மகளீர் தின வாழ்த்துக்கள்

பத்து மாதங்கள் எனை கருவில் சுமந்தபோதும் எனக்காக பத்தியம் இருந்த போதும் நான் உதைத்த உதைகளை வாங்கி செல்லமாய் என்னை தடவி கொடுத்த போதும் நான் வெளிவர நீ இன்னொரு பிறப்பாய் பிறந்த போதும் என்னை பெற்றெடுத்த இன்பத்தில் அளவிலாத மகிழ்ச்சி கொண்டு என்னை முத்தமிட்டபோதும் என்பசியாற்ற உன் ரத்தமதை பாலாக்கி ஊட்டுவித்த போதும் மழலையாய் நான் உளரும் போது கூடவே எனக்கான மொழியை பேசி என்னுடன் விளையாடிய அந்த கனங்களும், என்னை நடைபழக விரல் பிடித்து ரசிக்கும் போதும் தாய்மையையே உணர்த்தி எனக்காய் நீ வாழும் வாழ்க்கைக்கும் இன்றொரு நாள் மட்டுமல்ல..என்றுமே மகளிர் தினமொன்று இருக்குமே..இருப்பினும் உனக்கு இந்நாளில் வாழ்த்து சொல்லவே மகிழ்கிறேன்...

உலக மகளிர்களே தாய்மையென்னும் பேரால் சிறப்படைந்து நீவீர் சிறப்பான உலகமொன்றை உருவாக்க வாழ்த்துக்கள்......

வலைப்பூ உலக மற்றும் வலைப்பூவில் இல்லாத நண்பிகள், அக்காக்கள் , தங்கைகள், அத்தைகள், பாட்டிகள், அனைவருக்கும் மகளீர் தின வாழ்த்துக்கள்.