வீக் எண்ட் ஜொள்ளு

படம் முழுசா தெரியலைனா பாப்பாவை க்ளிக்குங்க











வீக் எண்ட் வீடியோ - பொறுமை!!



வீக் எண்ட் ஜொள்ளு

படம் முழுசா தெரியலைனா பாப்பா மேல க்ளிக்குங்கோ...

























குளோபல் வார்மிங் - ஜில் வீடியோ





Posted in Labels: |

சர்க்கரை பொங்கல் செய்முறை

சர்க்கரை பொங்கல்

தேவையான பொருட்கள்:

அரிசி = 1 பங்கு
வறுத்த பாசி பயறு = 1/3 பங்கு
சர்க்கரை = 1 பங்கு
தேங்காய் பால் = 2 பங்கு
நீர் = 3 பங்கு
முந்திரி பருப்பு = 18 சரியாக (கூடவோ குறையவோ கூடாது)
உலர்ந்த திராட்சை = 2 மே.க

செய்முறை:

1. பொங்கல் பானையில் நீரை விட்டு கொதிக்க விடவும். நீர் கொதித்து வரும் போது அதில் பாலை சேர்க்கவும்.

2. பால் பொங்கியதும், ஏற்கனவே சுத்தப்படுத்தி, நீரில் கழுவிய அரிசியை போடவும். அரிசி அரை பதத்திற்கு வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்க்கவும். [சர்க்கரையை நீரிலோ பாலிலொ கரைத்துவிடுவது நல்லது] பாலும், சர்க்கரையும் சேர்ந்த பின்னர் அடுப்பின் வெப்பத்தை குறைக்கவும். தீய்ந்து போவதற்கு சாத்தியங்கள் அதிகம். ஆகவே அடிக்கடி அகப்பையால் கிளறிவிடவும்.

3. அரிசி நன்றாக வெந்ததும், அதில் நெய்யையும் முந்திரி & உலர்ந்த திராட்சையும் சேர்த்து கிளறி அடுப்பின் இருந்து இறக்கவும்.

Posted in Labels: |

வெண்பொங்கல் செய்முறை

தேவையான பொருட்கள்

பச்சரிசி 1 பங்கு
பயத்தம் பருப்பு 1கரண்டி
மிளகு, சீரகம் 1 மேசைக் கரண்டி
முந்திரிப் பருப்பு 18
நெய் தாராளமாக
இஞ்சி சிறிதளவு
உப்பு தேவையானளவு
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

அரிசி, பருப்பைக் களைந்து, ஒன்றரை பங்கு தண்ணீர் விட்டு, பானையிலோ,ரைஸ்குக்கரிலோ வேக விடவும். வெந்ததும் உப்பு சேர்க்கவும். மிளகு, சீரகத்தைஒன்றிரண்டாகத் தட்டி, நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். இஞ்சியைத் தோல் நீக்கிசிறிதாக நறுக்கி, கறிவேப்பிலையுடன், சிறிது நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.

முந்திரியையும் நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். கடைசியாக மீதமுள்ள நெய்யைஊற்றிக் கிளறி, ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

Posted in Labels: |

TAG by இம்சை

வீக் எண்ட் பதிவுகள் ஒரு விளக்கம்

வீக் எண்ட் பதிவுகள் தவறா? சில நண்பர்கள் சொல்றாங்க இந்த வீக் எண்ட் பதிவெல்லாம் போட்டா பேர் கெட்டு போயிடும் போடாத அப்டின்னு சிலர் வியாழக்கிழமையே சாட்ல கேக்குறாங்க என்ன இந்த வார பதிவு ரெடியான்னு. என் வலைப்பூ என்ற முறையில் நான் தான் அதிகம் கவலைப்பட வேண்டும் இதை பற்றி நாளை என் நண்பர்களோ, உறவினர்களோ, சகோதரனோ, சகோதரியோ இதை பார்த்தால் என்னை பற்றி என்ன நினைக்க கூடும் என்று!

