நான் பிளாக்குக்கு புதுசு

ஒரு பத்து வருஷமா நான் நெட் யூஸ் பன்னிகிட்டு இருக்கென் ஆனா ஒரு கொஞ்ச நாளாதான் பிளாக் படிக்கிறென்.

sysindia.com அப்படின்னு ஒரு சைட் இருந்திச்சு. பத்து வருஷத்துக்கு முன்னாடியே அதில நாங்க ஒரு குருப் இப்பிடிதான் எப்பவும் கும்மி அடிச்சிகிட்டிருந்தோம் [PMKR, ICECREAM,GANESH_TH, KD_NO1, GUNDA,.......]. காலத்தின் கோலம், அந்த சைட் வெப் மாஸ்டரின் முட்டாள்தனம [சைட்ல எரர் வந்தா வேற என்ன சொல்லறதாம்], என்னுடைய பிஸி வர்க் [சோம்பேறிதனம்] யெல்லாம் சேர்ந்து விட்டாச்சு [விட்டாச்சு....விட்டாச்சு].

கும்மியை மறந்து இருந்த நேரத்தில எப்பிடி வந்தேன்னு தெரியலை [ஏந்தான் வந்தேன்னும் தெரியலை] , வந்து பார்த்தா இங்க ஒரு [கொலை வெறிகார] கும்பலே உக்காந்து கும்மி அடிச்சிகிட்டிருக்கு.

சரிடா சரிடா சீக்கிரம் ஜ்யோதில ஐக்கியமாயிடுன்னு மனசு வேற சொல்ல சரின்னு ஆரம்பிக்கிரேன்.

இதனால் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நானும் ப்ளாகர்தான்..ப்ளாகர்தான்..ப்ளாகர்தான்.. (தலைநகரம் வடிவேல் ஸ்டைலில் படிக்கவும்)

உங்கள் அன்பு சிவா, மங்களூர்.

Posted in |