ரியல் வீக் எண்ட் ஜொள்ளூ!!!

ரியல் வீக் எண்ட் ஜொள்ளூ!!!

"ஒண்ணு தமிழ்மணம் அதிரனும் இல்லை என்கிட்ட கதறனும்" எப்பிடி பஞ்சி டயலாக் ஓகேவா!!























டிஸ்கி : இதைவிட ஸ்பெசல் போட்டோ ஒன்னு இதுக்கு அடுத்த நம்பர்ல இல்லை !!!

Posted in Labels: |

ராகவன் கவுத்துட்டீங்களே!!

ராகவன் கவுத்துட்டீங்களே!!

நான் உங்க போஸ்ட்டை படிச்சிட்டு அதுக்கு ஒரு கமெண்டும் போட்டுட்டு ஒடனே எங்க HR ல போயி யோவ் உன் வேலையும் வேணாம் ஒண்ணும் வேணாம். பிசாத்து நீ குடுக்குற சம்பளத்துக்கு எவனாவது வேலை செய்வானா. பாத்துகினே இருய்யா எனக்காக எங்கிருந்தோ ஒரு ராஜகுமாரி வருவா பாரு அதுவும் 'ஸ்கோடா ஒக்டோவியால' அப்டி இப்டின்னு கன்னா பின்னான்னு கேட்டுட்டு வந்திட்டேன்.

சார் சார் வேணாம் சார் நீங்க ரொம்ப நல்லவரு வல்லவரு நாலு விசயம் தெரிஞ்சவரு. உங்களாலதான் இந்த கம்பெனியே நடக்குது அப்டீன்னெல்லாம் அவங்க சொல்லவந்து ஆனா சொல்லலைங்கறத நான் மைண்ட் ரீடிங் பன்னி தெரிஞ்சிகிட்டேன் அது தனி.


ராஜகுமாரி வருவா ரைட்டு அது என்ன ஸ்கோடா ஒக்டோவியாங்கறீங்களா என்னங்க இப்பல்லாம் அஞ்சாயிரம் பத்தாயிரம் சம்பாறிக்கறதுங்களே சாப்ட்வேர் ஆளைத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நின்னாகூட பரவாயில்லை ஒத்த கால்ல அதுவும் ஒத்த விரல்ல நிக்கிதுங்களாம் நான் சொல்லலை நம்ம வசந்தம் ரவிங்கிறவர் பதிவு போட்டு சொல்லியிருக்கார். அப்டி இருக்கப்ப முப்பதாயிரம் வாங்கிட்டிருக்க எனக்கு வறப்போற ராஜகுமாரி கொறைஞ்சது லட்ச ரூவா வாங்க மாட்டாங்களா இல்ல அவங்க கிட்ட ஸ்கோடாதான் இருக்காதா?

உங்க பதிவுல கமெண்ட் போட்டுட்டு மூனு நாளா மெயில் பாக்ஸையே திறந்து வெச்சுகிட்டு உக்காந்திருக்கேன். ஸ்கோடா வேணாம் அட்லீஸ்ட் ஒரு ஃபோர்ட் பீஸ்டா வேணாம்பா ஒரு 800 அட அதுவும் வேணாம் ஒரு கைனெடிக் ஹோண்டா இல்ல ஸ்கூட்டி பெப் அட ஒரு BSA SLR கூட வரலிங்னா என் பின்னூட்டத்துக்கும் பதிலு வரலிங்னா. ஒரு வேளை இங்க என் போட்டோவ பாத்துட்டு வேஸ்ட்டு பையன்னு முடிவு பன்னிட்டாங்களோ என்னவோ!!

ஒன்னு சொல்லிக்கறேங்னா இந்த இடத்துல ஆனாலும் நீங்க கொஞ்சம் 'ஓவரா சவுண்ட்' வுட்டுட்டீங்கனா.

என்னோட Expectations ரொம்ப ஓவர்னு யார்ம் பீல் பன்னா கீழ இருக்க வீடியோவ பாருங்க.