வேண்டாம் என நண்பர்கள் சொல்வதற்கான காரணம் சிறுவர்களும் வலைப்பதிவுகள் பார்க்கிறார்கள் என. வலையுலகம் அதாவது இணையம் என்பது வலைப்பூக்களை எல்லாம் தாண்டி மிகப்பெரியது. ஒரு இளைஞனோ, இளைஞியோ இந்த ‘கவர்ச்சி’ படங்களை அசிங்கம் அருவருப்பு என சொன்னால் என் தாழ்மையான கருத்து போய் ஒரு நல்ல டாக்டரா பாருங்கப்பு நாளை பின்ன பிரச்சனையாக போவுது.

சமீபத்தில ஷிமோகா என்ற இடத்திற்கு ஒரு வேலையாக போயிருந்தேன். அங்கு ஒரு விலங்குகள் சரணாலயம் இருக்கு. லயன் சபாரி எல்லாம் போயிட்டு மத்த இடத்தையும் சுத்தி பாத்துகிட்டு இருக்கப்ப மொபைல்ல வைப்ரேஷன் வெச்சா வருமே ஒரு சவுண்டு அதே மாதிரி கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு பாத்தா நம்ம ஆண் மயிலார் தோகைய விரிச்சி பெண் மயிலாரை கவர் செய்ய சிக்னல் குடுத்துகிட்டிருக்கார். இது படைப்பின் ரகசியம்.

பவுடர் தேவை இல்லை, லிப்டிக் தேவை இல்லை, ஜீன்ஸ்தான் போடணும்னு இல்லை ‘அதை’ எடுப்பா காட்டணும் இடுப்பை காட்டணும் எதுவும் தேவை இல்லை. இன கவர்ச்சி, ஈர்ப்பு இயற்கையான ஒன்று. இது மட்டும் இல்லைனா இன்னும் அதிக பட்சம் ஒரு எழுவது எண்பது வருடங்களில் மனித இனமே இருக்காது.

என்ன மனித இனத்தை காக்க வந்த பெரிய பருப்பா நீன்னு கேக்காதீங்க புடிச்சா பாருங்க இல்லைனா, இல்லைனாலும் பாருங்க.

இம்சை என்னைய TAG பண்ணி ரொம்பா நாள் ஆச்சு நானும் பதிவு போடலை அதனால இந்த பதிவை இம்சை TAG க்காக கணக்குல எடுத்துக்கங்க.

இது இந்த வருடத்திற்கான மூன்றாவது TAG ஏற்கனவே இரண்டு பதிவெழுதி எட்டு பேரை பதிவெழுத கூப்பிட்டாச்சு திரும்ப நாலு பேரை கூப்பிட்டால் மங்களூர்க்கு ஆட்டோ வரும் அபாயம் அதிகரிப்பதால் நான் யாரையும் TAG செய்யவில்லை.


குறிப்புகள் :
1. இம்சை லேபிள் பார்க்கவும் இது சீரியஸ் பதிவு
2. அதனால் இதை அறிவியல் / நுட்பம் பகுதியில் வகைபடுத்தியுள்ளேன்

Posted in Labels: |

வீக் எண்ட் ஜொள்ளு

என்னாடா நம்ம வீக் எண்ட் போஸ்ட்க்கு வந்த சோதனை ஒரு போட்டோவும் சிக்க மாட்டிங்குதேன்னு பேஜாரா இருந்த டைம்ல கரெக்டா மெயில் அனுப்பி வெச்ச புண்ணியவானுக்கு நன்றிங்கோ!!

படம் முழுசா தேரியலைன்னா 'அது'க்கு மேல க்ளிக்குங்கோ

ஹலோ......... படத்துமேலங்க

















Posted in Labels: , |

TAG

அனைவருக்கும் கொஞ்சம் தாமதமான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். என்னுடைய இன்னொரு வலைப்பூவில் நூறாவது பதிவு மற்றும் புத்தாண்டு பதிவு எல்லாம் போட்டு கொண்டாடிட்டு இங்க வர கொஞ்சம் லேட்டாயிடிச்சு.

இப்பெல்லாம் ஆபீஸ்லயும் சரி ஆபீஸ்க்கு வெளியிலயும் சரி நாலுபேர் சேர்ந்து பேச ஆரம்பிச்சாலே ஸ்டாக் மார்க்கெட் பத்திதான் இப்ப நடந்துகிட்டிருக்கிறது ‘செகுலர் புல்’லாம் எப்பாடா என்னாமா கண்டுபிடிக்கிறாய்ங்கய்யா!! பங்கு சந்தை குறியீட்டு எண் இன்னும் மூணு – நாலு வருசத்துக்கு இப்பிடியே ஏறுமுகமா இருக்குமாம் நடு நடுவே சின்ன சின்ன சரிவுகள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி.

