வீக் எண்ட் ஜொள்ளு
Posted On Saturday, March 15, 2008 at at 10:33 PM by மங்களூர் சிவாபடம் முழுசா தெரிய பாப்பா மேல க்ளிக்குங்கோ........

காத்தோட்டமா ட்ரெஸ் போடக்கூடாதே வந்துருவீங்களே...........

இன்னா பாக்கற..........

டான்ஸ் மச்சி டான்ஸ்..........

ஜன்ன வெச்ச பனியன் எங்க ஊர்லயும் இருக்கு......

வூடு கட்டுறேன் பாக்கறீங்களா...............

ஐயாம் ஸோ டயர்ட் ஸ்லீப்பிங்..............
சூச்சூ....... போ....... போ
Posted On Tuesday, March 11, 2008 at at 10:45 AM by மங்களூர் சிவாஇந்த கொல வெறி இல்ல இந்த மர்டர் வெறி அப்டிங்கிராங்களே அது நம்ம கூடவே பொறந்ததோ அப்டின்னு ஒரு டவுட். எல்லாரும் ஜி டாக்ல ஸ்டேடஸ் மெசேஜ் போடறாங்களேன்னு நானும் தினைக்கும் எதாவது ஒண்ணூ போட்டுகிட்டு இருக்கேன் சும்மா ஜாலிக்காக.
நேத்து என் ஜி டாக் மெசேஜ்
காதல் பேய் மாதிரி.
எல்லாரும் அதைப் பற்றிப்பேசுவார்கள்.
ஆனால், சிலருக்குத்தான் அது தெரியும்.
இத பாத்துட்டு பல நண்பர்கள் என்ன பேய பாத்துட்டியா லவ்ஸ்ஸா? அதா இதான்னு துளைச்சி எடுத்திட்டாங்க
ஒரு நண்பர் ஒரு படி மேல போய் நான் ஒண்ணு சொல்லட்டுமா அப்டின்னார் சரி சொல்லுப்பா என்ன இருக்குன்னேன். இந்த சிவாஜி படத்தில மிளகாய் சாப்பிட்டு நம்ம தலைவர் வாஷ் ரூம் எங்க இருக்குன்னு கேப்பார் எதுக்குன்னு கேக்குறப்ப சூச்சூ அப்பிடின்ன விவேக் போ..போ அப்டிம்பார் அது மாதிரி
காதல் சூச்சூ மாதிரி
எல்லாருக்க்கும் அது வரும்
சிலருக்கு அடிக்கடி வரும்
சிலருக்கு எப்பவாவதுதான் வரும்
சிலருக்கு சூடு பிடிச்சிகிட்டு
வராம கஷ்டப்படும்
வர்ற மாதிரி இருக்கும்
வராது
.. .. .. .. .. .. .. ..
.. .. .. .. .. .. .. ..
.. .. .. .. .. .. .. ..
.. .. .. .. .. .. .. ..
னு ஆரம்பிச்சார் ஏன்யா இந்த கொலவெறி.
ஸ்டேடஸ் மெசேஜ படிச்சா அனுபவியுங்க ஆராய்சி பண்ணாதீங்க (நன்றி வெட்டி)
அப்பாடா இன்னொரு போஸ்ட் தேறிடுச்சு
பஸ்டா (Pasta)
Posted On at at 8:43 AM by மங்களூர் சிவாநம்ம ப்ரெண்ட் ஒருத்தவிங்ககூட சாட் பண்ணிகிட்டிருக்கப்ப என்னப்பா காலைல சாப்டியா என்ன சாப்புட்ட அப்டின்ன கேக்க போக அவிங்க ‘பஸ்டா’ அப்டின்னாங்க. அட எதோ கெட்டவார்த்தைல திட்றாப்டி போல அப்டின்னு நினைச்சிகிட்டு
என்ன? அப்டின்னேன் திரும்ப ‘பஸ்டா’ அப்டின்னாங்க. அப்டின்னா என்னன்னு கேக்க அது ஒரு ‘ஐட்டமாம்’ ஹலோ ஹலோ யாரங்கே இது சாபிடற ஐட்டமாம்பா. சரி அது எப்பிடி செய்யறதுன்னு விலாவாரியா கேட்டுகிட்டேன். முந்தா நாள் ‘பிக் பசார்’ ‘வீக் எண்ட் லைவ்’-க்கு போயிருக்கப்ப தேடி வாங்கிகிட்டு வந்துட்டேன்.