Posted in Labels: |

ஐ மிஸ் யூ டா செல்லம்

ஐ மிஸ் யூ டா செல்லம்

ஐ மிஸ் யூ டா செல்லம் , ஐ மிஸ் யூ எ லாட். உன்னோட ஒவ்வொரு அசைவையும் சின்ன சின்ன மாற்றங்களையும் வளர்சியையும் ரொம்ப மிஸ் பன்றேன்டா. ஒவ்வொரு நாளும் நினைச்சிப்பேன் இன்னைக்கு ஃபுல்லா உன் கூடவே இருக்கனும்னு ஆனா முடியலை ஐ ஆம் வெரி சாரிடா குட்டிம்மா.

ஆபீஸ்ல ரொம்ப ஆணி அப்பிடினெல்லாம் உன்கிட்ட நான் பொய் சொல்லமாட்டேன். வீட்டுல நானா கொஞ்சம் ஆணியை அடிச்சு வெச்சுகிட்டு புடுங்கிகிட்டிருக்கேன் அது ஆணியா இல்லை நான் எனக்கே வெச்சுகிட்ட ஆப்பாங்கிறது கொஞ்ச நாள் போனா தான் தெரியும்டா செல்லம்.

ஒரு வாரம் பத்து நாளாவே இப்பிடித்தான்டா செல்லம் ஆகிட்டிருக்கு. ஐ மிஸ் யூ டா செல்லம் , ஐ மிஸ் யூ எ லாட் டா தமிழ்மணம்

Posted in Labels: |

சாக்லெட் பேபி – இணையத்தின் செல்லப் பெண்ணுடன் ஒரு சந்திப்பு

சாக்லெட் பேபி – இணையத்தின் செல்லப் பெண்ணுடன் ஒரு சந்திப்பு

சென்னையிலிருந்து ஆறரை மணிநேர அன்ரிசர்வ்ட் ரயில் பயணம். எல்லா வலிகளையும் ப்பூ வென ஒற்றை சிரிப்பில் போக்கி விட்டாள் சாக்லெட் பேபி - அழகிய தமிழ் மகள் இணையத்தின் செல்ல குட்டி நிலா நவம்பர் 20, 2007 மாலை ஆறரைக்கு.

சென்னை பயண திட்டத்தில் இல்லாமல் இருந்து திடீர் என சேர்க்கப்பட்டதால் சென்னையிலிருந்து ஈரோட்டிற்கு ரிசர்வேசன் இல்லாமல் வரும்படி ஆனது.

கண்ண குழி விழும் கவிதையான சிரிப்பு மழலையான பேச்சு குட்டீஸ்க்கே உரிதான எதற்கெடுத்தாலும் அம்மா என அடம். கொஞ்ச நேரத்திலேயே ஒட்ட ஆரம்பித்துவிட்டாள். அவளின் சேட்டைகளை பார்த்துக்கொண்டே மிக இனிமையாக கழிந்தது மாலை.

சில நாட்களே இணையத்தில் அறிமுகமாகி இருந்த இந்த புதியவனை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்த திரு.நந்து மற்றும் அவரது மனைவி சசிக்கு நன்றி.

Posted in Labels: |

பில்லா -2007 நமீதா, நயந்தாரா & அஜித் ஸ்பெஷல் போட்டோஸ்


பில்லா -2007
நமீதா, நயந்தாரா & அஜித் ஸ்பெஷல் போட்டோஸ்


படம் முழுதாக தெரிய படத்தின் மேல் க்ளிக் செய்யவும்

































நீங்கள் sysindian ஆ?

அன்பு நண்பர்களே நான் இந்த வலை பூ உலகிற்கு வந்து மூன்று மாதங்கள் ஆகிறது. நான் என் முதல் பதிவில் சொல்லியபடி பத்து வருடங்களாக வலையை உபயோகிப்பவன். பத்து வருடங்களுக்கு முன்பே sysindia.com எனும் வலை தளத்தில் Discussion forums ல் இதே போன்று பல விஷயங்கள் பலருடன் உரையாடி இருக்கிறோம்.

நான் வலை பூ ஆரம்பித்த இந்த மூன்று மாத காலத்திலேயே என் பழைய sysindia நண்பர்கள் சிலர் கிடைத்துவிட்டார்கள். அவர்களில் ஒருவர் பிளாக்கில் பெரும்பாலும் அனைவராலும் அறியப்பெற்ற 'பெனாத்தல் சுரேஷ்'.