யாரப்பாத்தாலும் அதை வாங்கினியா இதை வாங்கினியா இந்த ஸ்டாக் அடுத்த வாரம் பார் பறக்க போகுது. ஒருத்தர் ஒரு பங்கை ரெக்கமண்ட் சொல்லி நாம வாங்காம தப்பி தவறி அது மேல போகுதுன்னு வைங்க உடனே அதான் நாங்க அப்பவே சொன்னம்ல. எனக்கு இந்த விளையாட்டிலெல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை.

எனக்கு ஒரு ‘நல்ல’ கம்பெனி பங்கு வாங்கனும்னு தோணினா அத கவனிச்சு விலை குறையும்போது ஒரு சிறு அளவு வாங்கி அதன்பிறகும் விலைகுறைந்தால் திரும்பவும் ஒரு சிறு அளவு வாங்கி சேர்த்து வைத்து மூன்று மாதமானாலும் சரி ஆறு மாதமானாலும் சரி கழுதை பிக்ஸட் டெபாசிட் போட்டா வெயிட் பண்றதில்லையா கெடந்துட்டு போகட்டுமே அப்படிங்கிற இது என்ன ஊசிப்போகிற பொருளா!? இந்த அடிப்படையில தான் நான் பங்கு வர்த்தகம் செஞ்சுகிட்டு வரேன்.

என் ப்ரெண்ட்ஸ் சில சமயம் கிண்டல் செய்வதும் உண்டு அதுக்கெல்லாம் நான் கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டேன் சில நாட்கள் முன் என் நண்பர் ஒருவரை சந்திச்சப்ப நலமெல்லாம் விசாரிச்சு டீ எல்லாம் சாப்பிட்டதுக்கப்புறம் எப்பிடி போயிட்டிருக்கு உன்னோட ஷேர் அப்படின்னு பேச்சு திருப்பிச்சு இல்லடா எல்லாம் விட்டுட்டேன் அந்த பக்கமே போகறதில்ல ஒரு நாலரை லட்சரூவா நஷ்டம் ‘எப் & ஓ’ ல அப்படின்னார். எனக்கு ‘எப் & ஓ’ பற்றி ஒரு எல்.கே.ஜி மாணவனுக்கு அறிவு எவ்வளவோ அவ்வளவுதான் அதை பற்றி இத்தனைக்கும் என்னுடைய ‘ப்ரோகரேஜ் ஹவுஸ்’ இலவசமா பாடம் எல்லாம் நடத்துனாங்க அதுக்கப்புறமும், அதனால் அந்த பக்கமே தலை வெச்சு படுக்காம இருந்தேன். இவன் எப்ப அந்த பக்கம் போனான் ஏன் இப்படி ஆச்சு ஒண்ணும் புரியலை ஆனா ரொம்ப வருத்தமா ஆயிடிச்சு.

அதுபோல இந்த கம்மோடிடிஸ் , டெரிவேடிஸ் டிரேடிங்கும் ஒண்ணும் பிடிபடமாட்டிங்கிது உளுந்து, சோயா, தங்கம், வெள்ளி, நிக்கல் எல்லாம் எதையுமே டெலிவரி எடுக்காமலே வாங்கி வாங்கி விக்கலாமாம் மார்ஜின்ல. நான் கிராமத்துல வளந்தவன்கிறதுனால உளுந்து செடிய பாத்திருக்கேன், இட்லி தோசைக்கு பயன்படுத்துவாங்க இதுதான் உளுந்து பத்தி அதிகபட்சம் எனக்கு தெரிஞ்சது.

டெரிவேடிஸ்ங்கிறது கரன்சி ட்ரேடிங்காம் தெனைக்கும் மாறுபடற கரன்சி விலை வித்தியாசத்தை பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கலாமாம். ஒருவேளை இதை மட்டுமே தொழிலா செய்ய ஆரம்பிக்கும்போது பாத்துக்கலாம்னு இந்த பக்கமும் இன்னும் போகலை.

