சாக்லெட் பேபி – இணையத்தின் செல்லப் பெண்ணுடன் ஒரு சந்திப்பு

சாக்லெட் பேபி – இணையத்தின் செல்லப் பெண்ணுடன் ஒரு சந்திப்பு

சென்னையிலிருந்து ஆறரை மணிநேர அன்ரிசர்வ்ட் ரயில் பயணம். எல்லா வலிகளையும் ப்பூ வென ஒற்றை சிரிப்பில் போக்கி விட்டாள் சாக்லெட் பேபி - அழகிய தமிழ் மகள் இணையத்தின் செல்ல குட்டி நிலா நவம்பர் 20, 2007 மாலை ஆறரைக்கு.

சென்னை பயண திட்டத்தில் இல்லாமல் இருந்து திடீர் என சேர்க்கப்பட்டதால் சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு ரிசர்வேசன் இல்லாமல் வரும்படி ஆனது.

கண்ண குழி விழும் கவிதையான சிரிப்பு மழலையான பேச்சு குட்டீஸ்க்கே உரிதான எதற்கெடுத்தாலும் அம்மா என அடம். கொஞ்ச நேரத்திலேயே ஒட்ட ஆரம்பித்துவிட்டாள். அவளின் சேட்டைகளை பார்த்துக்கொண்டே மிக இனிமையாக கழிந்தது மாலை.

சில நாட்களே இணையத்தில் அறிமுகமாகி இருந்த இந்த புதியவனை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்த திரு.நந்து மற்றும் அவரது மனைவி சசிக்கு நன்றி.

Posted in Labels: |