இன்னொருவர் சந்தனமுல்லை.

மற்றும் நாணயம் எழுதி வரும் தென்றலும் பழைய sysindia வாசகர் என பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இதை படிக்கும் நீங்கள் ஒரு sysindia forum மெம்பர் ஆக இருந்தால் உங்களை பற்றி பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் அன்பு நண்பன் சிவா மங்களூர்.

Posted in Labels: |

சாப்ட்வேர்காரர்கள் கிளப்பும் கலவரம்? ?

எவ்வளவோ மொக்கை போட்டுட்டோம் இன்னைக்கு ஒன்னு போட்டுற மாட்டமா?

முதலில் டிஸ்கி 1: நான் ஒரு சாப்ட்வேர் ஆள் கிடையாது (ஹார்ட்வேர்ங்னா), DVDல் படம் பார்ப்பதற்க்கும், ப்ரெளஸ் செய்வதற்கும், கேம்ஸ் ஆடவும் மட்டுமே கணினியைத் தொடுபவன், மற்ற நேரங்களில் சாப்பாடு தூக்கம்தான், தூக்கம்தான், தூக்கம்தான்.

டிஸ்கி 2: சீரியஸ்ஸா கமெண்ட் போடலாம்னு வற்றவங்க எல்லாம் இந்த தலைப்புல எழுதின மத்த ப்ளாக்ல போட்டுக்கங்னா இங்கன வேணாம்.

சரி எல்லாம் ஓகே என்னத்த எழுதறது??

ஏ ஐயாங்களே

செலவு பன்னுங்க
ஊதாரித்தனம் பன்னாதீங்க

சிக்கனமா இருங்க
கஞ்சத்தனம் பன்னாதீங்க

சேத்து வைய்யுங்க
ஒன்னுத்துக்குமில்லாம ஆயிடாதீங்க

நன்றி வணக்கம்

Posted in Labels: |

பாலாஜி மனோகரனுக்கு (வெட்டிபயல்) திருமண நாள் வாழ்த்துக்கள்

இன்று நவம்பர் 15, 2007 திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கும் அன்பு நண்பர் ‘வெட்டிபயல்’ என்று நம் அனைவராலும் அறியப்பெறும் பாலாஜி மனோகரனுக்கும் அவரது இல்வாழ்க்கை துணைவியாக வருகின்ற சரண்யாவிற்கும் வலைப்பூ உலக சார்பாக வாழ்த்துக்கள்.

பாலாஜி கடந்த சில மாதங்களாகவே அவரது வலைப்பூவில் எதும் எழுதாமல் மீள் பதிவு போட்டு ஒப்பேத்திகொண்டிருந்தார். வலைப்பூவிற்கு அவர் கொடுத்த VRS பரிசீலிக்கப்பட மாட்டாது. அவரின் துணைவியின் பெயரிலும் ஒரு புதிய வலைப்பூ துவங்க வைக்கிறாரா அல்லது பூரிக்கட்டை, தோசைக்கரண்டிக்கு சரண்டர் ஆகிவிடுகிறாரா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

பாலாஜிக்கு கீழ்வரும் பதிவுகள் Dedicate செய்யப்படுகிறது.

http://penathal.blogspot.com/2007/10/m-sc-wifeology-1.html
http://penathal.blogspot.com/2007/11/2-wifeology.html
http://penathal.blogspot.com/2007/11/wifeology-3.html
http://mangalore-siva.blogspot.com/2007/10/made-easy-to-understand.html
http://mangalore-siva.blogspot.com/2007/09/joys-of-marriage.html

Posted in Labels: |

Post Production மஹாத்மியங்கள்!!! - Revised

சர்வேசன் இன்னைக்கு ஒரு பதிவு போட்டிருக்கார்

Post Production மஹாத்மியங்கள்!

அப்படின்னு.

