பயணக் குறிப்புகள் ஏப்ரல் 13,2008

ஞாயித்துகிழமை எப்பவும் போல சோம்பேறித்தனமா தூங்கி எழுந்து பொறுமையா பல்ல தேச்சு (பிலிஸ் நம்புங்க) , குளிச்சி (பிலிஸ், பிலிஸ் திரும்ப இன்னொரு தரம் நம்பிடுங்க) ஹோட்டெல்கு போய் ரெண்டு தோசைய தின்னுபிட்டு சன்மியூசிக் பாத்துகிட்டே ஆன்லைன்ல சாட் பண்ணி கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தா சாயந்திரம் ஆகீடுச்சி அவசர அவசரமா பேக்கிங் ஆரம்பிச்சி கிளம்பி மங்களூர் செண்ட்ரல் ரயில்வே ஸ்டேசன்க்கு வந்து வெஸ்ட் கோஸ்ட் பிடிச்சேன்.

நாலு ப்ளாட்பாரம் இருந்துட்டா அது செண்ட்ரலான்னு மங்களூரை பாத்த சஞ்சய் ராமசாமி கேக்கறது என் காதுல விழுது என்ன பண்றது லல்லு ப்ரசாத் யாதவதான் கேக்கணும்.

எப்பவும் ட்ரெயிண்ல ட்ராவல் பண்றப்ப ரிசர்வேசன் சார்ட்ல என் பேர் இருக்கான்னு பாக்கிறேனோ இல்லையோ என் பக்கத்து சீட்டுல யார் யார் இருக்காங்கன்னு பாப்பேன். எல்லாம் என்னோட சேப்டிக்குதான் ச்சின்ன பையன்ல. அதுவும் கேரளா வழியா போற ட்ரெயின், சேச்சிங்க அழிச்சாட்டியம் தாங்காது :( . நிம்மதியா தூங்க முடியாது.

எனக்கு எப்பவுமே ஒரு ராசிங்க எப்பவும் இந்த மாதிரி தப்பெல்லாம் நடக்காது இந்த தடவையும் அந்த மாதிரி ஒரு அசம்பாவிதமும் நடந்திடலை என் முன்னாடி, பக்கத்து சீட்டுல மட்டும் இல்ல என் கம்பார்ட்மெண்ட் முழுசுமே தடிப்பசங்கதான் அதனால எந்த விதமான வீண் டென்சனும் இல்லாம நிம்மதியா படுத்து தூங்கிகிட்டே அடுத்த நாள் காலை 7 மணிக்கு கோயம்பத்தூர் போய் சேர்ந்தேன்.

Posted in Labels: |