ஐசு


பஸ்ல வற்றப்ப
முன்னாடி படில
ஏறி வந்தா அவ
சும்மா நச்சுனு இருக்காளே
மச்சம்தான்டா சிவா
என்னய நானே
பாராட்டிக்கிறதுக்குள்ள
ரொம்ப பக்கத்துலயே
வந்துட்டா

வீட்ல எல்லாம் செளக்யமா
அண்ணன் எப்டி இருக்கு
அக்கா எப்டி இருக்கு
விலாவாரியா
எல்லாரையும் கேக்குறாளே
பெரிய ஜோசியக்காரியோ
ஜெர்க் ஆக வெச்சிட்டாளே!!

யாருன்னு தெரியலை
அப்படின்னு சொன்னதும்
அடுத்த குண்டை தூக்கி
அனாயாசமா
தலைமேல போட்டாளே
அண்ணான்னு!! :-(

சரிசரி விடுடா
கைப்புள்ள இதெல்லாம்
புதுசா நமக்கு
வாங்கிகுடுத்தது எல்லாம்
செமகட்டு கட்டீட்டு
பில்லுக்கு பணம்
குடுத்த பின்னாடி
அண்ணான்னு
சொன்னவளுங்களுக்கு
இவ எவ்வளவோ
பரவால்லதான்

நாந்தான்னே ஐசு
உங்க பக்கத்துவீட்டு ஐசு
எப்பவும் உங்க
வீட்டுலயே இருப்பேனே
அப்படின்னா
கொஞ்சம் கொஞ்சமா
புரிஞ்சது

அடிப்பாவி
ஒரு மூனு வருசம்
வெளியூர்ல படிச்சிட்டு
பத்து வருசம் ஊர்ல
இல்லைன்னா
இப்படியாடி வளருவீங்க
என்ன கொடுமை ஐசு இது

Posted in Labels: |