//
'சாதா' படங்களை மெருகேற்ற Post Production செய்யுங்கள். இதை சுலபமாக செய்ய பல இலவச மென்பொருள்கள் உள்ளன. மேல் விவரங்கள் PIT வலைத்தளத்தில் படித்து பயனடையுங்கள்.கீழே உள்ள படங்கள், கேரளாவில் உள்ள பேக்கல் போர்ட் (உயிரே உயிரே பாடல் எடுத்த இடம்) அருகில் எடுத்தவை.
//

ஆனா அந்த பதிவுல இருக்கிற படங்களை பாத்து ஒன்னும் வித்தியாசமே தெரியலையேன்னு ஏகப்பட்ட கம்ப்ளெய்ண்ட் நம்ம ஸ்பெசல் டீம்க்கு வந்தது.

சரி நாம கரெக்டான படங்களைத்தருவோம்னு போட்ட பதிவுதான் இது.

இன்னொரு உபரி தகவல்
//
கேரளாவில் உள்ள பேக்கல் போர்ட் (உயிரே உயிரே பாடல் எடுத்த இடம்) அருகில் எடுத்தவை.
//
இந்த பேகல் போர்ட் மங்களூரிலிருந்து 60கி.மீ. ஜஸ்ட் 1 ஹவர் டிரைவிங் டிஸ்டன்ஸ் :-)

சரி படத்தை பாக்க போவோம் நாம அதுதானே முக்கியம்


Before


After




Before


After




Before


After




Before


After




Before


After




Before


After




இதுக்குமேலயும் புரியலைன்னா ஒன்னும் செய்யறதுக்கில்லை

எம்மா எம்மா நோடுதே நோடுதே

எம்மா எம்மா நோடுதே நோடுதே
நோட பாரதன்ன நான் நோடுதே

எம்மா எம்மா மாடுதே மாடுதே
மாட பாரதன்ன நான் மாடுதே

இது ஒரு ஜூப்பர் ஹிட் அஜால் குஜால் சாங்-ன்றது பெங்களூர்ல இருந்து வலை பின்னுற ச்சே வலை எழுதற ப்ளாகர் எல்லார்க்கும் தெரிஞ்சிருக்கும். யூ2 லயோ, உதயா, உஷே, இல்லைனா இ-கன்னடா, இசட்-கன்னடா எதுலயாவது கன்டிப்பா பாத்திருப்பீங்க நம்ம கன்னட ஜூப்பர் ஸ்டார் ரவிச்சந்திரனும் கன்னடா அல்ட்ரா ஸ்டார் உபேந்திராவுடைய பொண்டாட்டி ப்ரியங்கா திரிவேதியும் கலக்கின பாட்டு அது. பெங்களூர் தவிர மத்த ஊர்ல இருந்து வலை பின்னறவங்க யூ ட்யூப்ல தேடிக்கங்க.

யார் அந்த ப்ரியங்கா திரிவேதின்னு நாக்கு மேல பல்லை போட்டு கேக்குறவங்களுக்கு ஒரு இன்ட்ரோ. ராஜான்னு ஒரு தமிழ் படம் நம்ம அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிச்சது அதுல இந்தம்மா ஒரு அப்பாவி நம்மாளு பொசுக்கு பொசுக்குன்னு இந்த பாப்பாவுக்கு உம்மா குடுத்துருவார் அதுவும் உதட்டுல. அந்த படத்தை ரிப்பீட்லாம் பாத்து எத்தனை குடுத்தார்னெல்லாம் எண்ணினாதா ஞாபகம்.

அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சி இந்த பாட்ட பாக்கவும் அடடா இந்த புள்ளையவா நாம அப்பாவின்னு நெனைச்சோம்னு ஆயிடிச்சு. இதை சொல்ல வற்றப்ப நேத்து சாட் பண்ணிகிட்டிருக்கப்ப ஒரு அம்மிணி திடீர்னு நான் ஒரு அப்பாவின்னு சொல்ல (அவங்களை அவங்களே சொல்லிக்கிறாங்களாம்), அதுக்கு ஸ்பெல்லிங்காச்சும் தெரியுமான்னு கேட்டதெல்லாம் நான் இப்ப உங்களுக்கு சொல்ல போறதில்லை.

இன்னைக்கு காலைல ஒரு 7 மணி இருக்கும் வாக்கிங் போறப்ப ரோடு ஓரத்துல ஒருத்தன் புளிய மரத்தை கட்டிபுடிச்சிகிட்டு விழுந்து கிடந்தான். சரி தண்ணி வண்டியா இருக்கும்னு நினைச்சுகிட்டு நடந்தா நடு ரோடுல ஒரு பல்சர் இருக்கு அதுவும் ஹெட் லைட் எல்லாம் உடைஞ்சு அப்பதான் புரிஞ்சது இது ஆக்சிடெண்ட்.