நேத்து அதாவது 4-1-08 வெள்ளிக்கிழமை என் செல்போன் அரைமணிக்கொருதரம் கொய்ங், கொய்ங், கொய்ங்னு எஸ்.எம்.எஸ்ஸா வந்திட்டிருக்கு என்னன்னு பாத்தா www.towerteammumbai.com னு ஒரு சர்வீஸ்ல இருந்து ஏழு நாள் ஃப்ரீ டரையலாம் அன்பு நண்பர்கள் யாரோ அவங்களுக்கு ரெஜிஸ்டர் பண்றப்ப இலவசம்தானே எங்க அண்ணனுக்கும் அனுப்புன்னு என் நம்பரையும் போட்டு விட்டுட்டாங்க போல.

ஒரு காலத்துல பங்குசந்தைல பயந்து பயந்து கால் வெச்ச சமயம் நாம பாட்டுக்கு எதாவது ஒரு கம்பெணி ஷேரை வாங்கி அது ஏடாகூடமாயிடிச்சினா என்ன பண்றதுன்னு ஆறு மாசத்துக்கு இரண்டாயிரம் ரூவா பணம் கட்டி ‘பவர் யுவர் ட்ரேட்’ டாட் காம்’ல சேர்ந்து சோரம் போனவங்க நாம!! இப்பல்லாம் திகட்ட திகட்ட டிப்ஸ் இலவசமாவே கிடைக்குது மோதிலால் ஓஸ்வால், ஐசிஐசிஐ டைரக்ட், ஆர் மணி,
பங்குவணிகம் ; சுதாகர் வலைப்பூ இதெல்லாம் இல்லாம எந்த ப்ரெண்டை மீட் பண்ணாலும் டிப்ஸ்.

கூட்டி கழிச்சி பாத்தா சில நண்பர்கள் இந்த ‘எப் & ஓ’ அது இதுன்னு விழுந்து பெரண்டு செய்யற லாபத்தைவிட ஒண்ணுமே செய்யாம ப்ளாக் எழுதிகிட்டு கமெண்ட் போட்டுகிட்டு ஜாலியா என்ஞாய் பண்ணிகிட்டிருக்க நான் எந்த விதத்திலும் % கொறைஞ்சே போயிடலை இன்னும் சொல்ல போனா என் சைடு கொஞ்சம் ஸேஃப்.

எல்லாம் சரி பிப்ரவரில இருந்து MF, FI எல்லாம் ஷார்ட் செல்லிங் அனுமதிக்கலாம்னு செபி முடிவு பண்ணியிருக்காம். எப்பிடியும் வருச கடைசிக்குள்ள சென்செக்ஸ் இருபத்திஐயாயிரம் பாயிண்ட் தாண்டீடுமாம். இது நான் உங்களுக்கு சொல்ற ஹாட் டிப்ஸ் இல்ல ஆறிப்போன டிப்ஸ்தான் இது.


நம்ம ரசிகன் என்னைய TAG பண்ணி மாமு எதாவது மொக்க போட்டு 4 பேர TAG பண்ணுன்னு சொல்லீட்டார் நானும் சரிய்யான்னு நாக்கு ச்ச வாக்கு குடுத்துட்டேன் அதுக்காக தனியா ஒரு மொக்க போடனுமா இன்னைக்கு இன்னொரு வலைப்பூக்கு எழுதினதையே காபி பேஷ்ட் பண்ணீட்டேன்.

இந்த மொக்கை TAG க்கு ரூல்ஸ் ரெகுலேஷன் இங்க போட்டா பதிவு தாங்காது அம்மாம் பெரிசாயிரும் அதனால ரசிகனோட இந்த பதிவுல பாத்துக்கங்க!!

