பயணக்குறிப்புகள் ஏப்ரல் 15, 2008 - II
Posted On Monday, April 28, 2008 at at 12:18 AM by மங்களூர் சிவாபயணக்குறிப்புகள் ஏப்ரல் 15, 2008
காலைல 7 மணிக்கு போய் மயிலாடுதுறைல இறங்கி அபி அப்பாவுக்கு போன் அடிச்சேன். ஏற்கனவே மயிலாடுதுறைக்கு போய் அபி அப்பாவுக்கு போன் செஞ்சிட்டு ரோடுல நின்னு தவிச்ச கதைய சக ப்ளாகர் நண்பர்கள் கிழிச்சி தொங்கவிட்டிருந்ததால் குசும்பனிடம் 15 காலைல இருந்தே ரூம் அரேஞ்ச் செய்ய முன்னேற்பாடாய் சொல்லி இருந்தோம்.
மொத ரிங்லயே போன் எடுத்தார் (நம்புங்கப்பா பிலிஸ்). நான் இருந்தது 4 வது ப்ளாட்பாரம் அங்க பக்கத்துல ஒரு அரசமரம் இருந்தது. எங்க இருக்கீங்க அப்படின்னு அபிஅப்பான்னு கேக்க , இங்க அரசமரம் பக்கத்துல இருக்கோம்னு நாங்க சொல்ல நானும் அரச மரத்துக்கு பக்கத்துலதான் இருக்கேன்னு அவர் சொல்ல, அங்க எங்களைத்தவிர யாரும் இல்ல திரும்ப போன் அடிச்சி கேட்டப்ப ஸ்டேஷன் வெளில இருக்க அரசமரம்னாரு. ஸ்டெப்ஸ் ஏறி இறங்கறப்ப பாத்தா மயிலாடுதுறை ஸ்டேசனை சுத்தி ஒரு ஏழெட்டு அரசமரம் இருக்கு. :(
நந்து அண்ணன், காயத்ரி நாங்க எல்லாம் ஒன்னா வரோம்னு சொல்லீருந்ததால டாண்னு வந்திட்டார்னு அப்புறம் தெரிஞ்சிகிட்டேன்.
கார்ல போறப்பவே இதுதான் முத்துலட்சுமி வீடு இதுதான் அதுன்னு வழிஎல்லாம் சொல்லிகிட்டே வந்தார். ஒரு ஸ்டேடியம் காமிச்சு என்னமோ சொன்னார். வாக்கிங் பத்தி என்னமோ சொன்னார். ஒன்னும் புரியலை!!.
இறங்கி வீட்டுக்குள்ள போனதும் எங்க நிலா எல்லாம்னு அபி அம்மா கேட்க ட்ரெயின்ல இருந்த அதே ஃபார்ம்ல இல்லைங்க நிலாக்கு உடம்பு சரியில்லைன்னு விட்டுட்டு நந்து மட்டும்தான் வந்திருக்கார்னு இங்கயும் சஞ்சய்ய கை காமிச்சாச்சு. நம்ம இளைய கவிய நிஜமா நல்லவன் ஆக்கியாச்சு. அவங்க ஏற்கனவே நந்து அண்ணாவ போட்டோல பாத்திருக்காங்க போல என்னங்க முடி இப்பிடி கொட்டிருச்சே உங்களுக்குன்னு கேக்க சிரிக்கவும் முடியாம சிரிக்காமவும் இருக்க முடியாம ஆகிருச்சு.
அங்க நடந்த சாப்பாட்டு கடைய பத்தி நம்ம சஞ்சய் விலாவாரியா பதிவு போட்டிருக்கறதால அத அங்க பாத்துக்கங்க.
டிபன் சாப்பிட்டிருக்கப்ப லான்ச்ல போற ப்ளான் செஞ்சிருந்ததை பத்தி பேச்சு வந்தது அப்ப நம்ம சஞ்சய் குடுகுடுன்னு அதுதான் நீங்களும் நந்து அண்ணாவும் சொதப்பீட்டீங்களேன்னு சொல்ல அபி அப்பா ஒரு நிமிசம் குழம்பி அப்ப நீங்கல்லாம் உண்மைலயே யாரு யாருன்னு ஐடி ப்ரூப்லாம் கேக்க ஆரம்பிச்சிட்டார்.
அப்படியா ஜாலியா பொழுது போச்சு. சாயந்திரம் 6 மணிக்கு இளைய கவி போலி நிஜமா நல்லவன் சாரதியாய் மாற (அதாம்பா அவர்தான் அன்னைக்கும் அடுத்த நாளும் நம்ம ட்ரைவர்) கிளம்பி திருவாரூர்க்கு போனோம்.