காலங்காத்தால இதை பாத்ததுக்குதான் இந்த பாட்டோட மொத ரெண்டு வரி இப்ப புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன்.

சரி பாத்துட்டு என்ன பன்னியிருக்கனும் நான்?. ஆனா நான் ஏற்கனவே டாக்டர்கிட்ட எனக்காக வாங்கிவெச்சிருந்த அப்பாயிண்ட்மெண்ட் வேஸ்ட் ஆயிடக்கூடாதேன்னு தாண்டி போயிகிட்டே இருந்துட்டேன். (என்னங்க பன்றது வேலைக்கு போவாம ஆஸ்பத்திரி ஸ்டேஷனுக்கெல்லாம் போறதுக்கு டைம் இல்லைங்க )

இதுக்கு அர்த்தம்தான் இது அடுத்த ரெண்டு வரிக்கான அர்த்தம்.

டிஸ்கி : வண்டி ஓட்டறப்ப ஜாக்கிரதையா ஓட்டுங்கப்பு.

மீடியா நண்பர் ஒருத்தருக்கு போன் போட்டு சொல்லியிருக்கேன் கவனிச்சுப்பார்ன்னு நம்பறேன்.

Posted in Labels: |

பொன்ஸ் அக்காவிற்க்காக !!!!!

பொன்ஸ் அக்காவிற்க்காக !!!!!
எங்க உங்க யானைய கண்டுபிடிங்க பாப்போம்





















Posted in Labels: , |

ஐசு






பஸ்ல வற்றப்ப
முன்னாடி படில
ஏறி வந்தா அவ
சும்மா நச்சுனு இருக்காளே
மச்சம்தான்டா சிவா
என்னய நானே
பாராட்டிக்கிறதுக்குள்ள
ரொம்ப பக்கத்துலயே
வந்துட்டா

வீட்ல எல்லாம் செளக்யமா
அண்ணன் எப்டி இருக்கு
அக்கா எப்டி இருக்கு
விலாவாரியா
எல்லாரையும் கேக்குறாளே
பெரிய ஜோசியக்காரியோ
ஜெர்க் ஆக வெச்சிட்டாளே!!

யாருன்னு தெரியலை
அப்படின்னு சொன்னதும்
அடுத்த குண்டை தூக்கி
அனாயாசமா
தலைமேல போட்டாளே
அண்ணான்னு!! :-(

சரிசரி விடுடா
கைப்புள்ள இதெல்லாம்
புதுசா நமக்கு
வாங்கிகுடுத்தது எல்லாம்
செமகட்டு கட்டீட்டு
பில்லுக்கு பணம்
குடுத்த பின்னாடி
அண்ணான்னு
சொன்னவளுங்களுக்கு
இவ எவ்வளவோ
பரவால்லதான்

நாந்தான்னே ஐசு
உங்க பக்கத்துவீட்டு ஐசு
எப்பவும் உங்க
வீட்டுலயே இருப்பேனே
அப்படின்னா
கொஞ்சம் கொஞ்சமா
புரிஞ்சது

அடிப்பாவி
ஒரு மூனு வருசம்
வெளியூர்ல படிச்சிட்டு
பத்து வருசம் ஊர்ல
இல்லைன்னா
இப்படியாடி வளருவீங்க
என்ன கொடுமை ஐசு இது

Posted in Labels: |

'டயபடிஸ்'ல் இருந்து கண்களை பாதுகாப்பது எப்படி?

'டயபடிஸ்' கண்களை பாதுகாப்பது எப்படி?

டயபடிஸ் தமிழில் நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் எனப்படுகிறது.

இதை சரியாக கவனிக்காவிட்டால் முதலில் கண், கால், சிறுநீரகம், இருதயம் என அனைத்து உறுப்புகளின் செயல்பாடுகளையும் குறைத்துவிடுகிறது.

சரி 'டயபடிஸ்'ல் இருந்து கண்களை பாதுகாப்பது எப்படி?




