ஐ மிஸ் யூ டா செல்லம்

ஐ மிஸ் யூ டா செல்லம்

ஐ மிஸ் யூ டா செல்லம் , ஐ மிஸ் யூ எ லாட். உன்னோட ஒவ்வொரு அசைவையும் சின்ன சின்ன மாற்றங்களையும் வளர்சியையும் ரொம்ப மிஸ் பன்றேன்டா. ஒவ்வொரு நாளும் நினைச்சிப்பேன் இன்னைக்கு ஃபுல்லா உன் கூடவே இருக்கனும்னு ஆனா முடியலை ஐ ஆம் வெரி சாரிடா குட்டிம்மா.

ஆபீஸ்ல ரொம்ப ஆணி அப்பிடினெல்லாம் உன்கிட்ட நான் பொய் சொல்லமாட்டேன். வீட்டுல நானா கொஞ்சம் ஆணியை அடிச்சு வெச்சுகிட்டு புடுங்கிகிட்டிருக்கேன் அது ஆணியா இல்லை நான் எனக்கே வெச்சுகிட்ட ஆப்பாங்கிறது கொஞ்ச நாள் போனா தான் தெரியும்டா செல்லம்.

ஒரு வாரம் பத்து நாளாவே இப்பிடித்தான்டா செல்லம் ஆகிட்டிருக்கு. ஐ மிஸ் யூ டா செல்லம் , ஐ மிஸ் யூ எ லாட் டா தமிழ்மணம்

Posted in Labels: |