சாதாரணமா வீட்டுக்கு போன் போட்டு அம்மாகிட்ட பேசறப்ப நீ நல்லா இருக்கியா, நான் நல்லா இருக்கேன். மாத்திரை எல்லாம் டைம்க்கு சாப்பிடறயா , டாக்டர பாத்தியா இதுக்குமேல பேசறதெல்லாமே விசயமே இல்லாத பேச்சுக்கள். என்ன சமைச்ச? அது இதுன்னு.
சரி பேசறதுக்கு ஒரு மேட்டர் கிடைச்சிருக்கேன்னு நான் நாளைக்கு காலைல ‘பஸ்டா’ செய்ய போறேன்னு சொல்ல அம்மா அதுக்கு கூலா நான் சொல்ற மாதிரி செய்னு ரெசிபி சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க எனக்கு செம ஷாக்.
20 வருசமா கிராமத்துலயே இருந்தவங்க ஒரு 2 – 3 வருசமாதான் தர்மபுரி சிட்டில இருந்தாங்க. எவன் அவன் தர்மபுரி சிட்டியானு கேக்கிறது ‘மதுர’ க்கு அப்புறம் ‘தர்மபுரி’னுதான் படம் வந்திருக்கு ஞாபகம் இருக்கட்டும். இப்ப ஒரு 6 மாசமா சென்னைல இருக்காங்க அதுக்குள்ள இதெல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்காங்க. நாங்க அவங்ககூட இருந்தப்ப எல்லாம் இட்லி தோசை சாப்பாடு மீறி போனா சப்பாத்தி பூரி தவிர வேற எதும் செஞ்சதா ஞாபகம் இல்லை :(
பத்து வருசமா வெளில வேலை பாத்து ஹோட்டெல் ஹோட்டெலா சுத்திகிட்டிருக்க நான் இப்பதான் மொத தடவையா செஞ்சு சாப்பிட போறேன்.
Italian Pasta – செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் ‘பஸ்டா’வை உப்பு போட்டு வேக வைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். வேகவைக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணை ஊற்றினால் பஸ்டா ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வருமாம்.
வாணலியில் கடுகு போட்டு வெங்காயம் வதக்கி அதில் தக்காளி சாஸ் அல்லது ‘பஸ்டா’ சாஸ் போட்டு கிளறி அதில் வேக வைத்து வடிகட்டிய ‘பஸ்டா’வை போட்டு கிளறினால் பஸ்டா ரெடியாம்.
எதுவுமே எழுதாம படத்தை போட்டே ஓட்டிடலாம் கல்யாணம் ஆனதும் ரிடையர்ட் ஆகிட்டேன்னு ஸ்டேட்மெண்ட் விட்டுடலாம்னு நெனைச்சிகிட்டிருந்தேன் இன்னைக்கு என்னமோ ஞானோதயம் இல்லடா எதாவது நாலு வரியாவது எழுது அப்டின்னு அதுதான் இந்த பதிவு.
வீக் எண்ட் ஜொள்ளு
Posted On Sunday, March 9, 2008 at at 10:28 AM by மங்களூர் சிவாபொண்ணுங்களை சைட் அடிக்கலைனா
அவங்கள இன்சல்ட் பண்ற மாதிரியாம்
நான் சொல்லலை கூகிள் குழுமத்துல பேசிக்கிறாய்ங்க
படம் முழுசா தெரியலைனா பாப்பா மேல க்ளிக்குங்கோ









மகளீர் தின வாழ்த்துக்கள்
Posted On Saturday, March 8, 2008 at at 10:19 AM by மங்களூர் சிவாபத்து மாதங்கள் எனை கருவில் சுமந்தபோதும் எனக்காக பத்தியம் இருந்த போதும் நான் உதைத்த உதைகளை வாங்கி செல்லமாய் என்னை தடவி கொடுத்த போதும் நான் வெளிவர நீ இன்னொரு பிறப்பாய் பிறந்த போதும் என்னை பெற்றெடுத்த இன்பத்தில் அளவிலாத மகிழ்ச்சி கொண்டு என்னை முத்தமிட்டபோதும் என்பசியாற்ற உன் ரத்தமதை பாலாக்கி ஊட்டுவித்த போதும் மழலையாய் நான் உளரும் போது கூடவே எனக்கான மொழியை பேசி என்னுடன் விளையாடிய அந்த கனங்களும், என்னை நடைபழக விரல் பிடித்து ரசிக்கும் போதும் தாய்மையையே உணர்த்தி எனக்காய் நீ வாழும் வாழ்க்கைக்கும் இன்றொரு நாள் மட்டுமல்ல..என்றுமே மகளிர் தினமொன்று இருக்குமே..இருப்பினும் உனக்கு இந்நாளில் வாழ்த்து சொல்லவே மகிழ்கிறேன்...