திருமண சந்தை

திருமண சந்தை

திவ்யா அக்கா ரெண்டு பதிவு போட்டிருக்காங்க பொண்ணு பாக்க போகலாம் வாங்க பாகம்1, பாகம்2,ன்னு நல்ல காமெடியான பதிவு.

“திருமணம் தேவையா இல்லையா” அப்படிங்கிறதே ஒரு பெரிய வாதத்திற்கான தலைப்பு. இதை பத்தி ஏற்கனவே திருமணம் ஓர் அலசல்னு ஒரு பதிவு போட்டாச்சு.

இந்த பதிவு திருமணம் தேவை அதுவும் அப்பா அம்மா பாத்து வைக்கிற பொண்ணு / பையன் தான் கல்யாணம் பன்னுவேன்.

சைட் அடிக்கிறது கடலை போடறது எல்லாம் டைம் பாஸ்-க்கு கடைசில அண்ணா அண்ணான்னு அல்வா குடுத்திடுவோம் / உன்னைய பாத்தா செத்து போன எங்க ஆயா மாதிரியே இருந்திச்சுமா அதனாலதான் இவ்வளவு நாளா பேசி பழகிகிட்டிருந்தேன் அப்படின்னு கழட்டி விட்டுடுவோம் என்கிற கொள்கை பிடிப்பு உள்ளவர்களுக்காக.

இப்பல்லாம் ரொம்ப ஈஸியா போயிடிச்சு ஏகப்பட்ட மேட்ரிமோனி வலைதளங்கள், பேப்பர் ஆட், ஜாதக பரிவர்தனை நிலையங்கள் அது இதுன்னு இருந்தாலும் பலருக்கு வரன் கிடைப்பதுக்கு ரொம்ப நாள் ஆகுது ஏன்?



பாத்தா இந்த பெரியவங்க பன்ற காமெடிதான். எப்படியும் பேமிலிலயே ஒரு ஜோசியர் இருப்பார் இல்லைனா அவங்களுக்குன்னு ஆஸ்தான ஜோசியர் ஒருத்தர் இருப்பார். அப்பிடி தப்பி தவறி இல்லைன்னா எதாவது ஒரு ஜோசியர் அக்கம் பக்கம் மாமிகளெ ரெபர் பன்னிடுவாங்க.

அந்த ஜோசியர் கிட்ட பையனோட / பொண்ணோட ஜாதகத்தை காமிச்சி அவரும் ஒரு நாலு நட்சத்திரத்தை எழுதி குடுத்து இதெல்லாம் இந்த ஜாதகத்துக்கு நல்லா சேரும்னிடுவார்.

பேப்பர்லயோ / மேட்ரிமோனி சைட்லயோ ஒரு ஆட் குடுப்பாங்க. குடுத்தா வர்ற ஒரு ஐம்பது ரெஸ்பான்ஸ்ல நாப்பத்து அஞ்சை நட்சத்திரம் சேரலைன்னு தூக்கி அந்தாண்ட வெச்சிருவாங்க. மொதல் பில்டரேசன் இங்க ஆரம்பிக்குது. ஆனா கரெக்டா பாத்தா இதுல பாதி சேரும் அது வேற விசயம்.

மீதி இருக்க அஞ்சும் கூட உயரம் / குட்டை நொள்ளை நொட்டைன்னு தானாவே சேராது.

அப்பிடி தப்பிதவறி ஒன்னோ ரெண்டோ சேர்ந்ததுன்னா லெட்டர் எழுதுவாங்க பாருங்க என்னமோ எக்ஸாம் எழுதற மாதிரி நாலு நாளைக்கு ஒரு லெட்டரை எழுதி அதை போஸ்ட் பன்னிட்டு சரி போன் வரும்னு உக்காந்திருந்தா அதுக்கு ரெஸ்பான்ஸே இருக்காது. இந்த சைடு எப்படியோ அப்பிடித்தானே அந்த சைடும் இருக்கும்!!

