பஸ்டா (Pasta)

நம்ம ப்ரெண்ட் ஒருத்தவிங்ககூட சாட் பண்ணிகிட்டிருக்கப்ப என்னப்பா காலைல சாப்டியா என்ன சாப்புட்ட அப்டின்ன கேக்க போக அவிங்க ‘பஸ்டா’ அப்டின்னாங்க. அட எதோ கெட்டவார்த்தைல திட்றாப்டி போல அப்டின்னு நினைச்சிகிட்டு

என்ன? அப்டின்னேன் திரும்ப ‘பஸ்டா’ அப்டின்னாங்க. அப்டின்னா என்னன்னு கேக்க அது ஒரு ‘ஐட்டமாம்’ ஹலோ ஹலோ யாரங்கே இது சாபிடற ஐட்டமாம்பா. சரி அது எப்பிடி செய்யறதுன்னு விலாவாரியா கேட்டுகிட்டேன். முந்தா நாள் ‘பிக் பசார்’ ‘வீக் எண்ட் லைவ்’-க்கு போயிருக்கப்ப தேடி வாங்கிகிட்டு வந்துட்டேன்.

சாதாரணமா வீட்டுக்கு போன் போட்டு அம்மாகிட்ட பேசறப்ப நீ நல்லா இருக்கியா, நான் நல்லா இருக்கேன். மாத்திரை எல்லாம் டைம்க்கு சாப்பிடறயா , டாக்டர பாத்தியா இதுக்குமேல பேசறதெல்லாமே விசயமே இல்லாத பேச்சுக்கள். என்ன சமைச்ச? அது இதுன்னு.

சரி பேசறதுக்கு ஒரு மேட்டர் கிடைச்சிருக்கேன்னு நான் நாளைக்கு காலைல ‘பஸ்டா’ செய்ய போறேன்னு சொல்ல அம்மா அதுக்கு கூலா நான் சொல்ற மாதிரி செய்னு ரெசிபி சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க எனக்கு செம ஷாக்.

20 வருசமா கிராமத்துலயே இருந்தவங்க ஒரு 2 – 3 வருசமாதான் தர்மபுரி சிட்டில இருந்தாங்க. எவன் அவன் தர்மபுரி சிட்டியானு கேக்கிறது ‘மதுர’ க்கு அப்புறம் ‘தர்மபுரி’னுதான் படம் வந்திருக்கு ஞாபகம் இருக்கட்டும். இப்ப ஒரு 6 மாசமா சென்னைல இருக்காங்க அதுக்குள்ள இதெல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்காங்க. நாங்க அவங்ககூட இருந்தப்ப எல்லாம் இட்லி தோசை சாப்பாடு மீறி போனா சப்பாத்தி பூரி தவிர வேற எதும் செஞ்சதா ஞாபகம் இல்லை :(

பத்து வருசமா வெளில வேலை பாத்து ஹோட்டெல் ஹோட்டெலா சுத்திகிட்டிருக்க நான் இப்பதான் மொத தடவையா செஞ்சு சாப்பிட போறேன்.

Italian Pasta – செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் ‘பஸ்டா’வை உப்பு போட்டு வேக வைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். வேகவைக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணை ஊற்றினால் பஸ்டா ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வருமாம்.

வாணலியில் கடுகு போட்டு வெங்காயம் வதக்கி அதில் தக்காளி சாஸ் அல்லது ‘பஸ்டா’ சாஸ் போட்டு கிளறி அதில் வேக வைத்து வடிகட்டிய ‘பஸ்டா’வை போட்டு கிளறினால் பஸ்டா ரெடியாம்.


எதுவுமே எழுதாம படத்தை போட்டே ஓட்டிடலாம் கல்யாணம் ஆனதும் ரிடையர்ட் ஆகிட்டேன்னு ஸ்டேட்மெண்ட் விட்டுடலாம்னு நெனைச்சிகிட்டிருந்தேன் இன்னைக்கு என்னமோ ஞானோதயம் இல்லடா எதாவது நாலு வரியாவது எழுது அப்டின்னு அதுதான் இந்த பதிவு.

Posted in Labels: , |