பதிலு வரலிங்னா. ஒரு வேளை இங்க என் போட்டோவ பாத்துட்டு வேஸ்ட்டு பையன்னு முடிவு பன்னிட்டாங்களோ என்னவோ!!

ஒன்னு சொல்லிக்கறேங்னா இந்த இடத்துல ஆனாலும் நீங்க கொஞ்சம் 'ஓவரா சவுண்ட்' வுட்டுட்டீங்கனா.

என்னோட Expectations ரொம்ப ஓவர்னு யார்ம் பீல் பன்னா கீழ இருக்க வீடியோவ பாருங்க.

Posted in Labels: |