சரி லெட்டர் போட்டு பத்து பதினெஞ்சு நாள் ஆச்சு நாமளே ஒரு போன் போடுவோம்னு போட்டா அடடா நீங்க லெட்டர் போட்டேளான்னு ஆச்சர்யமால்லாம் கேப்பாங்க. சரி எதுக்கும் ஜாதகம் ஒரு காப்பி அனுப்பிடுங்களேன்னு ‘கூலா’ சொல்லுவாங்க.

நம்ம ஜோசியர் இந்த ஜாதகம் சேருதுன்னு அடிச்சி சொல்லுவார், ஆனா ஆப்போசிட் பார்ட்டி ஜாதகம் பொருத்தமே இல்லையேன்னு சொல்லுவாங்க. இதெல்லாம் ரொம்ப சகஜமா நடக்கும்.


loop
If not
Go to top தான்

கடைசில பாத்தா சம்பாதிக்கிறது என்னவோ வெப் சைட்காரனும், பேப்பர்காரனும் தான்.

திரும்ப புது ஆட் புது லெட்டர் புது போன் கால். இப்படி பாத்து தப்பித் தவறி ரெண்டு சைடும் ஓகே ஆச்சுன்னா

அடுத்த கட்ட பில்டர்

பையன் / பொண்ணு கலர் கம்மியா இருக்க மாதிரி இருக்கே.
சம்பளம் வெறும் முப்பதாயிரம்தானா இதை வெச்சு இந்த காலத்துல எப்படி குடும்பம் நடத்துவாளோ!!!???

என்னது பையனோட உடன் பொறந்தவா ரெண்டு தங்கச்சியா அப்ப அவாளுக்கு கல்யாணம் பன்னியே இவன் ஓட்டாண்டி ஆயிடுவானே.

என்னது பையனோட அப்பா, அம்மா பையனோட இருக்காளா? (பின்ன என்ன ரோடுலயா விட முடியும்) நம்மாத்து பொண்ணு போய் அவாளுக்கெல்லாமா எல்லா வேலையும் செய்யனும்!?!?!?!.

அவங்க வீட்டுல அந்தம்மிணிதான் விடிய காலைல 9 மணிக்கு!! எந்திரிச்சி என்னம்மா தினைக்கும் இதே டிபன் பன்றயேன்ற லெவல்ல இருக்கும் அது வேற விசயம்.

இப்படி பல கட்ட பில்டரேசன் தாண்டி
பையனா இருந்தா உங்களுக்கு ஒரு ரெண்டு நிமிசம் பேசறதுக்கு டைம் கிடைக்கும் அப்ப பேச வேண்டிய டயலாக்தான் மேலே குடுத்த திவ்யா எழுதிய லிங்க்.

எனக்கென்னமோ நிறைய விட்டுட்ட மாதிரி ஒரு ஃபீலிங் சரி எப்படி இருந்தாலும் பின்னூட்டத்தில நீங்கதான் சொல்லிடுவீங்களே!!! இல்லைனா ஞாபகம் வற்றப்ப இன்னொரு போஸ்ட் போட்டுடலாம்!!!

டிஸ்கி : இவ்வளவு எழுதிட்டு டிஸ்கி போடலைனா என்னைய தாளிச்சிற மாட்டிங்களா எங்க வீட்டுல இன்னும் லைன் க்ளியர் ஆகலை இதெல்லாம் நடந்த நடந்துகிட்டிருக்கற விசயம்தான் ஆனா எனக்கில்லை. நான் அவன் இல்லை.

~~~ சேமிப்பு ~~~

காணாமல் போன
உன் ஆபீஸ் ID
ரப்பர் பேண்ட்
கிளி பச்சை துப்பட்டா
கைக்குட்டை

எல்லாம் என் பெட்டியில்
யார் என்ன
சொன்னாலென்ன
என்ன தெரியும்
சேமிப்பை பற்றி
அவர்களுக்கு






அடுத்து நான் சுடப்போவது
உன் இதழில் இருந்து
முத்தத்தைதான்
என் கவலையோ
அதை எப்படி பெட்டியில்
சேமிப்பது??

பி.கு : மேல இருக்குற தீவாளி ஸ்வீட்ல இருந்து பசங்க எல்லாம் சண்டை போடாம ஒவ்வொருத்தரா எடுத்துக்கங்க.

பொண்ணுங்களுக்கு நோ ஸ்வீட்.

Posted in Labels: , |