நான் அழைக்கும் நண்பர்கள்

1. தென்றல்
2. சிவப்ரகாசம்
3. ராதாகிருஷ்ணன்
4. சுதாகர்

Posted in Labels: |

வீக் எண்ட் வீடியோ - (A)





திகட்ட திகட்ட வீக் எண்ட்
இந்த லின்க்கில்

Posted in Labels: |

நோ க்ராஸ் கொஸ்டியன்

நட்சத்திர ஓட்டலில் நடன மேடை சரிந்தது : நீச்சல் குளத்தில் விழுந்து இன்ஜினியர் பலி : சோகத்தில் முடிந்த புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டில் ஆபாச ஆட்டம்: போதையில் ஜோடிகள் மாற்றம் : சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, நட்சத்திர ஓட்டல் நிர்வாகத்தினர் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியிருந்தனர்.
விபசார வழக்கில் பெண்களை கைது செய்யும் போலீசார், இது போன்ற ஹைடெக்' விபசாரத்தை தடுக்க முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெங்களூரில் ஸ்பெஷல் பூஜை செய்வதாக ஏமாற்றி ஆறு பேருக்கு விஷம் வைத்து கொன்று நகைகளை திருடிய பெண் கைது :(

திவ்யா என்ற டாக்டர் (ஓமியோபதி)பெண்ணை ஏமாற்றி மூன்றாவாது மனைவியாக மணந்த போலி சாமியார் கைது!!
(இவ எல்லாம் டாக்டருக்கு படிச்சி என்னத்த கிழிக்க போறா !!)

சிங்கப்பூருக்கு வேலைக்கு என விபசாரத்துக்கு பெண்ணை அனுப்பியவர் கைது

இவை எல்லாம் கடந்த வார தினமலர் செய்தி இதை எல்லாம் கேள்வி கேக்காம ஒத்துக்கறோம் நான் ஒரு தொடர்கதை எழுதினா மட்டும் எத்தினி கேள்வி எத்தினி கேள்வி!!

  • தொடரும் என்று போடவில்லையா ? ரூம் நேரம் முடிந்து காலி பண்ணியாச்சா ? அடுத்த தடவை ரோசிச்சி 'தொடரும்' போடுங்க

  • என்னது "சூர்யா" வா?? பேர் "சிவா" இல்லையா????

  • ஓஹோ... ஹீரோ நடிகர் சூர்யா மாதிரி இருப்பானா... அதனாலதான் ஹீரோ பேரு "சிவா இல்லையா"...

  • ஆமா ஹீரோயின் எப்படி? ஜோ மாதிரியா?

  • இது உங்க சொந்த கதைங்களா ?????

  • ஐயோ பள்ளிக்கூட பசங்களை எல்லாம் கட் பண்ணிட்டு சினிமா போறதா சொல்றிங்களே?

  • ஏதாவது அடுத்த ப்ரொஜெcடுக்கு அவசரமா கிளம்பீட்டீங்களா! இப்ப்டி முடிச்சுட்டீங்க?


சரி இந்த பதிவு எதுக்கா!?!?

ச்சும்மா புத்தாண்டுல ஃபார்ம்ல இருக்கனான்னு டெஸ்ட் பண்ண ஒரு மொக்கைதான் .

Posted in Labels: |

கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா கண்டபடி கட்டிபுடிடா

Posted in Labels: , |

செல்(வ)லமடி நீ எனக்கு - 6 (நிறைவு பகுதி)

பாகம்1, பாகம்2, பாகம்3,
பாகம்4, பாகம்5,

ஜெகநாதன் பணத்தை தயார் செய்து எடுத்துக்கொண்டு தன் காரில் ஏறி கிளம்பினார்.

சரி மாப்பி இப்ப கெளம்பினா சரியா இருக்கும் வாடா என இரண்டு பேரும் பாரிலிருந்து வெளியேறினர். அதுவரை பக்கத்து டேபிளில் குடித்துக்கொண்டிருந்த ஒருவன் இவர்கள் பின்னால் மெல்ல பின்தொடர்ந்து நடந்தான்.

இரண்டு பேரும் காரில் ஏறி கிளம்பினார்கள். பைபாஸை அடைந்து வலது பக்கமாக திரும்பி சற்று தொலைவு கூட சென்றிருக்காது எதிர்புறமிருந்து வேகமாக வந்த லாரியை கண்டு இவர்கள் சுதாரிப்பதற்குள் லாரி கார் மீது இடித்து கார் அப்பளமாய் நொறுங்கியிருந்தது.







* * * * * *

'சஷா' மோகனை கொஞ்சம் என் கேபின்க்கு வரச்சொல்லுமா என் இன்டர்காமில் சொல்லிவிட்டு லேப்டாப்பில் மூழ்கினார் ஜகனாதன்.

