புதிய குடும்ப கட்டுப்பாட்டு முறை

ஆண்களுக்கான 'குடும்ப கட்டுப்பாடு' முறையில் ஐஐடி காரக்பூர் புதிய முறையை கண்டுபிடித்துள்ளது. இந்த முறையில் 60மி.கி ஊசி மருந்து மூலமாக செலுத்தப்படும் மருந்தின் மூலம் 10 வருடங்களுக்கு இதன் 'பவர்' இருக்குமாம்.

இதன் தயாரிப்பு செலவு 50 ரூபாய் வெளிசந்தைக்கு வரும்போது 200 ரூபாய் அளவில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் கிடைக்குமாம்.

இதன் பின் விளைவுகள் பற்றி எதும் விவரங்கள் தற்போது தெரிவிக்கப்படவில்லை. தற்போது இது பூனே மற்றும் கொல்கத்தாவில் க்ளினிகல் ட்ரயலில் உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் முழுமையான சோதனை விவரங்கள் IndAc 2008 ல் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதை பற்றிய விரிவான சுட்டி

Posted in Labels: |

வாழத்தெரியாத வாழ்க்கை

நேற்று மார்ச் 24, 2008 அமித் என்ற இளைஞர் அவரது மனைவி ரிங்குவை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அமித் புத்திராஜ், 30, பெங்களூர் இன்போசிஸிலும், ரிங்கு சச்தேவ் ஸ்டாண்டர்ட் சாடர்ட் வங்கியிலும் வேலை பார்த்து வந்தனர். ரிங்குவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தினாலேயே கொலை செய்ததாக எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளனர்.

ஹோலிப்பண்டிகையன்று (நேற்றுமுன்தினம்) தொலைபேசியில் அமித்துடன் பேசியதாகவும் சந்தோசமாகவே பேசியதாகவும். இப்படி ஒரு சம்பவத்திற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என நெருங்கிய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான சுட்டி

வாழ்க்கையே போர்க்களம் வாழ்ந்துதான் பார்க்கணும். நேற்று மற்றும் இன்றைய செய்தித்தாள்களில் வந்துள்ள இந்த செய்தி மிக்க மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. தற்கொலை என்பது அந்த கணத்தில் எடுக்கப்படும் முடிவு என்கிறார்கள். கொலையும் அப்படியா?

எந்த காரணமாக இருந்தாலும் வாழ்வை வாழவேண்டிய வயதில் தவறிய இருவருக்கும் நெஞ்சார்ந்த அஞ்சலி.

எவ்வாறு இதை அவர் எதிர்கொண்டிருந்தால் சரியாக இருந்திருக்கும் தங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

Posted in Labels: |

வீக் எண்ட் ஜொள்ளேY

படம் முழுசா தெரியலைனா பாப்பா மேல க்ளிக்குங்க!!






































.
.
.
.
.
.
இது போனஸ் பிக்சர்





Posted in Labels: |

வீக் எண்ட் ஜொள்ளு



படம் முழுசா தெரிய பாப்பா மேல க்ளிக்குங்கோ........



காத்தோட்டமா ட்ரெஸ் போடக்கூடாதே வந்துருவீங்களே...........



இன்னா பாக்கற..........



டான்ஸ் மச்சி டான்ஸ்..........


ஜன்ன வெச்ச பனியன் எங்க ஊர்லயும் இருக்கு......



வூடு கட்டுறேன் பாக்கறீங்களா...............



ஐயாம் ஸோ டயர்ட் ஸ்லீப்பிங்..............

Posted in Labels: |

சூச்சூ....... போ....... போ

இந்த கொல வெறி இல்ல இந்த மர்டர் வெறி அப்டிங்கிராங்களே அது நம்ம கூடவே பொறந்ததோ அப்டின்னு ஒரு டவுட். எல்லாரும் ஜி டாக்ல ஸ்டேடஸ் மெசேஜ் போடறாங்களேன்னு நானும் தினைக்கும் எதாவது ஒண்ணூ போட்டுகிட்டு இருக்கேன் சும்மா ஜாலிக்காக.

நேத்து என் ஜி டாக் மெசேஜ்

காதல் பேய் மாதிரி.
எல்லாரும் அதைப் பற்றிப்பேசுவார்கள்.
ஆனால், சிலருக்குத்தான் அது தெரியும்.

