பயணக் குறிப்புகள் ஏப்ரல் 14,2008

இரயில் வண்டி காலை 7 மணிக்கெல்லாம் மிகச்சரியான டைம்க்கு கோவை வந்து சேர்ந்தது. கீழே இறங்கி சஞ்சாய் ராமசாமிக்கு போன் செய்தால் மாம்ஸ் நான் வர 45 நிமிசம் ஆகும் அட்ரஸ் குடுக்கறேன் வந்திடுங்க அப்படின்னாப்டி (நெசமாலுமே அப்பிடித்தான் சொன்னாப்டி).

கோயம்பத்தூர் ஸ்டேசன்ல இருந்த ஜகஜோதியான பாப்பாங்களை எல்லாம் பாத்து , இல்லைய்யா ஒரு மணி நேரம் ஆனாலும் பரவால்ல நான் இங்கயே இருக்கேன் நீ பொறுமையா வா அப்படின்னு சொன்னேன். பாத்தா பக்கத்துல நின்னு பேசிகிட்டிருக்காப்டி. அங்கிர்ருந்து நகர மனசே வரலை. திவ்யா இதெல்லாம் படிச்சிட்டு உங்க ஊரை பத்தி ஆஹா ஓஹோன்னு நினைச்சிக்காத எல்லாம் சேச்சிங்க.

சஞ்சாய் ரூம்க்கு வந்து பல்லு மட்டும் தேச்சி கொஞ்ச நேரம் மொக்கையா பேசிகிட்டிருந்ததுக்கே 10.30 ஆகிடுச்சி சரி டிபன் சாப்பிட்டு குளிச்சா கொறைஞ்சா போயிடுவோம்னு, குளிச்சிட்டு சாப்பிடுவோம்னு சொன்ன அவனையும் கேவலமா பாத்ததுல கெளம்பி வந்திட்டாப்டி பக்கத்துல இருந்த ஒரு ஹோட்டெல்க்கு போய் தோசை சாப்பிட்டு வந்து திரும்ப பேசிகிட்டு மெயில் செக் பண்ணீட்டு கொஞ்ச நேரத்துல குளிச்சி (பிலிஸ் நம்புங்க). கோயமுத்தூர்ல எங்க ஆபீஸோட ஒரு கிளை இருக்கு. எதுக்குதான் இந்த மாதிரி சின்ன கிராமத்துல எல்லாம் கிளை அலுவலகம் போடறாங்களோ தெரியலை திவ்யா :( . அங்க போய் இரு நண்பர்களை பாத்து பேசிட்டு அப்பிடியே சாப்பிட்டு வந்தா 3 மணி கட்டைய சாத்தியாச்சு மயிலாடுதுறை ட்ரெயின் ஈரோடுல இருந்து ராத்திரி 1 மணிக்குதான் ஒரு 6 மணிக்கு கோவையிலிருந்து கிளம்பி போகலாம்னு ப்ளான். அங்கிருந்து நந்து, நிலா, நிலா அம்மா, கவிதாயிணி, இம்சை எல்லாம் ஒன்னா போறதா ப்ளான்

6 மணிக்கு கிளம்பி பஸ் பிடிச்சி 8.30 மணிக்கு ஈரோடு நிலா பாப்பா வீட்டுக்கு போய் சேர்ந்தோம். பஸ்ல போறப்பவே போன் கவிதாயிணிகிட்ட இருந்து அப்பாவுக்கு 10 நாளா உடம்பு சரியில்ல அதனால வரலைன்னு, 10 நாளா உடம்பு சரியில்லங்கிறது இப்பதான் தெரிஞ்சது போல . அதுக்குள்ள நிலா பாப்பாக்கு உடம்பு சரியில்ல நந்து , நிலா அம்மாவும் வரதில்லைன்னு தகவல் கடுப்பாயிடிச்சி யோவ் ட்ரைவர் பஸ்ஸ கோயமுத்தூர்க்கே திருப்புய்யான்னு சொன்னா அவன் திருப்ப மாட்டிக்கிறான்.

பாவம் நிலா அம்மா எங்க ரெண்டு பேருக்கும் சப்பாத்தி சுட்டு போட்டு கிச்சனுக்கும் டைனிங்குக்கும் ஷட்டில் சர்வீஸ் ஓடி ஓடி டயர்ட் ஆகீட்டாங்க!! ஒரு வழியா சாப்பிட்டு எழுந்தா குருமா எல்லாம் காலி வெறும் சப்பாத்தி மட்டும்தான் நிலா அம்மாவுக்கு இருந்தது. நடுவுலயே நந்து எங்க கூட ஜாயின் பண்ணிகிட்டதால அவருக்கு கிடைச்சது.

12.30க்கு கிளம்பி ஈரோடு ஸ்டேசன் வந்து இம்சை பெங்களூர்ல இருந்து வந்துகிட்டிருக்கார் நாங்க போகற ட்ரெயின்ல அவரை மீட் பண்ணி 10 - 15 நிமிசம் பேசிட்டிருந்திட்டு நந்து கிளம்பி போனார்.

2.45க்கு கரூர்ல நம்ம இளைய கவி ஜாயிண் பண்ணீகிட்டார்.

(தொடரும்)