உலக மகளிர்களே தாய்மையென்னும் பேரால் சிறப்படைந்து நீவீர் சிறப்பான உலகமொன்றை உருவாக்க வாழ்த்துக்கள்......
வலைப்பூ உலக மற்றும் வலைப்பூவில் இல்லாத நண்பிகள், அக்காக்கள் , தங்கைகள், அத்தைகள், பாட்டிகள், அனைவருக்கும் மகளீர் தின வாழ்த்துக்கள்.
வீக் எண்ட் ஜொள்ளு
Posted On Saturday, March 1, 2008 at at 11:10 PM by மங்களூர் சிவாகரண்ட் பாலிடிக்ஸ்
Posted On at at 10:53 AM by மங்களூர் சிவாமுன்குறிப்பு:கிண்டல்/நகைச்சுவை உணர்வில்லாத யாரும் இந்தப் பதிவை படிக்க வேண்டாம். படிச்சி முடிச்சிங்கன்னா ரொம்ப யோசிக்காம போயிட்டே இருக்கனும்! ஆமா!
கிஷ்டன்: குர்ஜுனா! இணையச் சேவைகளை மதிக்கக் கற்றுக் கொள்! வலைப்பூக்களில் அனானிமஸாய்ப் புகுந்து வலைப்பதிவர்களை கடைமட்ட வார்த்தைகளில் பின்னூட்டமிட்டு திட்டத் தயங்காதே!
குர்ஜுனன்: ஆனால் கிஷ்டா! வலைப்பூ வைத்திருப்போர் என் அருமை நண்பர்கள், தமிழ்மணத்தை எனக்கு அறிமுகப்படுத்திய பெரியோர்கள், வல்லுனர்கள், அவர்களுக்கெல்லாம் எப்படி நான் இத்தகைய பின்னூட்டம் இடுவேன்.
கிஷ்டன்: குர்ஜுனா! இந்தக் கணத்தில் உனக்கு எதிரியோ நண்பனோ யாரும் இல்லை. அவர்கள் எல்லோரும் வலைப்பதிவர்கள். எனவே, இணைய தர்மத்தை கடைப்பிடிப்பாயாக! எல்லோருக்கும் பின்னூட்டம் இடு முடிந்தவரையில் திட்டு! அதுதான் உன் கர்மம்! அதுவே தர்மமும் ஆகும்.
குர்ஜுனன்: கிஷ்டா! இவையெல்லாம் பார்த்தால் இணைத்தின் இணைப்பையே துண்டித்துக் கொள்ளத் தோன்றுகிறது
கிஷ்டன்: குர்ஜுனா! வலைப்பூ என்னும் மாயையில் சிக்கிக் கொண்டுள்ளாய். இந்த மாய உலகில் நீயும் மாயை உன்னால் திட்டப் படுபவரும் மாயை. வலைப்பூக்கள் தோன்றும் முன்பிருந்தே இது போல ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வது குழுமங்களிலும் மற்ற வலைத்தளங்களிலும் இருந்துள்ளது. நீ செய்யாவிட்டாலும் இதை வேறொருவர் செய்வார். கீழ்த்தரமாய் பின்னூட்டம் இடுவது உன் கடமை! அதைச் செய்!
குர்ஜுனன்: ஆனால் கிஷ்டா!கிஷ்டன்:குர்ஜுனா! திட்டப் படுபவர் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாதே! உனக்குத் தெரிந்த மூன்றாம் தர வார்த்தைகளையும் கேவலமான சிந்தனைகளையும் உலகுக்கு தெரியவைக்கத் தவறிவிடாதே!
குர்ஜுனன்: கிஷ்டா! கீழ்த்தரமாய் பின்னூட்டம் இட்டு, திட்டுவதற்கும் சாதி மத பேதங்களுக்கும் என்ன சம்பந்தம்.
கிஷ்டன்: குர்ஜுனா! இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உனக்கும் இன்னொருவருக்கும் மனக்கசப்பு என்றால் முதலில் சாதியைக் கொண்டு திட்டவேண்டும். அப்போது தான் சாதி சார்பாக இன்னும் சில பேர் திட்டுவதற்காக அணி திரள்வார்கள். இப்படியாக ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் போது பல விதமான மூன்றாம் தர வார்த்தைகள் வலைப்பூ உலகின் வருகையாளருக்கு அறிமுகமாகும். இதனால் தமிழ் மொழி அபரிமிதமான வளர்ச்சியடையும்.