இத பாத்துட்டு பல நண்பர்கள் என்ன பேய பாத்துட்டியா லவ்ஸ்ஸா? அதா இதான்னு துளைச்சி எடுத்திட்டாங்க

ஒரு நண்பர் ஒரு படி மேல போய் நான் ஒண்ணு சொல்லட்டுமா அப்டின்னார் சரி சொல்லுப்பா என்ன இருக்குன்னேன். இந்த சிவாஜி படத்தில மிளகாய் சாப்பிட்டு நம்ம தலைவர் வாஷ் ரூம் எங்க இருக்குன்னு கேப்பார் எதுக்குன்னு கேக்குறப்ப சூச்சூ அப்பிடின்ன விவேக் போ..போ அப்டிம்பார் அது மாதிரி

காதல் சூச்சூ மாதிரி
எல்லாருக்க்கும் அது வரும்
சிலருக்கு அடிக்கடி வரும்
சிலருக்கு எப்பவாவதுதான் வரும்
சிலருக்கு சூடு பிடிச்சிகிட்டு
வராம கஷ்டப்படும்
வர்ற மாதிரி இருக்கும்
வராது
.. .. .. .. .. .. .. ..
.. .. .. .. .. .. .. ..
.. .. .. .. .. .. .. ..
.. .. .. .. .. .. .. ..

னு ஆரம்பிச்சார் ஏன்யா இந்த கொலவெறி.

ஸ்டேடஸ் மெசேஜ படிச்சா அனுபவியுங்க ஆராய்சி பண்ணாதீங்க (நன்றி வெட்டி)

அப்பாடா இன்னொரு போஸ்ட் தேறிடுச்சு

Posted in Labels: |

பஸ்டா (Pasta)

நம்ம ப்ரெண்ட் ஒருத்தவிங்ககூட சாட் பண்ணிகிட்டிருக்கப்ப என்னப்பா காலைல சாப்டியா என்ன சாப்புட்ட அப்டின்ன கேக்க போக அவிங்க ‘பஸ்டா’ அப்டின்னாங்க. அட எதோ கெட்டவார்த்தைல திட்றாப்டி போல அப்டின்னு நினைச்சிகிட்டு

என்ன? அப்டின்னேன் திரும்ப ‘பஸ்டா’ அப்டின்னாங்க. அப்டின்னா என்னன்னு கேக்க அது ஒரு ‘ஐட்டமாம்’ ஹலோ ஹலோ யாரங்கே இது சாபிடற ஐட்டமாம்பா. சரி அது எப்பிடி செய்யறதுன்னு விலாவாரியா கேட்டுகிட்டேன். முந்தா நாள் ‘பிக் பசார்’ ‘வீக் எண்ட் லைவ்’-க்கு போயிருக்கப்ப தேடி வாங்கிகிட்டு வந்துட்டேன்.

சாதாரணமா வீட்டுக்கு போன் போட்டு அம்மாகிட்ட பேசறப்ப நீ நல்லா இருக்கியா, நான் நல்லா இருக்கேன். மாத்திரை எல்லாம் டைம்க்கு சாப்பிடறயா , டாக்டர பாத்தியா இதுக்குமேல பேசறதெல்லாமே விசயமே இல்லாத பேச்சுக்கள். என்ன சமைச்ச? அது இதுன்னு.

சரி பேசறதுக்கு ஒரு மேட்டர் கிடைச்சிருக்கேன்னு நான் நாளைக்கு காலைல ‘பஸ்டா’ செய்ய போறேன்னு சொல்ல அம்மா அதுக்கு கூலா நான் சொல்ற மாதிரி செய்னு ரெசிபி சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க எனக்கு செம ஷாக்.

20 வருசமா கிராமத்துலயே இருந்தவங்க ஒரு 2 – 3 வருசமாதான் தர்மபுரி சிட்டில இருந்தாங்க. எவன் அவன் தர்மபுரி சிட்டியானு கேக்கிறது ‘மதுர’ க்கு அப்புறம் ‘தர்மபுரி’னுதான் படம் வந்திருக்கு ஞாபகம் இருக்கட்டும். இப்ப ஒரு 6 மாசமா சென்னைல இருக்காங்க அதுக்குள்ள இதெல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்காங்க. நாங்க அவங்ககூட இருந்தப்ப எல்லாம் இட்லி தோசை சாப்பாடு மீறி போனா சப்பாத்தி பூரி தவிர வேற எதும் செஞ்சதா ஞாபகம் இல்லை :(

பத்து வருசமா வெளில வேலை பாத்து ஹோட்டெல் ஹோட்டெலா சுத்திகிட்டிருக்க நான் இப்பதான் மொத தடவையா செஞ்சு சாப்பிட போறேன்.

Italian Pasta – செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் ‘பஸ்டா’வை உப்பு போட்டு வேக வைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். வேகவைக்கும் போது ஒரு ஸ்பூன் எண்ணை ஊற்றினால் பஸ்டா ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வருமாம்.

வாணலியில் கடுகு போட்டு வெங்காயம் வதக்கி அதில் தக்காளி சாஸ் அல்லது ‘பஸ்டா’ சாஸ் போட்டு கிளறி அதில் வேக வைத்து வடிகட்டிய ‘பஸ்டா’வை போட்டு கிளறினால் பஸ்டா ரெடியாம்.