மோகன் உனக்கு ரொம்ப தாங்க்ஸ் தாங்ஸ்டா கட்டி அணைத்துக்கொண்டார்.

எதுக்கு இப்பிடியெல்லாம் சொல்லறீங்க ரஷ்மிக்கு ஒண்ணுன்னா எப்பிடி சும்மா இருக்கிறது. நீங்க எனக்கு மொதல்ல பெரியப்பா அப்புறம்தான் பாஸ். கண்ணீர் துளிர்த்தான். சின்ன பொண்ணுங்களை எப்பிடியாவது ஏமாத்தி போட்டோ எடுத்து ப்ளாக் மெயில் பண்றதே இவனுங்களுக்கு வேலை.

பணம் போனா கூட பரவாயில்ல ஆனா இவனுங்களால எவ்வளவு பேருக்கு பிரச்சனை.
லாரிகாரனுக்கு, போலீஸ் கேஸ் எல்லாம் பாத்துப்ப இல்ல.

கேஸ் எல்லாம் ரொம்ப ஈஸி ரெண்டு பேரும் செம தண்ணி அதனால பிரச்சனை இல்லை. எல்லாம் நான் பாத்துக்கறேன்.

சுபம்
~~~~~~~~~

Posted in Labels: |

செல்(வ)லமடி நீ எனக்கு - 5

ஜகனாதனும் அவர் மனைவியும் மிகுந்த கவலையும் அச்சத்துடனும் உட்கார்ந்திருந்தார்கள்.

அங்கு நிலவிய மவுனம் அவர்களின் அச்சத்தை தூண்டுவதாக இருந்தது.

போட்டோவின் பின்னால் ஜஸ்ட் சாம்பிள் என எழுதியிருந்தது எதோ பெரும் விபரீதத்தை குறிப்பதாக அவ்ருக்கு தோன்றியது.

போலீஸ் கேஸ் என போனால் பெயர் தொலைகாட்சி, பேப்பர் என வந்துவிடும் பெண்ணின் எதிர்காலம் என்ன ஆவது. குடும்ப மானமே போய்விடும். யாரிடமும் பகிர்ந்து கொள்ளவோ அல்லது என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்கவோ முடியாததாக இந்த சம்பவம் அமைந்துவிட்டது.

போட்டோவில் பார்க்கும்போதே படிக்கும் பையன் இல்லை என தெளிவாக தெரிந்தது. அப்படியென்றால் யார் அவன்? எப்படி பழக்கம்.

இருவரும் ரஷ்மியின் அறையில் எதாவது கிடைக்கிறதா என தேடிப்பார்த்தனர். ஏமாற்றமாய் ஒன்றும் கிடைக்கவில்லை.

அவரின் கை தொலைபேசி ஒலித்தது

ஹாய் மாம்ஸ் கொரியர் கிடைச்சதா போட்டோ நல்லா வந்திருக்கா இல்லைனா சொல்லு வேற ப்ரிண்ட் வேணுமா இல்ல வேற போட்டோவே வேணுமா வழக்கமா சினிமா வில்லன்கள் சிரிப்பார்கள் இவன் சிரிக்கவில்லை

ஹலோ யார் பேசறீங்க என்ன .....

பாயிண்ட்க்கு நேரா வரேன், ஒரு ஆறு லட்ச ரூவா குடுத்திருங்க எல்லா போட்டோவும் குடுத்துடறோம். அப்புறம் பணம் குடுக்காம போலீஸ் அது இதுன்னு போனா என்ன நடக்கும்னு நான் சொல்ல வேண்டியதில்ல .

ஞாயித்துகிழமை சாயந்திரம் 7 மணிக்கு சீலநாயக்கன் பட்டி பைபாஸ் தாண்டி கொண்டலாம்பட்டி பைபாஸ்க்கு நடுவில திவ்யா தியேட்டராண்ட நம்ம ஆளு வெயிட் பண்ணுவான் குடுத்திட்டு போட்டோ வாங்கிக்கங்க.

சிறிது நேரத்தில் செல்லிற்கு அழைப்பு வந்த எண்ணை தொடர்புகொள்ள முயன்ற போது ஸ்விச்ட் ஆப் என செய்தி வந்தது.