குர்ஜுனன்: கிஷ்டா! மூன்றாம் தர வார்த்தைகள் என்பதை எப்படி அடையாளம் கண்டு கொள்வது.கிஷ்டன்: இத்தகைய வார்த்தைகள் உடனடியாய் எதிராளியைக் காயப் படுத்த வல்லவை. இந்த வார்த்தைகளால் மனம் பாதிக்கப் பட்டவர்களை வழக்காடு மன்றம், வழக்கறிஞர் என்றெல்லாம் சிந்திக்க வைக்குமளவுக்கு கொடூரமானவை.
குர்ஜுனன்: கிஷ்டா! திட்டுவோருக்கு இதனால் என்ன பலன்.
கிஷ்டன்: குர்ஜுனா! எல்லாம் மாயை! திட்டும் போது எழுவது ஒரு அல்ப சந்தோசம். சாதியால், மதத்தினால், இன்ன பிற காரணங்களால் வலைப்பூவுலகம் பிளவுற்று, தரமான படைப்புகள் குறைந்திடும் போது இந்த அல்ப சந்தோசம் அதிகரிக்கும். இந்தத் திட்டுக்கள் சண்டைகள் தொடர்பான பதிவுகளைத் தேடித்தேடிப் படிக்கையில் அது பலமடங்கு பெருகி பிறந்த பலனை அடைந்த இன்பம் கிடைக்கும். ஆனால் இவை எல்லாம் மாயை என்பதை யாரும் அறியார். உனது கடமை யாரையேனும் திட்டிப் பின்னூட்டம் இடுவது! இதை எப்போதும் உன் மனதில் வை!
குர்ஜுனன்:கிஷ்டா!திட்டும் போது என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை என்றால் என்ன செய்ய?
கிஷ்டன்: இந்த வலைப்பூ உலகம் என்னும் மாயையில் திட்டுவது எப்படி உன் கடமையோ அது போலவே உன்னோடு அணி சேர்வது சிலரது கடமை.உன் எதிரணியில் சேர்வது இன்னும் சிலரின் கடமை. எனவே பயம் ஏதும் கொள்ளாமல் உன் கடமையைச் செய்!
குர்ஜுனன்: கிஷ்டா! அறியாமையில் உழன்று கொண்டிருந்த என் கண்களைத் திறந்திட்டாய். வணங்குகிறேன்.(கிஷ்டனின் உபதேசத்தில் மனம் தெளிவடைந்த(!) குர்ஜுணன் அடுத்த சாதிச் சண்டைக்கு பின்னூட்டமிட செல்கிறான்)
பின் குறிப்பு: நன்றி கோபி அவரின் 2005ம் வருட இந்த பதிவு இப்போதைய தமிழ்மண நிகழ்வுகளை பிரதிபலிப்பதால ஒரு மீள்பதிவு
பலூன் மாமி'ஸ்
Posted On Thursday, February 21, 2008 at at 5:01 PM by மங்களூர் சிவாசூறாவளியாய் இரு பதிவர் சந்திப்புகள்
Posted On at at 2:33 AM by மங்களூர் சிவாசூறாவளியாய் இரு பதிவர் சந்திப்புகள்
திங்கட்கிழமை ஒரு வேலையாக தருமபுரி செல்ல வேண்டியிருந்தது. சரி திரும்பும் வழியில் பெங்களூரில் செவ்வாய்கிழமை காலை நம் ப்ளாக் நண்பர்கள் யாரையாவது சந்தித்து வரலாம் என மங்களூரிலிருந்து சேலத்திற்கு ஞாயிறு இரவு ட்ரெயின்க்கு செல்வதற்கு மட்டும் ரிசர்வ் செய்திருந்தேன்.
ஜீவ்ஸ்க்கு போன் செய்து செவ்வாய்கிழமை வருகிறேன் சந்திக்கலாம் என சொன்னதும் அலுவலகம் இருக்கிறது ஆனால் காலையில் சீக்கிரம் வந்தால் பார்க்கலாம் என சொன்னார். சரி என இம்சைஅரசிக்கு போன் செய்தால் ஹலோ டைம் என்ன? எதுக்கு நடுராத்திரி போன் செய்யறீங்க என கேட்டார் நான் போன் செய்தது சனிக்கிழமை காலை 10 மணிக்கு. செவ்வாய்கிழமை சந்திக்க முடியாது வேலை இருக்கிறது என அவர் சொல்லியதால் நாளை ஞாயிற்றுகிழமை வந்தால் சந்திக்க முடியுமா என கேட்டதற்கு சரி என சொன்னார்.