எதுவுமே எழுதாம படத்தை போட்டே ஓட்டிடலாம் கல்யாணம் ஆனதும் ரிடையர்ட் ஆகிட்டேன்னு ஸ்டேட்மெண்ட் விட்டுடலாம்னு நெனைச்சிகிட்டிருந்தேன் இன்னைக்கு என்னமோ ஞானோதயம் இல்லடா எதாவது நாலு வரியாவது எழுது அப்டின்னு அதுதான் இந்த பதிவு.

Posted in Labels: , |

வீக் எண்ட் ஜொள்ளு

பொண்ணுங்களை சைட் அடிக்கலைனா
அவங்கள இன்சல்ட் பண்ற மாதிரியாம்
நான் சொல்லலை கூகிள் குழுமத்துல பேசிக்கிறாய்ங்க


படம் முழுசா தெரியலைனா பாப்பா மேல க்ளிக்குங்கோ






























Posted in Labels: |

மகளீர் தின வாழ்த்துக்கள்

பத்து மாதங்கள் எனை கருவில் சுமந்தபோதும் எனக்காக பத்தியம் இருந்த போதும் நான் உதைத்த உதைகளை வாங்கி செல்லமாய் என்னை தடவி கொடுத்த போதும் நான் வெளிவர நீ இன்னொரு பிறப்பாய் பிறந்த போதும் என்னை பெற்றெடுத்த இன்பத்தில் அளவிலாத மகிழ்ச்சி கொண்டு என்னை முத்தமிட்டபோதும் என்பசியாற்ற உன் ரத்தமதை பாலாக்கி ஊட்டுவித்த போதும் மழலையாய் நான் உளரும் போது கூடவே எனக்கான மொழியை பேசி என்னுடன் விளையாடிய அந்த கனங்களும், என்னை நடைபழக விரல் பிடித்து ரசிக்கும் போதும் தாய்மையையே உணர்த்தி எனக்காய் நீ வாழும் வாழ்க்கைக்கும் இன்றொரு நாள் மட்டுமல்ல..என்றுமே மகளிர் தினமொன்று இருக்குமே..இருப்பினும் உனக்கு இந்நாளில் வாழ்த்து சொல்லவே மகிழ்கிறேன்...

உலக மகளிர்களே தாய்மையென்னும் பேரால் சிறப்படைந்து நீவீர் சிறப்பான உலகமொன்றை உருவாக்க வாழ்த்துக்கள்......

வலைப்பூ உலக மற்றும் வலைப்பூவில் இல்லாத நண்பிகள், அக்காக்கள் , தங்கைகள், அத்தைகள், பாட்டிகள், அனைவருக்கும் மகளீர் தின வாழ்த்துக்கள்.

வீக் எண்ட் ஜொள்ளு

படம் முழுசா தெரியலைனா பாப்பா மேல க்ளிக்குங்கோ

















Posted in Labels: |

கரண்ட் பாலிடிக்ஸ்

முன்குறிப்பு:கிண்டல்/நகைச்சுவை உணர்வில்லாத யாரும் இந்தப் பதிவை படிக்க வேண்டாம். படிச்சி முடிச்சிங்கன்னா ரொம்ப யோசிக்காம போயிட்டே இருக்கனும்! ஆமா!

கிஷ்டன்: குர்ஜுனா! இணையச் சேவைகளை மதிக்கக் கற்றுக் கொள்! வலைப்பூக்களில் அனானிமஸாய்ப் புகுந்து வலைப்பதிவர்களை கடைமட்ட வார்த்தைகளில் பின்னூட்டமிட்டு திட்டத் தயங்காதே!

குர்ஜுனன்: ஆனால் கிஷ்டா! வலைப்பூ வைத்திருப்போர் என் அருமை நண்பர்கள், தமிழ்மணத்தை எனக்கு அறிமுகப்படுத்திய பெரியோர்கள், வல்லுனர்கள், அவர்களுக்கெல்லாம் எப்படி நான் இத்தகைய பின்னூட்டம் இடுவேன்.

கிஷ்டன்: குர்ஜுனா! இந்தக் கணத்தில் உனக்கு எதிரியோ நண்பனோ யாரும் இல்லை. அவர்கள் எல்லோரும் வலைப்பதிவர்கள். எனவே, இணைய தர்மத்தை கடைப்பிடிப்பாயாக! எல்லோருக்கும் பின்னூட்டம் இடு முடிந்தவரையில் திட்டு! அதுதான் உன் கர்மம்! அதுவே தர்மமும் ஆகும்.