(எவ்வளவு நாள்தான்யா போன்ல ப்ளாக்மெயில் பண்ணுவாங்கன்னு கேக்குறவங்களுக்கு அமெரிக்காலருந்து ஆப்ரிக்கா வரைக்கும் அதுதான் யுனிவர்சல் ஸ்டாண்டர்ட்)

நான்கரை மணிக்கு ரஷ்மி பள்ளியிலிருந்து வந்தாள்

கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஏதும் கூறாமல் கண்ணீர் ஒன்றையே பதிலாக தந்துகொண்டிருந்தாள் ரஷ்மி.

உயிருக்கு உயிராய் வளர்த்த செல்ல மகள் இவ்வாறு கண்ணீர் வடிப்பது நெஞ்சை பிசைவதாக இருந்தது.

அவளின் அம்மா மெதுவாக அவளிடம் விசாரித்தபோது பஸ் ஸ்டாண்டில் நடந்த கலாட்டா பற்றி சுருக்கமாக சொன்னாள் சூர்யா பற்றி ஏனோ ஏதும் சொல்லாமல் மறைத்தாள்.

* * * * * *




ஹைடா என அழைத்தவாறே அந்த பார் அண்ட் ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்தவன் அங்கிருந்த சூர்யாவிடம் என்னடா அந்த பொண்ணை உசார் பண்ணிட்ட போலிருக்கு தியேட்டர்ல பாத்தேன்.

எண்ணன்னே சாப்பிடறீங்க என வந்த சிறுவனிடம் குவாட்டர் எம்சி ஒரு வாட்டர் பாக்கட் சிப்ஸ் என்று சொல்லி மாப்ளை காசு குடுடா என சூர்யாவின் பாக்கெட்டுக்குள் உரிமையாக கையை விட்டு நூறு ரூபாய் எடுத்து பையனிடம் கொடுத்து அனுப்பினான்.

இல்லடா இன்னும் ஓகே ஆகலை அவ செயின்க்காகதான் இன்னைக்கு வந்தா அதைதான் நாம ஏற்கனவே வித்தாச்சே அத எங்கிருந்து குடுக்குறது. அதே மாதிரி ஒரு கவரிங் வாங்கி வெச்சிருக்கேன். ஆனா அதையும் இப்ப குடுக்க போறதில்ல. இப்ப குடுத்துட்டா அப்புறம் எப்பிடி அவளை டீல் பண்றது. சரி உன் மேட்டர் என்னாச்சு? என கேட்ட சூர்யா ஏற்கனவே மூக்கு முட்ட குடித்திருந்தான்

இல்ல மாமு அந்த புள்ளை பேரு என்ன ரம்யா

ஆங் அந்த புள்ளையோட அப்பன் நாம நெனைக்கிற மாதிரி அவ்ளோ வெயிட்டான பார்ட்டி இல்ல. சொம்மா எதுக்கு வேஸ்ட்டா அதுதான் ட்ரை பண்ணலை.

சரி ரஷ்மி அப்பனுக்கு போன் பண்ணியா பணத்துக்கு என்ன சொன்னான்?

போன் போட்டு இடமும் டைமும் சொல்லிட்டேன் அந்தாளு ஒண்ணும் சொல்லலை.

சரி திரும்ப ஒரு போன் போடு

தன் பாக்கெட்டிலிருந்த போனை எடுத்து உயிர்ப்பித்தான்.

ஜகனாதன் என்ன எல்லாம் ஞாபகம் இருக்கில்ல எதாவது சொதப்பினீங்க உங்களுக்குதான் கஷ்டம் ஞாயித்துகிழமை அதாவது இன்னைக்கு 7மணி திவ்யா தியேட்டர் என சொல்லி போனை அணைத்தான்.

(தொடரும்)

Posted in Labels: |

புத்தாண்டு சபதம்

என் பாசக்கார அக்கா ஷைலஜா புத்தாண்டு சபதம்னு ஒரு பதிவு போட்டிருக்காங்க அத பாத்தவுடனே நாமளும் எதாவது சபதம் எடுக்கணுமோ அப்பிடினு பாத்தா நாமதான் எப்பவுமே சபதத்தோடதானே திரியுறோமே இப்ப என்ன புதுசா வேற அப்டின்னு உள்ள இருந்து ஒரு சவுண்டு.