என் பயணத்திட்டத்தை மாற்ற ட்ரெய்ன் டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு கர்னாடகா அரசு பேருந்து ‘ராஜஹம்ஸா’வில் டிக்கட் புக் செய்து 11 மணி நேர கொடுமையான பயணத்தில் (ரோடு நல்லா இல்லிங்க) பெங்களூர் சென்றடைந்தேன். 6 மணிக்கு இறங்கின உடனே கை கால் எல்லாம் டைப் அடிக்க ஆரம்பிச்சிடிச்சு அவ்வளவு குளிர்.
என் கசின் வீட்டிற்கு அருகில்தான் ஜீவ்ஸ் இருக்கிறார் காலை 10 மணிக்கு கரெக்டாக டிபன்க்கு போய்விட்டேன் அவர் வீட்டம்மணி ரொம்ப பொறுமைசாலி வெர்மிசெல்லி உப்புமா, இடியாப்பம் செய்திருந்தார். பத்தே முக்கால் சுமாருக்கு இம்சை அரசி வந்தார். மொக்கையாக எதேதோ பேசிக்கொண்டிருந்தோம். ஜீவ்ஸின் மகள் ஜெயஸ்ரீ தர்பீஸில் இருந்த எல்லா விதையையும் எடுத்து இம்சைஅரசி சாப்பிடும் தட்டில் போட்டு எங்களுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தாள்.
வாழைப்பூ வடை, முருங்கை கீரை பொறியல், சாம்பார், ரசம், தயிர் என மதியம் செம சாப்பாடு ஏற்கனவே 11 மணி நேர பயணகளைப்பிருந்ததால் அங்கேயே மாலை 5 மணி வரை தூங்கிவிட்டேன். பின் அருகிலிருந்த ஜே.பி. பார்க் சென்றுவிட்டு இரவு 8 மணிக்கு திரும்பினோம்.
திங்கட்கிழமை காலை ப்ளாகர், முத்தமிழ் குழும மை.பா. புகழ் எழுத்தாளினி ஷைலஜா அக்கா வீட்டிற்கு போவதாக திட்டம். ஏர்போர்ட் ரோடிலிருக்கும் ஐபிஎம் அலுவலகத்தில் என் கசின் வேலை பார்ப்பதால் அதுவரை அவனுடன் பைக்கில் சென்றுவிட்டு அவன் வண்டியை எடுத்துகொண்டு ரோட் மேப் வாங்கிக்கொண்டு அங்கிருந்து பி.டி.எம் லே அவுட்க்கு பயணம். புதிய ஊர் என்பதால் அங்கங்கு கேட்டு கேட்டு தட்டு தடுமாறி 30 நிமிடத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு 1 மணி நேரத்தில் சென்றடைந்தேன்.
மை.பா கொடுத்து வரவேற்றார். காலை டிபன் அவர் வீட்டில் தோசை பயமுறுத்த வேண்டும் என்பதற்காகவே கணக்கு வழக்கில்லாமல் சாப்பிட்டேன். அசரலையே :(
அவர் எழுதிய கதைகள் வெளிவந்துள்ள புத்தகங்கள் வாங்கிய பரிசுகள் போன்ற விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டேன். அவர் செய்திருந்த பெயிண்டிங்கள் எல்லாம் பார்த்தேன். அடடா நாமளும் படத்தை போட்டு ஒப்பேத்தறோமே என எனக்கே ரொம்ப வெட்க வெட்கமா வந்தது (அட நெசமா நம்புங்கப்பா). மதியம் சாப்பிட்டுவிட்டு போக சொன்னார். காலையில் அத்தனை தோசை சாப்பிட்டு கொடுத்த அதிர்ச்சியே போதும் என நான் நினைத்ததால் இன்னொரு நாள் வருவதாக கூறி விடைபெற்றேன்.
எனக்காக தங்கள் நேரத்தை ஒதுக்கிய ஜீவ்ஸ், ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து வந்த இம்சைஅரசி, ஷைலஜா அக்கா, அருமையான சமையல் செய்து உபசரித்த திருமதி. ஜீவ்ஸ் அனைவருக்கும் நன்றி.























