நட்சத்திர வணக்கம்


நட்சத்திர வணக்கம்தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஜொலிக்க வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகத்திற்கும் என் வலைப்பூ பதிவுகளுக்கு வருகை தந்து பின்னூட்டமிட்டு ஊக்கமளித்து வரும் அன்பு நண்பர்களுக்கும் மின்னஞ்சல், தொலைபேசி, கூகுள் சாட் மூலமாக என்னுடன் அவ்வப்போது தொடர்பு கொண்டுவரும் நட்பு சொந்தங்களுக்கும் இந்த சமயத்தில் என் பணிவான வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

விளையாட்டாய் “கேட்டுக்கங்கப்பா நானும் ப்ளாகர்தான்” என வடிவேலு ஸ்டைலில் சொல்லிக்கொண்டு வந்த என்னை பதிவராக மற்றும் நண்பனாக ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். ஆகஸ்ட் 2007ல் வலைப்பூ ஆரம்பித்து இரண்டு மூன்று மாதங்கள் கழித்துதான் தமிழ்மணம் தெரியவந்து இணைத்தேன் சரியாக ஒரு வருட காலத்திற்குள் நட்சத்திர வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
(மேல ஸ்டார் வணக்கம்,
இது ஸ்டாரினி வணக்கம் ச்சும்மா கொசுறு)


ஸ்டாரினி வணக்கத்தை இரண்டாவதாக போட்டதற்கு வரும் கண்டன பின்னூட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது :))))


ஒரு முறை நண்பர் ஒருவரிடம் கூகுளில் சாட்டிக்கொண்டிருந்தபோது விளையாட்டாய் சொன்னேன் நான் மங்களூரிலிருந்து பதிவெழுதி தமிழை வளர்த்து வருகிறேன் என, அதற்கு அவர் சொன்னார் ஆமாம் தமிழை வேறு யாரும் கொலை செய்ய அனுமதிக்க மாட்டோம் நாமே அதை செய்திடுவோம், இனி தமிழை யாராலும் அழிக்க முடியாது நீ ஒருவனே போதும் என :). (என் பதிவுகளால் அவர் ரொம்ப சேதாரப்பட்டிருப்பாரோ என்னவோ) என் மேல் இருக்கும் அக்கறையில்தான் சொன்னார். பல நண்பர்கள் இவர்போல்.

ஆரியம் - திராவிடம், மதம், ஜாதி அரசியல், ஆணீயம் - பெண்ணீயம், கம்யூனிசம் -சோசலிசம், வினை - எதிர்வினை, நவீனத்துவம் - பின் நவீனத்துவத்தை எல்லாம் தாண்டிய அருமையான நட்புவட்டம் கிடைக்க பெற்ற இடம் இந்த தமிழ் வலைப்பூவுலகு.

பாலையும் , நீரையும் கலந்து வைத்தால் நீரை விடுத்து பாலைமட்டும் அருந்துமாம் அன்னப்பறவை அதுபோல நல்லவை கெட்டவை என வலையுலகிலும் வலைப்பூவுலகிலும் குவிந்திருந்தாலும் நல்லவை மட்டும் எடுத்து அல்லவை தவிர்த்து எல்லோரும் இன்புற்றிருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள்வாராக.