அதோட விட்டாங்களா எங்க அக்கா ஜிமெயில் 'சாட்'ல வேற வந்து நீங்களும் சபதம் எடுத்தே ஆகனும்னு கண்டிஷன் வேற போட்டுபிட்டாங்க.

பள்ளிகூட பருவத்தில் அப்பாக்கு வர்ற டைரிய அடம்பிடித்து வாங்கி சிவராமன் ஐந்தாம் வகுப்பு 'பி' பிரிவு அரசினர் நடுநிலை பள்ளி அப்பிடின்னு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சு அந்த டைரிய அப்பிடியே விட்றுவேன் ஆறாவது ஏழாவது படிக்கும் போது அது மாறிடிச்சு 'அரசினர் உயர்நிலை பள்ளி'ன்னு எழுதுவேன்ல!!



அப்பிடியும் மீறி எழுதினா ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் அப்டின்னு என்னைக்காவது எழுதியிருப்பேன் கேவலமா பரிச்சை எழுதிட்டு வந்து!.



இப்ப சமீபத்துல எங்க வீடு ஷிப்ட் பண்ணினோம் சென்னைக்கு அப்ப தேவை இல்லாத புத்தகங்கள் டைரிகள் எல்லாம் எடைக்கு போட்டுடலாம்னு பாத்துகிட்டு இருக்கிறப்ப அண்ணனோடது அக்காவோடதுன்னு நிறைய டைரிகள் கிடைச்சது எதாவது முக்கியமானது எடைக்கு போட்டிட போறோம்னு உள்ள திறந்து பாத்தா அவிங்களும் என்னைய மாதிரியே சபதம் எடுத்துருக்காங்க போல டைரில மொத பக்கம் பேர் மட்டும்தான் எழுதுவோம்னு.

ஏற்கனவே இப்பிடித்தான் பலவருசங்கள் புத்தாண்டு அன்று சபதம் எடுக்குறதும் அத ரெண்டு நாள் கூட கடைபிடிக்க முடியாம திணறரதுமே நம்ம பொழப்பா போச்சேன்னு எதோ ஒரு புத்தாண்டு அன்னைக்கு இனிமேத்து சபதமே எடுக்கறதில்ல அப்பிடின்னு ஒரு சபதம் எடுத்து இன்னைக்கு வரைக்கும் காப்பாத்திகிட்டு வரேன்.

அடடா என்னடா இது நம்ம எடுத்த சபதத்துக்கு வந்த சோதனைன்னு நெனச்சிகிட்டே சரி எப்பிடியும் பதிவு போடறேன்னு நாக்கு குடுத்தாச்சு ச்ச வாக்கு குடுத்தாச்சு காப்பாத்தணுமில்ல!!

அதனால அன்னைக்கு என்னைக்கோ ஒரு நாள் எடுத்த அந்த சபதத்தை அதாவது இனிமே சபதமே எடுக்க மாட்டேன்கிறத இன்னைக்கு புதுப்பிச்சிக்கிறேன்.

ஜோரா கைதட்டுங்கப்பா எல்லாரும், விசிலடிக்கிறவங்க விசிலடிங்க!!

அதுக்கு முன்னாடி புத்தாண்டு தின சபதம் உங்களுக்கும் இருக்குமே.. இனிமே விடாம டைரி எழுதறது ,இனிமே தினம் வாக் போவது,இனிமே சக்கரைஇல்லாமல் காஃபி, இனிமே ஃபிகர்பக்கம் தலைவைப்பதில்லை இனிமேமெகா சீரியல் பாக்றதில்ல இப்படி ஏதாவது இருக்குமே?

கொஞ்சம் விரிவா எழுதுங்க ப்ளீஸ்,,.... அப்படியே நீங்க எழுத விரும்பும் 4பேரையும் அழைச்சிடுங்க.என்ன?

சபதம் எடுத்தவங்களில் நான் அழைக்கு நாலுபேர்..நாலுபேருக்கு(ம்) முன்கூட்டியே நன்றி!!

1. காயத்ரி நாதன்
2. புதுகை தென்றல்
3.ரூபஸ் அருள்
4. நந்து f/o நிலா

வாங்க வந்து கலக்குங்க!!
பிரியங்களுடன்

மங்களூர் சிவா