குர்ஜுனன்: கிஷ்டா! இவையெல்லாம் பார்த்தால் இணைத்தின் இணைப்பையே துண்டித்துக் கொள்ளத் தோன்றுகிறது

கிஷ்டன்: குர்ஜுனா! வலைப்பூ என்னும் மாயையில் சிக்கிக் கொண்டுள்ளாய். இந்த மாய உலகில் நீயும் மாயை உன்னால் திட்டப் படுபவரும் மாயை. வலைப்பூக்கள் தோன்றும் முன்பிருந்தே இது போல ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வது குழுமங்களிலும் மற்ற வலைத்தளங்களிலும் இருந்துள்ளது. நீ செய்யாவிட்டாலும் இதை வேறொருவர் செய்வார். கீழ்த்தரமாய் பின்னூட்டம் இடுவது உன் கடமை! அதைச் செய்!

குர்ஜுனன்: ஆனால் கிஷ்டா!கிஷ்டன்:குர்ஜுனா! திட்டப் படுபவர் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப் படாதே! உனக்குத் தெரிந்த மூன்றாம் தர வார்த்தைகளையும் கேவலமான சிந்தனைகளையும் உலகுக்கு தெரியவைக்கத் தவறிவிடாதே!

குர்ஜுனன்: கிஷ்டா! கீழ்த்தரமாய் பின்னூட்டம் இட்டு, திட்டுவதற்கும் சாதி மத பேதங்களுக்கும் என்ன சம்பந்தம்.

கிஷ்டன்: குர்ஜுனா! இரண்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உனக்கும் இன்னொருவருக்கும் மனக்கசப்பு என்றால் முதலில் சாதியைக் கொண்டு திட்டவேண்டும். அப்போது தான் சாதி சார்பாக இன்னும் சில பேர் திட்டுவதற்காக அணி திரள்வார்கள். இப்படியாக ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் போது பல விதமான மூன்றாம் தர வார்த்தைகள் வலைப்பூ உலகின் வருகையாளருக்கு அறிமுகமாகும். இதனால் தமிழ் மொழி அபரிமிதமான வளர்ச்சியடையும்.

குர்ஜுனன்: கிஷ்டா! மூன்றாம் தர வார்த்தைகள் என்பதை எப்படி அடையாளம் கண்டு கொள்வது.கிஷ்டன்: இத்தகைய வார்த்தைகள் உடனடியாய் எதிராளியைக் காயப் படுத்த வல்லவை. இந்த வார்த்தைகளால் மனம் பாதிக்கப் பட்டவர்களை வழக்காடு மன்றம், வழக்கறிஞர் என்றெல்லாம் சிந்திக்க வைக்குமளவுக்கு கொடூரமானவை.

குர்ஜுனன்: கிஷ்டா! திட்டுவோருக்கு இதனால் என்ன பலன்.

கிஷ்டன்: குர்ஜுனா! எல்லாம் மாயை! திட்டும் போது எழுவது ஒரு அல்ப சந்தோசம். சாதியால், மதத்தினால், இன்ன பிற காரணங்களால் வலைப்பூவுலகம் பிளவுற்று, தரமான படைப்புகள் குறைந்திடும் போது இந்த அல்ப சந்தோசம் அதிகரிக்கும். இந்தத் திட்டுக்கள் சண்டைகள் தொடர்பான பதிவுகளைத் தேடித்தேடிப் படிக்கையில் அது பலமடங்கு பெருகி பிறந்த பலனை அடைந்த இன்பம் கிடைக்கும். ஆனால் இவை எல்லாம் மாயை என்பதை யாரும் அறியார். உனது கடமை யாரையேனும் திட்டிப் பின்னூட்டம் இடுவது! இதை எப்போதும் உன் மனதில் வை!

குர்ஜுனன்:கிஷ்டா!திட்டும் போது என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை என்றால் என்ன செய்ய?

கிஷ்டன்: இந்த வலைப்பூ உலகம் என்னும் மாயையில் திட்டுவது எப்படி உன் கடமையோ அது போலவே உன்னோடு அணி சேர்வது சிலரது கடமை.உன் எதிரணியில் சேர்வது இன்னும் சிலரின் கடமை. எனவே பயம் ஏதும் கொள்ளாமல் உன் கடமையைச் செய்!

குர்ஜுனன்: கிஷ்டா! அறியாமையில் உழன்று கொண்டிருந்த என் கண்களைத் திறந்திட்டாய். வணங்குகிறேன்.(கிஷ்டனின் உபதேசத்தில் மனம் தெளிவடைந்த(!) குர்ஜுணன் அடுத்த சாதிச் சண்டைக்கு பின்னூட்டமிட செல்கிறான்)

பின் குறிப்பு: நன்றி கோபி அவரின் 2005ம் வருட இந்த பதிவு இப்போதைய தமிழ்மண நிகழ்வுகளை பிரதிபலிப்பதால ஒரு மீள்பதிவு