சூச்சூ....... போ....... போ

இந்த கொல வெறி இல்ல இந்த மர்டர் வெறி அப்டிங்கிராங்களே அது நம்ம கூடவே பொறந்ததோ அப்டின்னு ஒரு டவுட். எல்லாரும் ஜி டாக்ல ஸ்டேடஸ் மெசேஜ் போடறாங்களேன்னு நானும் தினைக்கும் எதாவது ஒண்ணூ போட்டுகிட்டு இருக்கேன் சும்மா ஜாலிக்காக.

நேத்து என் ஜி டாக் மெசேஜ்

காதல் பேய் மாதிரி.
எல்லாரும் அதைப் பற்றிப்பேசுவார்கள்.
ஆனால், சிலருக்குத்தான் அது தெரியும்.

இத பாத்துட்டு பல நண்பர்கள் என்ன பேய பாத்துட்டியா லவ்ஸ்ஸா? அதா இதான்னு துளைச்சி எடுத்திட்டாங்க

ஒரு நண்பர் ஒரு படி மேல போய் நான் ஒண்ணு சொல்லட்டுமா அப்டின்னார் சரி சொல்லுப்பா என்ன இருக்குன்னேன். இந்த சிவாஜி படத்தில மிளகாய் சாப்பிட்டு நம்ம தலைவர் வாஷ் ரூம் எங்க இருக்குன்னு கேப்பார் எதுக்குன்னு கேக்குறப்ப சூச்சூ அப்பிடின்ன விவேக் போ..போ அப்டிம்பார் அது மாதிரி

காதல் சூச்சூ மாதிரி
எல்லாருக்க்கும் அது வரும்
சிலருக்கு அடிக்கடி வரும்
சிலருக்கு எப்பவாவதுதான் வரும்
சிலருக்கு சூடு பிடிச்சிகிட்டு
வராம கஷ்டப்படும்
வர்ற மாதிரி இருக்கும்
வராது
.. .. .. .. .. .. .. ..
.. .. .. .. .. .. .. ..
.. .. .. .. .. .. .. ..
.. .. .. .. .. .. .. ..

னு ஆரம்பிச்சார் ஏன்யா இந்த கொலவெறி.

ஸ்டேடஸ் மெசேஜ படிச்சா அனுபவியுங்க ஆராய்சி பண்ணாதீங்க (நன்றி வெட்டி)

அப்பாடா இன்னொரு போஸ்ட் தேறிடுச்சு

Posted in Labels: |